Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : தோல்விக்கான காரணங்கள் என்னென்ன..?

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

கண்டறியுங்கள்... வெற்றி பெறுங்கள்!

நாணயம் புக் ஷெல்ஃப் : தோல்விக்கான காரணங்கள் என்னென்ன..?

கண்டறியுங்கள்... வெற்றி பெறுங்கள்!

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்
ம் தொடர் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்துவிட்டால், பயணிக்க வேண்டிய வெற்றிப்பாதையை மிகச் சுலபமாகக் கண்டறிந்துவிடலாம் அல்லவா... இது குறித்துத்தான் விரிவாகப் பேசுகிறது ரோன் மல்ஹோத்ரா எழுதிய ‘இம்பாசிபிள் டு ஃபெயில்’ என்ற புத்தகம்.

வெற்றி என்றால் என்ன?

‘உங்கள் அகராதியில் வெற்றி என்றால் என்ன?’ என்ற முக்கியமான கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். முக்கியமாக, ``நீங்கள் வெற்றி என்று நினைக்கும் விஷயமும் மற்றொருவர் வெற்றி என்று நினைக்கும் விஷயமும் மாறுபடும். நீங்கள் அடைய வேண்டிய வெற்றி என்ன என்பதை நிர்ணயித்துக் கொள்ள தற்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வில் நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஏன் அதை நீங்கள் அடைய வேண்டும், உங்கள் வாழ்க்கையின் முக்கியமான நோக்கம்தான் என்ன ஆகிய கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் முதலில் கண்டறிய வேண்டும்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், வெற்றி பெறுவதற்கான நடைமுறைகள் என்னென்ன என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றை விருப்பத்துடன் செய்ய முற்படுபவர்களுக்கு வெற்றி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நம்மில் பெரும்பாலானோர் நமக்கான வெற்றி என்ன என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் வெறுமனே பணத்தையோ அல்லது பணியிடத்தில் சிறந்த அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்பதே நிஜம்’’ என்ற உண்மையை எடுத்த எடுப்பிலேயே நமக்குப் புரியும்படி சொல்கிறது இந்தப் புத்தகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நமக்கு எது வேண்டும்?

``சிலர் `நகரங்களில் அடுக்குமாடிகளில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு, கிராமத்தில் பெரிய வீட்டில் வசித்தால் எப்படியிருக்கும்’ என்ற கனவுடன்கூடிய பெருமூச்சை விட்டுக்கொண்டிருக்கலாம். `வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதே சுகம்’ என்று நினைக்கும் கணவன்/மனைவி, எப்போதும் பார்ட்டி, ஹோட்டல் என்று செல்லும் மனைவி/கணவனைப் பார்த்து மனம் புழுங்கலாம். உங்களுக்கு எது வேண்டும் என்று தேர்வு செய்வதில்தான் பிரச்னை என்பது புரிகிறதா? நமக்கு என்ன வேண்டும்/எது பிடிக்கும் என்று தெரியாமல் தேர்ந்தெடுத்துவிட்டு பின்னால் வருத்தப்படுவதில் பயனேதும் இல்லை. வெற்றி என்பது உங்களுடைய வாழ்க்கையை நீங்களே உங்களுக்குப் பிடித்தாற்போல் வடிவமைத்து வாழும் நிலையில்தான் இருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை’’ என்று சொல்கிறது இந்தப் புத்தகம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

நம்பிக்கையின் அர்த்தம்!

எட்டு மணி நேர வேலை மற்றும் எட்டு மணி நேர தூக்கம் இரண்டையும் விட்டுவிட்டு, மீதமிருக்கும் எட்டு மணி நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்துத்தான் உங்கள் வாழ்வின் செழிப்பு இருக்கிறது. இந்தச் செழிப்பை அடைய முதலில் உங்களுடைய நம்பிக்கைகளிலிருக்கும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். `நீங்கள் நம்பும் விஷயத்தை உங்களால் அடைய முடியும்’ என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம்பிக்கை என்பது இதையெல்லாம் தாண்டிய வல்லமைமிக்க ஒன்று.

வெற்றியை நோக்கிய பயணத்தை, சரியான திசையில் மாற்றியமைக்க வல்லது நம்பிக்கை.

நாம் என்னவாக ஆக வேண்டும் என்று நம்புகிறோமோ, அதுவாகவே ஆகிறோம் என்பதால், ஆழ்மனதில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் உங்கள் வெற்றியை அடைய உதவும் வகையிலானவையாக இருக்க வேண்டும்.

நீங்கள் புலம்பல் பேர்வழியா?

