சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வேட்டி கட்டுவது அவமானம் இல்லை... அது நம் அடையாளம்!

வேட்டி கட்டுவது அவமானம் இல்லை... அது நம் அடையாளம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டி கட்டுவது அவமானம் இல்லை... அது நம் அடையாளம்!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது விழாவில் பெருமிதம்!

‘`வாசகர்களின் பொருளாதாரத் திட்டமிடலில் தோள் கொடுத்துக்கொண்டிருக்கும் நாணயம் விகடனுக்கு இது 15-வது ஆண்டு. அதன் பிசினஸ் ஸ்டார் விருதுகளுக்கு இது மூன்றாவது ஆண்டு” என்ற அறிமுகத்தோடு அனைவரையும் வரவேற்றார் ஆனந்த விகடன் ஆசிரியரும், விகடன் குழும நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன். விழா, தமிழகத்தின் மிகச்சிறந்த தொழிலதிபர்கள், இளம் தொழில்முனைவோர் உள்ளிட்ட பலரின் வருகையோடு சென்னையில் டிசம்பர் 5-ம் தேதி உற்சாகமாக நடந்தது. கேம்ஸ் (CAMS) நிறுவனத்தின் நிறுவனர் வி.சங்கர் சிறப்புரை ஆற்றினார். காணொலி மூலம் விருது விழாவை வாழ்த்தினார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

‘ஸ்டார்ட்அப் சாம்பியன்’ விருது ‘ஆரஞ்ச்ஸ்கேப்’ நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் சம்பந்தத்துக்கு வழங்கப்பட்டது. “ஒரு தொழில்முனைவோரின் வெற்றி, மாராத்தான் போட்டியில் வெல்லும் தனிநபர் முயற்சி போன்றதல்ல; ஃபுட் பால் போட்டியைப்போல ஒரு குழுவின் உழைப்பால்தான் சாத்தியமாவது’’ என்றார் சுரேஷ் சம்பந்தம்.

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது விழாவில் பெருமிதம்!
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது விழாவில் பெருமிதம்!

‘பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்டிடியூஷன்)’ விருதை, ‘பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டு’க்கு டி.வி.எஸ் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.தினேஷ் வழங்கினார். ‘சோஷியல் கான்ஷியஸ்னெஸ் ஆந்த்ரப்ரனார் அவார்ட்’ ‘வில்குரோ’ நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.

‘பீனிக்ஸ் ஆந்த்ரப்ரனார்’ விருதைகுரூம் இந்தியா சலூன் & ஸ்பா பிரைவேட் லிமிடெட்டின் கோ ஃபவுண்டர் அண்ட் ஃபவுண்டர் சி.கே.குமரவேல், வீணா குமரவேல் தம்பதியினர் பெற்றுக்கொண்டு, தோல்வியை எதிர்கொள்ள மூன்று டிப்ஸ்களைத் தந்தார்கள்.

‘பிசினஸ் இன்னோவேஷன்’ விருதை ராம்ராஜ் காட்டனின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.நாகராஜனுக்கு, தமிழ்நாடு சி.ஐ.ஐ-யின் சேர்மன், டாஃபே-யின் தலைவர் & சி.எஃப்.ஓ எஸ்.சந்திரமோகன் வழங்கினார். ‘‘தமிழில் பேசினாலும் வேட்டி கட்டினாலும் அவமானம்னு நினைக்கிறாங்க. அது தப்பு. அது நம் அடையாளம்; கலாசாரம்; பாரம்பர்யம்’’ என்றார் நாகராஜன்.

‘ரைஸிங் ஸ்டார்’ விருது ‘மில்க்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெடின்’ நிர்வாக இயக்குநர் சதிஷ்குமாருக்கு அளிக்கப்பட்டது. ‘‘குழந்தைகள்மீது பெற்றோர்கள் நம்பிக்கை வைத்து, சுதந்திரத்தை அளிப்பதே அவர்களை ஜெயிக்க வைக்கும்” என்றார் அவர்.

வேட்டி கட்டுவது அவமானம் இல்லை... அது நம் அடையாளம்!

‘பிசினஸ் மென்ட்டார்’ விருது இன்டெலக்ட் டிசைன் எரினாவின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் ஜெயினுக்கும், ‘செல்ஃப் மேடு ஆந்த்ரப்ரனார்’ விருது `பொன் ப்யூர்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.பொன்னுசுவாமிக்கும் அளிக்கப்பட்டது. ரூ.36,000-த்தில் தொழில் தொடங்கி, தற்போது ரூ.2,500 கோடிக்கு உயர்ந்த வெற்றிக்கதையைப் பகிர்ந்துகொண்டார் பொன்னுசுவாமி.

இறுதியாக, ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட்’ விருது முருகப்பா குரூப் சேர்மன் எம்.எம்.முருகப்பனுக்கு அளிக்கப்பட்டது. அந்த விருதை அவர் சார்பாக முருகப்பா குழுமத்தின் ஹெச்.ஆர் டைரக்டர் ரமேஷ் கே.பி.மேனன் பெற்றுக்கொண்டு, “120 வருட பாரம்பர்யமிக்க முருகப்பா குழுமத்தின் சேர்மனுக்கு விகடன் விருதளித்தமைக்கு நன்றி” என்றார்.

விழாவின் தொடக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் பற்றிய உரையாடல் நடந்தது. இதில் எஸ்.பி.ஆர் குழும நிறுவனத்தின் இயக்குநர் நவீன் ரங்கா மற்றும் பிரபல ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கலந்துகொண்டனர். நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றும் தொழிலதிபர்களுக்கு மதிப்பளிக்கும் விழாவில் கலந்துகொண்ட இளம் தொழில்முனைவோர்களுக்கு விழா புதிய நம்பிக்கையை அளித்தது.

வேட்டி கட்டுவது அவமானம் இல்லை... அது நம் அடையாளம்!