Published:Updated:

ஸ்டார்ட்அப் - பேசிக்... நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

ஸ்டார்ட்அப் - பேசிக்
ஸ்டார்ட்அப் - பேசிக்

நாணயம் விகடன் ‘ஸ்டார்ட் அப் - பேசிக்’ என்கிற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்த பிறகு, இந்த நிறுவனத்தை எங்கே பதிவு செய்யவேண்டும், அரசு அனுமதிகளை எப்படிப் பெறவேண்டும் என்பது அடுத்தடுத்து எழும் கேள்விகள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கினால், வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்குமா, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருக்கும் வென்ச்சர் ஃபண்டிங் நிறுவனங்களிடமிருந்து பல மில்லியன் டாலர்களை முதலீடாகப் பெறுகிறதே! அதுமாதிரி எல்லாம் நமக்கும் கிடைக்குமா என்று கேட்கிறவர்கள் பலரும் உண்டு. ஸ்டார்ட்அப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்வதுடன், மேற்சொன்ன சந்தேகங்கள் பலவற்றுக்கும் பதில்கள் இந்த வகுப்பில் உங்களுக்குக் கிடைக்கும்.

பயிற்சி வகுப்பு: ஜூன் 22-ம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ரூ.400 கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 21 மாலை 6 மணிக்குப் பதிவு நிறைவடையும்.

பயிற்சியாளர்:

‘ஸ்டார்ட்அப் - பேசிக்’ பயிற்சி வகுப்பை நடத்தப்போகிறவர் சென்னை ஐ.ஐ.டியின் டிபார்ட்மென்ட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் பேராசிரியர் எ.தில்லை ராஜன். YNOS venture engine என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

பேராசிரியர் எ.தில்லை ராஜன்
பேராசிரியர் எ.தில்லை ராஜன்

எம்.பி.ஏ மாணவர்களுக்கு நிர்வாகம் தொடர்பான கல்வியை அளிப்பதில் பல ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்துவரும் இவர், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறித்து நாணயம் விகடன் ஏற்கெனவே நடத்திய பயிற்சி வகுப்புகளையும் நடத்தியிருக்கிறார்.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

இந்தப் பயிற்சி வகுப்பில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சுயமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள், வீட்டிலிருந்தே தொழில் செய்ய நினைக்கும் பெண்கள், தற்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிதாகத் தொழில் வாய்ப்பினைத் தேடுபவர்கள் என யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.

முக்கியக் குறிப்புகள்:

அன்பார்ந்த வாசகர்களே!

நாணயம் விகடன் நடத்தும் ‘ஸ்டார்ட்அப் - பேசிக்’ என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

Webinar
Webinar

* Zoom டவுன்லோடு செய்யுங்கள்: (For Laptop)

வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

https://zoom.us/download

* ஆண்ட்ராய்டு போனுக்கு...

https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

* ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

Webinar
Webinar

* ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினார் அட்மின், உங்கள் வருகையைச் சரி பார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவீர்கள்.

* ‘இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்’ - ரொம்ப முக்கியம்!

வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

* நேரத்துக்கு வாங்க...

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிட வேண்டும்.

* மைக் & வீடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவைத் தயவுகூர்ந்து மியூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாக சிறப்புப் பேச்சாளரின் கருத்தைக் கேட்க முடியும்.

Webinar
Webinar

* உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

* No Refund

ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வரத் தவறினால், செலுத்திய கட்டணம் திருப்பித் தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜூன் 21 மாலை 6 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்த... இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு