Published:Updated:

பிட்ஸ்

தங்கம் இறக்குமதி
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் இறக்குமதி

கொரோனா காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பலரும் எடுக்கிறார்களே!

பிட்ஸ்

கொரோனா காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பலரும் எடுக்கிறார்களே!

Published:Updated:
தங்கம் இறக்குமதி
பிரீமியம் ஸ்டோரி
தங்கம் இறக்குமதி

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கம்பெனிகள்..!

கொரோனா தொற்றுநோய் உலக அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், தொழில்துறையில் இந்த நோய்த் தொற்று ஏற்படுத்திய மாற்றங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இந்த நோய்த் தொற்று நம் நாட்டில் வந்த பிறகு ஏறக்குறைய 7.4 லட்சம் கம்பெனிகள் மூடப்பட்டிருப்பதாகவும், கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று சுமார் 12.5 லட்சம் கம்பெனிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் வர்த்தக விவகாரத்துறையின் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் நம் நாட்டில் 10,954 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

`ஒரு நிறுவனம் ஒவ்வொரு காலாண்டு முடிந்த பிறகும் லாப, நஷ்டக் கணக்கைத் தாக்கல் செய்வதை வைத்து, அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறதா, இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் முடிய இந்தியா முழுக்கப் பல நகரங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்ததால், பலரும் வியாபாரம் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அப்படியே கொஞ்சநஞ்சம் வியாபாரம் செய்திருந்தாலும், லாப நஷ்டக் கணக்கைக் காட்டும் அளவுக்கு வியாபாரம் நடக்காமல் போயிருக்கலாம். அதனால், ரிப்போர்ட்டைத் தாக்கல் செய்யாமல் போயிருந்திருக்கலாம். எனவே, இன்னும் சில மாதங்கள் கழிந்த பிறகே, செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியும்’ என்கிறார்கள் தொழில்துறை சார்ந்தவர்கள்.

கொரோனா காலத்தில் எல்லாப் புள்ளிவிவரங்களுமே முன்னே பின்னேதானே இருக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகுல் பஜாஜ் போகிறார்; சஞ்சீவ் பஜாஜ் வருகிறார்..!

பஜாஜ் நிறுவனத்தின் ஒரு முக்கிய அங்கம் பஜாஜ் ஃபைனான்ஸ். 1987-ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் சிறப்பாக இயங்கி வந்ததற்கு முக்கியக் காரணம், இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திவந்த ராகுல் பஜாஜ்தான். இவருக்கு இப்போது 82 வயதாகிவிட்டது. எனவே, பஜாஜ் ஃபைனான்ஸ் தலைமைப் பொறுப்பிலிருந்து இறங்கிக்கொண்டு, தன் மகன் சஞ்சீவ் பஜாஜ் தலைமையேற்று நடத்த முடிவு செய்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்த மாற்றம் நடக்கவிருக்கிறது. இனி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவராக சஞ்சீவ் இருப்பார். என்றாலும், ராகுல் பஜாஜ் ஓர் இயக்குநராகத் தொடர்ந்து நீடிப்பார்.

பிட்ஸ்

காலத்துக்கேற்ப தலைமை மாறினால்தானே வளர்ச்சி காண முடியும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.பி.ஓ வருகிறது பாலிசி பஜார் நிறுவனம்!

ஆன்லைன் இன்ஷூரன்ஸ் நிறுவனமான `பாலிசி பஜார்’ 2021, செப்டம்பரில் ஐ.பி.ஓ வருவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் 250 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டைத் திரட்டியது. இதன் இப்போதைய மதிப்பு 2 பில்லியன் டாலர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், 2021-ல் இந்த நிறுவனத்தின் மதிப்பு 3.5 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிட்ஸ்

கொரோனா காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பலரும் எடுக்கிறார்களே!

தங்கம் இறக்குமதி 100 டன்னுக்கும் கீழே!

நீண்டகாலத்தில் தங்கம் மூலம் கிடைக்கும் லாபம் மிக மிகக் குறைவு என்றாலும், அதில் மட்டுமே எல்லாப் பணத்தையும் போடப் பலரும் நினைக்கிறார்கள். இந்த நிலையில், தங்கம் விலை இப்போது மிகவும் அதிகமாக இருப்பதால், தங்கம் வாங்குவது கடுமையாகக் குறைந்திருக்கிறது. இதனால் வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவதும் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை வெறும் 90 டன் மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அதிகபட்சமாக 350 டன் மட்டுமே தங்கம் இறக்குமதி ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ஸ்

தங்கம் தவிர, வேறு முதலீடுகளையும் பரிசீலிக்கத் தொடங்கலாமே!

வீட்டுக்கு வரும் பெட்ரோல், டீசல்..!

கொரோனா காலத்தில் பல நகரங்களில் ஊரடங்கு இருப்பதால், வாகனங்களை எடுத்து வெளியே வர முடியாத நிலையே பலருக்கும் இருக்கிறது. இதனால் பெட்ரோல், டீசல் விற்பனை கடுமையாகக் குறைந்திருக்கிறது. இந்த நிலையில், இவற்றின் விற்பனையை அதிகரிக்க பெட்ரோல், டீசல் வேண்டும் எனக் கேட்டால், இனி வீட்டுக்குக் கொண்டுவந்து தர ஏற்பாடு செய்துவருகின்றன ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள். இந்த வேலையைச் செய்ய விண்ணப்பங்களை ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இதன் மூலம் ரூ.9,000 கோடி விற்பனையைப் பெருக்க முடியுமாம்!

பிட்ஸ்

இளைஞர்கள் இந்தப் புதிய தொழில் வாய்ப்பை கவனிக்கலாமே!

ஒரே நாளில் $13 பில்லியன் குவித்த அமேஸான் பெஜோஸ்..!

அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பொருள்களை விற்கும் நிறுவனங்களுக்கான வரவேற்பு உயர்ந்துவருவதைத் தொடர்ந்து அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஜோஸின் சொத்து மதிப்பு கடந்த திங்கள்கிழமை (20-ம் தேதி) அன்று மட்டும் 13 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.97,500 கோடி) அளவுக்கு உயர்ந்தது.

பிட்ஸ்

2020-ம் ஆண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு சுமார் 74 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.5.55 லட்சம் கோடி) உயர்ந்திருக்கிறது.

பெஜோஸின் காட்டில் லாப மழைதான்!

வேலைக்குச் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனோ ஏற்பட்ட பிறகு, கடந்த ஏப்ரல் மாதத்தில் லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்தது நம் எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில், மே மாதம் தொடங்கி மீண்டும் புதிதாகப் பலரும் வேலைக்குச் சேர்ந்துவருவதை இ.பி.எஃப் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் எடுத்துச் சொல்கின்றன. கடந்த மே மாதத்தில் மட்டும் 3.18 லட்சம் பேர் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பதாக இ.பி.எஃப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

பிட்ஸ்

இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்தால் மகிழ்ச்சிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism