Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : பாதகங்களை சாதகங்களாக்கும் வழிமுறைகள்..!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

முன்னேற்றத்துக்கு உதவும் அம்சங்கள்!

நாணயம் புக் ஷெல்ஃப் : பாதகங்களை சாதகங்களாக்கும் வழிமுறைகள்..!

முன்னேற்றத்துக்கு உதவும் அம்சங்கள்!

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்
சிலர் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல் வந்தாலும் மிகச் சுலபமாக எதிர்கொண்டு ஜெயித்துவிடுவார்கள்.

எப்படி அவர்கள் இதைச் செய்கிறார்கள் என்பதைச் சொல்கிறது ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் லாரா ஹுவாங் (Laura Huang) எழுதிய ‘எட்ஜ்’ (Edge) என்ற புத்தகம்.

எலான் மஸ்க் சந்திப்பு!

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க்கை ஒரு முறை சந்தித்தாராம். ஏறக்குறைய 20.2 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடைய எலான் மஸ்க், அவர் படித்த புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைக்கழகத்திடமே ‘‘வருடத்துக்கு ஒரு முறைக்குமேல் என்னை அழைக்காதீர்கள்’’ என்று சொல்லும் அளவுக்கு பிஸியாக இருப்பவர். அவரை இந்தப் பேராசிரியர் சந்தித்தது சுவாரஸ்யமான சம்பவம்.

நாணயம்  புக் ஷெல்ஃப் : பாதகங்களை சாதகங்களாக்கும் வழிமுறைகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரைச் சந்தித்தவுடன், ‘‘எங்களுக்கு உங்களிடமிருந்து சில விஷயங்கள் வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார். அவரோ ‘‘நோ’’ என்ற வார்த்தையைச் சொல்லிட்டு, ‘‘நீங்கள் வெளியே போகலாம்’’ என்று சொன்னாராம். அந்தச் சூழலில் எரிச்சலுடன் அறையைவிட்டுக் கிளம்புவதற்கு பதிலாக, ‘‘நாங்கள் கல்வியாளர்கள். உங்களிடம் எதையும் விற்பனை செய்யவோ, ஆதரவு கேட்கவோ, பண உதவி பெறவோ வரவில்லை. எங்களுக்கு உங்கள் பணம் தேவையில்லை’’ என்று சிரித்தபடி லாரா சொல்ல, அதற்குப் பிறகு லாரா செய்துவரும் ஆராய்ச்சி பற்றி நீண்ட நேரம் பேசினாராம் மஸ்க்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிளம்பும்போது, எலான் மஸ்க் ஒரு விசிட்டிங் கார்டைத் தந்து, ‘‘இவரைப் பாருங்கள். இவரால் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவிகரமான தகவல்களைத் தர முடியும்’’ என்று சிரித்தபடி சொல்லி அனுப்பி வைத்தாராம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

‘‘சந்திக்கவே வாய்ப்பில்லாத ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்த பிறகு, அவர் வெளியே போகச் சொன்னவுடன் லாகவமாகச் செயல்படாமல் போயிருந்தால் அந்தச் சந்திப்பு என்பது நடந்திருக்கவே இருக்காது இல்லையா... அந்த லாகவம்தான் அந்த உலகத்தின் பெரிய பணக்காரரை என்னையும் ஓர் ஆள் என்று மதிக்க வைத்தது. இது போன்ற லாகவங்களின் அவசியத்தையும், அந்த லாகவத்தைக் கைவரப் பெறும் திறனை எப்படிப் பெறுவது, எப்படி வளர்த்தெடுப்பது என்பதையும் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்று ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

லாகவம் என்பது..?

‘‘லாகவம் என்பது மற்றவர்களிடம் இல்லாத ஒரு தனித்திறமையை நாம் பெற்றிருப்பது. சரியோ, தவறோ மற்றவர்கள் நம்மைப் பற்றி ஒரு பார்வையைக் கொண்டிருப்பார்கள். அந்தப் பார்வை மிகுந்த சக்தி வாய்ந்தது. அந்தப் பார்வையின் சக்தியையும் வீரியத்தையும் முழுமையாகப் புரிந்துகொண்டு, அதை நமக்கு ஆதரவாக இருக்குமாறு மாற்றும் திறனைக் கொண்டிருப்பதே லாகவம்’’ என்கிறார் ஆசிரியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறவியிலேயே வரும்!

இது, சிலருக்குப் பிறவியிலேயே கைவந்த கலையாக இருக்கிறது. இதனாலேயே பலரும் வலியச் சென்று அவர்களுடைய முன்னேற்றத்துக்கு உதவும் சூழலில் அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். ‘‘இல்லை இல்லை, என் முன்னேற்றம் என்பது என்னால் வந்தது’’ என்று சொல்லும் ஆளா நீங்கள்... ஓ.கே. இந்த லாகவத்தைப் பெறுவதன் மூலம் இன்னமும் அதிக முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும் என்று நான் அடித்துச் சொல்வேன். அவ்வளவுதான்’’ என்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப் : பாதகங்களை சாதகங்களாக்கும் வழிமுறைகள்..!

