Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : 100% திறன்... உதவிக்கு வரும் உத்திகள்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் ஷெல்ஃப்

வெற்றிக்கான வழிமுறைகள்..!

செய்யும் தொழிலாகட்டும், வேலையாகட்டும் அதைச் சுறுசுறுப்பாகச் செய்து வெற்றி அடைவது எப்படி என்பதைச் சொல்லித்தரும் ‘100% மீ’ (100% Me) என்ற புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

‘தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் பிழைத்துவாழ்தல், சவால்கள் (Survival Show) நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் முன்பின் தெரியாத நாட்டில் (மொழிகூடத் தெரியாத) விடப்பட்டுவிடுவார். அங்கே பேசிப் பிழைத்து வாழ வேண்டும் என்பதுதான் நிகழ்ச்சியின் நோக்கமே. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் உடல்மொழி (Body Language) மூலமாகவே அவர்கள் சொல்ல வேண்டிய விஷயத்தை மற்றவர்களிடம் சொல்ல முயல்வார்கள். இதனால்தான் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் கம்யூனிகேஷன் எனும் ‘பேச்சை’க் குறித்துப் பேசியிருக்கிறேன்’’ என்று ஆரம்பிக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்ன பிடிக்கும்?

“முதலாவதாக, ஒருவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டால், அதை வைத்தே பேச்சுக் கொடுக்கலாம். இரண்டாவதாக, மற்றவர்களின் தேவையும் எதிர்பார்ப்பும் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு பேசுவது நல்ல பல பலன்களை அளிக்கும். நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பணியாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே நான் ஒரு பாலமாகவே தொடர்ந்து இருந்திருக்கிறேன். ‘எதிரும் புதிருமாக இருக்கும் இந்த இருதரப்புக்கும் எப்படிப் பாலமாக இருந்தீர்கள்’ என்று நீங்கள் வியக்கலாம். அன்றாடம் எட்டு மணி நேரத்துக்கு மேல் நம் சக பணியாளர்களுடன் செலவிடுகிறோம். அந்த அளவுக்கான நேரம் அவர்களைப் புரிந்துகொள்ளப் போதுமானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாஸை ஏன் வெறுக்கிறார்கள்?

பாஸ்களைப் பற்றிக் குறை சொல்லும் பணியாளர்களைச் (ஏறக்குறைய எல்லோருமே!) சுலபமாக கண்டறியப் பெரிய டெக்னிக்குகள் எதுவும் தேவை இல்லை. அவர்கள் சொல்வதைக் காது கொடுத்து தெளிவாகக் கேட்பதே போதுமானது. அவர்கள் ஏன் நிறுவனத்தின் மீதும், பாஸின் மீதும் வெறுப்பாக இருக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை தெரியும். அது, பாஸால் சொல்லப்படும் விஷயங்கள் பெரும்பாலான சமயங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதுதான் அல்லது சொல்லப்படும் தகவல்கள் தவறாகச் சென்றடையும்படி (Miscommunication) சொல்லப் படுவதுதான். இதைப் புரிந்துகொண்ட நான் இந்தத் தொடர்பு இடைவெளியைப் பூர்த்தி செய்யும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். இரண்டு பக்கமும் தெளிவுபடுத்தும் பணியைச் சிறப்பாகச் செய்ய ஆரம்பித்தவுடனேயே அலுவலகத்திலுள்ள எல்லாக் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்பட ஆரம்பித்தன’’ என்று தன் அனுபவத்தைச் சொல்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

சம்பளத்துக்காக வேலை செய்பவர்கள்..!

‘‘பணியிடத்துக்கு வரும் நபர்களில் சிலர் சம்பளம் தருகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக வருகின்றனர். `என் வாழ்க்கைக்குச் சம்பளம் தேவை; அதற்கு இந்த வேலை தேவை...’ என்ற எண்ணம்தான் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். இந்த மனநிலையுடன் இருப்பவர்களால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது. அதே சமயம், `நிறுவனம் அமைத்துத் தரும் (அது செய்யும் முதலீடுகளால் இடம், இயந்திரம், இயங்குதளம், பிராண்ட் உருவாக்குதல் போன்றவற்றை உருவாக்கி) களத்தில் நாம் பயிற்சி பெற்று வல்லுநராக உருவாகிறோம்’ என்ற எண்ணத்துடன் செயல்பட ஆரம்பித்தால், நம்மால் சிறந்த செயல்திறனுடன் செயல்பட முடியும். இதனால் தனிமனிதன் மற்றும் நிறுவனம் என்ற இருவருக்குமே அளப்பரிய பலன் கிடைக்கும். பணியிடமும் பணியாளர்களும் கூட்டணியாகச் செயல்பட்டால் கிடைக்கும் பலன்தான் சிறந்த பலனாக இருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

மென்திறன்களே உயர்த்தும்!