‘என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும் வேறு வழியில்லாமல் என்னைச் சுற்றியிருக்கும் நபர்களாலும், நான் இருக்கும் சூழலினாலும் அமைவதாக இருக்கிறது’ என்று நம்பும் ஆளா நீங்கள்... ‘என்னதான் செய்தாலும்’ நினைத்த காரியத்தை நடத்த முடியாது என்று நினைக்கும் ஆளா நீங்கள்? இது போன்ற நம்பிக்கைகளை மனதுக்குள் விதைத்த பின்னர் என்னவாகும்... நீங்கள் எப்போதுமே தேவையில்லாத சூழல்களில் சிக்கிக்கொண்டு, தேவையில்லாத விஷயங்களைத் தெளிவாகச் செய்துகொண்டிருப்பீர்கள். ஒரு வேலையை விட்டுவிட்டு மற்றொரு வேலைக்குத் தாவுவதற்கே உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இறுதியில், ‘நானும் எவ்வளவோ வேலை மாறிப் பார்த்துவிட்டேன். நமக்கெல்லாம் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை’ என்று புலம்பிக் கொண்டுதான் இருப்பீர்கள்.

உங்களுடைய நம்பிக்கைகள் என்ற வடிகட்டியின் மூலம்தான் நீங்கள் உலக நிகழ்வுகளைப் பார்க்க முயல்கிறீர்கள். இதனாலேயே உங்களைச் சுற்றியிருக்கும் உலகம் என்பது நீங்கள் பார்க்கும் பார்வையில் இல்லை. நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளில் இருக்கிறது. சரியான விஷயங்களில் நம்பிக்கைகொண்டிருப்பவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, வெற்றிப்பாதையைவிட்டு ஓர் அங்குலம்கூட நகராமல் பயணிக்க முயல்வார்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

Impossible To Fail
Impossible To Fail

தெளிவில்லா மனநிலை..!

நம்முடைய உணர்தலுக்கும் உண்மைக்குமுள்ள இடைவெளி, நம்பிக்கைகள் எப்படி நம்முள்ளேயே குடிகொள்ள ஆரம்பிக்கின்றன, எப்படி நம்பிக்கைகளை நாம் உருவாக்கிக்கொள்கிறோம், எப்படி நம் மூளையின் செயல்பாட்டை அனுசரித்து நம்முடைய நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வது, நம்பிக்கைகளையும் செயல்பாட்டையும் எப்படி ஒருங்கிணைப்பது என்பதைப் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்லும் இந்தப் புத்தகம், ``குழப்பமான கொள்கைகள், தெளிவில்லா மனநிலை மற்றும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமான நம்பிக்கைகள் போன்றவையே நம்மை நம்பிக்கையிழக்கச் செய்து எதையும் தள்ளிப்போடவைக்கின்றன’’ என்கிறது.

``அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் நம்மைத் திசை திருப்புவதைத் தவிர்க்க, முதலில் நமக்கென்று ஒரு கனவு இருக்கிறது என்பதை எப்போதுமே மறந்துவிடக் கூடாது. ‘எனக்கும் பல கனவுகள் இருக்கிறது. ஆனால், அதற்கான முயற்சிகளைச் செய்யும் சக்திதான் இல்லை’ என்றால், உங்களுக்கு வேட்கை (Passion) இல்லை என்று அர்த்தம். நீங்கள் நினைக்கும் வெற்றியை அடையக் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும். ரிஸ்க் என்பது வெற்றிக்காக நீங்கள் தரும் விலை. அந்த விலையைத் தராமல் இருக்க நினைத்தால், நீங்கள் எப்போதுமே நடுத்தர மனிதராகவே இருப்பீர்கள்’’ என்று எச்சரிக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

`` இத்தனையையும் தாண்டி தோல்விகளே தொடர்ந்து வருகின்றன என்றால், பின்வரும் அம்சங்களில் ஒன்று காரணமாக இருக்கலாம். சுய புரிந்துகொள்ளல் இல்லாமை, உங்களுடைய இலக்கு மற்றும் அர்த்தம் என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமை, ஒரு செயலின் காரணம் மற்றும் விளைவு (Cause and Effect) குறித்துப் புரிந்துகொள்ளாமை, நம்முடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமை, தகுதி மற்றும் இலக்குக்கு இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமை, எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்துச் செயல்படும் திறனைக் கொண்டிருக்காமை, வாழ்க்கை, வேலை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களை இயக்கும் விஷயங்கள் என்னென்ன என்பதைச் சரிவரப் புரிந்துகொள்ளாமை போன்றவையே அந்த காரணங்கள். இவற்றைக் கண்டறிந்து சரிசெய்து கொண்டீர்களென்றால், உங்கள் வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது’’ என்று கூறி புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.

வெற்றிக்கான பாதையைத் தெளிவுபடுத்தும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை அவசியம் படிக்கலாம்; பலன் பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்