Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் ஆன்லைன் பரிவர்த்தனை… அக்டோபர் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்!

ஆன்லைன் பரிவர்த்தனை

அக்டோபர் 1-ம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள, முதலீட்டாளரின் போன் நம்பர் செயல்பாட்டில் இருப்பது மிக முக்கியமாகும்.

மியூச்சுவல் ஃபண்ட் ஆன்லைன் பரிவர்த்தனை… அக்டோபர் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள்!

அக்டோபர் 1-ம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள, முதலீட்டாளரின் போன் நம்பர் செயல்பாட்டில் இருப்பது மிக முக்கியமாகும்.

Published:Updated:
ஆன்லைன் பரிவர்த்தனை

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, அக்டோபர் 1-ம் தேதி முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்ள, முதலீட்டாளரின் போன் நம்பர் செயல்பாட்டில் இருப்பது மிக முக்கியமாகும். அதேபோல், அவரின் இ-மெயில் ஐடியும் செயல்பாட்டில் இருப்பது அவசியமாகும். 

Mutual fund (Representational Image
Mutual fund (Representational Image

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் கணக்கோடு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள், நிதி ஆலோசகர்களின் தொலைபேசி எண்கள் இணைக்கப்பட்டிருந்தால், அது செப்டம்பர் 30-ம் தேதியுடன் நீக்கப்படுகிறது. இதற்கான வேலையை ஆர்.டி.ஏ என்கிற மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டாளர்களுக்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

முதலீட்டாளர்களும், அவர்களின் முதலீட்டுக் கணக்குடன் (ஃபோலியோ) தங்களின் செல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரிதான் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும். அப்படி இணைக்கப்படவில்லை என்றால் காகித படிவங்களை நிரப்பிக் கொடுத்துதான் பணம் எடுக்கவோ புதிய முதலீட்டையோ மேற்கொள்ள முடியும். இந்தப் புதிய விதிமுறை தற்போதைய நிலையில் டீமேட் கணக்குகளுக்குப் பொருந்தாது.