“பணியாளர்களுடன் இணைந்து செயல்படுவது மட்டுமே குழு மனப்பான்மை (Team) என்றில்லை. உங்கள் குழுவில் நிறுவனத்தையும் ஓர் அங்கமாக இணைத்துக் கொள்ளும்போதே மிகப்பெரிய வெற்றி அடைவது என்பது சாத்தியம். நீங்கள் உங்களுடைய திடமான திறன்களுக்காகவே (Hard Skills) பணியில் அமர்த்தப்படுகிறீர்கள். உதாரணமாக, உங்களுடைய கணக்குத்திறன், தொழில்நுட்பத்திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவைதான் உங்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்யும்போது எடை போடப்படும் விஷயங்களாக இருக்கின்றன. ஆனால், பணிக்குச் சேர்ந்த பிறகு அங்கே உங்களின் திறமையைப் பரிமளிக்கச் செய்யவும், பணியில் நிலைத்திருக்கச் செய்யவும் உதவுவது உங்களுடைய மென்திறன்கள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதாரணமாக பேசும்கலை, பச்சாதாபப்படுதல் (Empathy), முயற்சிகளை முன்னெடுத்தல், அணுகுமுறை, பணிவு, நம்பிக்கை (Confidence), எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருத்தல் (Positivity) போன்றவையே, `நீங்கள் ஒரு நல்ல பணியாளர்’ என்று அடையாளம் காட்டவும், பதவி உயர்வைப் பெறவும், பணியைத் தொடர்ந்து வகிக்கவும் உதவுவதாக இருக்கின்றன. ‘எனக்குக் கொடுத்த வேலையை நான் சிறப்பாகச் செய்வேன்’ என்பது பணிவான நம்பிக்கை. ‘எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நான் மட்டுமே சிறப்பாகச் செய்வேன்’ என்று கொக்கரிப்பது பணிவின்மை. மேலும், இந்தத் திறனை நான் பெறக் காரணமாக இருந்தது இன்னார் அல்லது இந்த நிறுவனம் என்ற நன்றி அறிதலுடன் இருப்பவர்களே 100% தங்களுடைய திறனை வெளிக்கொணர முடிந்தவர்களாக இருக்கின்றனர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

பணிசார்ந்த தொழில்முனைவு குறித்து இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பெரும் பிரிவு கூறுகிறது. பணிசார்ந்த தொழில்முனைவோர் என்பவர் பணியிடத்தில் செயல்படும் எல்லைகளுக்கு உள்ளேயே புதுமைகளைப் புகுத்துபவர்களாவார்கள். தொழில்முனைவோர் என்பவர், அவருக்காகத் தொழிலை நிர்மாணிப்பவர். பணிசார்ந்த தொழில்முனைவோர் என்பவர் உரிமை யாளருக்காகத் தொழிலை நிர்மாணிப்பவர்” என்ற விளக்கத்தைச் சொல்லும் ஆசிரியர், “பணிசார்ந்த தொழில் முனைவோர்கள் வாழ்நாள் முழுவதும் பணியிலேயே இருந்துவிடுகின்றனர்’’ என்கிறார்.

“ஒரு தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும்போது ஒரு தனிநபராக நம்மால் என்ன முடியும், என்ன முடியாது என்பதைப் பற்றி நியாயமான ஒரு மதிப்பீடு நம்மிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அதற்கேற்ப நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையான திறன்கொண்டவர்களைப் பணியமர்த்தி, வெற்றிகரமாகச் செயல்பட முடியும்.

நாணயம்  புக் ஷெல்ஃப் : 100% திறன்... உதவிக்கு வரும் உத்திகள்!

பூரணத்துவம் (Perfection) என்பது ஒரு கடினமான சொல். தொழிலில் இதை அடைவது சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால், ஒன்றிலிருந்து இன்னொன்று என பூரணத்துவத்துக்கான எல்லைகள் மாறிக்கொண்டேயிருக்கும். பூரணத்துவம் என்ற வார்த்தை நெகிழ்ச்சித்திறன் இல்லாத ஒன்று. நெகிழ்ச்சித்திறன் கொண்டவர்களால்தான் வளர முடியும் என்பதால், இயன்ற அளவுக்கு நன்றாக நடந்தால் போதுமானது என்ற கருத்தைக்கொண்டு முடிந்த அளவுக்குச் சிறு சிறு வளர்ச்சிகளைக் கண்டுவரும் படி செயல்படுவதே சிறந்த நடைமுறையாக இருக்கும்’’ என்று கூறி புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

நூறு சதவிகிதத் திறனுடன் செயல்படுவது எப்படி என்பதைப் பல்வேறு நிஜ வாழ்க்கை உதாரணங் களுடன் விளக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படித்து, பயன் பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்