“எந்த நிறுவனமாக இருந்தாலும் (வேலைக்கோ, வியாபாரத்துக்கோ) கதவுகளைத் திறந்து நுழைவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டாவதாக, நீங்கள் அந்த இடத்துக்குள் நுழைந்த பிறகு, அந்த நிறுவனத்தினுள் உங்களுக்கான வாய்ப்புகள் நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக இருக்கும் என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். இந்த இரண்டு விஷயங்களையுமே நம்மில் பலரும் குறைத்து மதிப்பிடவே செய்கிறோம். உதாரணமாக, இந்த லாகவத்தைக் கைவந்த கலையாகக் கொண்டிருக்கும் நபர்தான் ‘இந்த நிறுவனத்துக்குப் பணிக்கு வருவதன் மூலம் என்னென்ன அனுகூலங்களைக் கொண்டு வருவேன்’ என்பதைத் தெளிவுபடுத்துவதில் வல்லவராக இருப்பார்” என்று சொல்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

‘நம்ம தொழிலுக்கெல்லாம் முதலீடு கிடைக்காது’ என்ற எண்ணம்கொண்ட தொழில்முனைவோர்கள் மத்தியிலும், `என்னையெல்லாம் இந்த நிறுவனத்தில் ஒரு ஆளாகக் கருதி, பதவி உயர்வெல்லாம் கொடுப்பார்களா என்ன...’ என்ற எண்ணம் கொண்டிருந்த பணியாளர்கள் மத்தியிலும் ஆய்வுகள் செய்து லாகவம் குறித்த பல நுணுக்கமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

வெற்றி தரும் லாகவம்!

``வெற்றி என்பது கடுமையான உழைப்புடன் கூடிய லாகவத்தால் மட்டுமே கிடைக்கும்.

எல்லாம் சரியாக இருந்தும், உழைப்பைக் கொட்டியும் சில சமயம் வெற்றிபெற முடியாமல் போவது இந்த லாகவம் என்பது எள்ளளவும் இல்லாத காரணத்தால்தான்.

‘அப்படியென்றால் இன்றைய நிறுவனங்கள் நிர்வாகம் செய்யப்படும் விதம் சரியில்லையா?’ என்றெல்லாம் நீங்கள் கொதிப்படைய வேண்டாம். என்னதான் நிறுவனத்தின் சட்டதிட்டங் கள் திறமைக்கு வாய்ப்பளிப் பதாக இருந்தாலும், எந்தவொரு கட்டமைப்பி லும் சிலர் பவர்ஃபுல்லாக உருவெடுப்பதைத் தவிர்க் கவே முடியாது. அதனால் எல்லாவற்றையும் சீர் தூக்கிப் பார்த்து சிறப்பாகச் செயல்படுத்துவார்கள் என நாம் நம்பவும் கூடாது.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

இதனால்தான் லாகவம் என்பது அவசியமான ஒன்றாகிறது. அடுத்தவர்கள் நம்மீது கொண்டிருக்கும் பார்வை (எண்ணத்தை) நாம் நம்முடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டால் நம்மால் நமக்கான சலுகைகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது தான் உலக நடைமுறை. ஒரு பணியாளராகக் கடின உழைப்பு முன்னேற்றம் தரும் என்பது உண்மையான ஒன்றாக இருந்தாலும், இதில் லாகவம் என்பது எப்போது, எங்கு, எதற்குக் கடின உழைப்பைத் தர வேண்டும் என்று தெரிந்துவைத்துக்கொள்வதில் இருக்கிறது.

லாகவத்தை அதிகரிக்கும் 12 நியமங்கள்!

நீங்கள் செய்யும் வேலையில் உண்மையாகவே மதிப்புக்கூட்டலைச் செய்துவந்தாலும்கூட அது மற்றவர்களால் (சரியான நபர்களால்) உணரப்படும் வகையில் இருக்க வேண்டும். மற்றவர்கள் எப்படி உங்களைப் பார்ப்பார்கள் என்று புரிந்துகொண்டால் மட்டும்தான், உங்களை எப்படி அவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதே பார்வையில் உங்களைப் பார்க்கவைக்க முடியும்’’ என்று இதற்கு உதவும் 12 நியமங்களைக் குறிப்பிட்டு லாகவம் பெறும் வழிகளைச் சொல்லும் ஆசிரியர், ‘இதெல்லாம் எனக்கு ஒத்தே வராது; நான் ஏற்கெனவே நிறுவனத்தினுள் எக்கச்சக்கமான எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்துள்ளேன்’ என்று சொல்பவர்களுக்கும் வழிகளைச் சொல்கிறார். ``இது போன்ற நபர்கள் தங்களுடைய வாழ்க்கையை இன்று முதல் மாற்றிக்கொள்ள ஒரே ஒரு முடிவை மட்டுமே எடுக்க வேண்டும் (மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முடிவை)’’ என்று சொல்லி ஒருவர் சிக்கிக் கொண்டிருக்கும் சிக்கல் களையும் அவருக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் வழிமுறைகளையும் சொல்கிறார்.

வெற்றிபெறத் துடிக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒரு முறை கட்டாயம் படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism