Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : சிக்கல்களைத் தீர்க்க உதவும் மாற்றுப்பார்வை! - கைகொடுக்கும் லென்ஸ்கள்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் ஷெல்ஃப்

கேள்விகளை மாற்றிக் கேட்கும்போது, கேள்விகளில் ஓர் அந்நியத்தன்மை வெளிப்படையாகத் தெரியும்.

மாற்றி யோசித்தால் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம். எழுத்தாளர் ஸ்டீஃபன் ஷாபிரோ (Stephen Shapiro) எழுதிய ‘இன்விசிபிள் சொல்யூஷன்ஸ்’ (Invisible Solutions) என்ற இந்தப் புத்தகம், தொழில்ரீதியான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மாற்றுப்பார்வையைப் பெற உதவும் லென்ஸ்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறது.

பிரச்னைகளைத் தீர்க்க உதவும் புத்தாக்கம்!

‘‘இண்ட்ஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் துறையில் நான் கால்பதித்தபோது, `புத்தாக்கம்’ (Innovation) என்பது ஆய்வுப் பிரிவில் மட்டுமே பேசப்பட்டுவந்த ஒரு வார்த்தையாக இருந்தது. இன்றைக்கு அது, ஒரு நிறுவனத்தின் எல்லாப் பிரிவுகளிலும் உச்சரிக்கப்படும் சொல்லாகிவிட்டது. `இன்னோவேஷன்’ என்பது வெறுமனே புதுமையை அறிமுகப்படுத்துவதல்ல. பிரச்னைகளைச் சரியாக வரையறுத்து, அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது. உங்களுடைய வாழ்க்கை மற்றும் பிசினஸின் தரம் என்பது, நீங்கள் எந்த அளவுக்குப் பிரச்னைகளைச் சிறப்பாகத் தீர்க்க உதவுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. தனிநபர்கள், தொழில்முனைவோர் என அனைவருக்குமே மிக முக்கியமாகத் தேவைப்படுவது இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்தான்’’ என்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மூன்று பிரிவில் மொத்த விஷயங்கள்!

`சிறப்பான கேள்விகளைக் கேட்பது எப்படி?’ என்பதைச் சொல்லித் தருகிறது இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி. பிரச்னைகளை மறுஉருவாக்கம் செய்வதற்கு உதவும் 25 லென்ஸ்கள் பற்றி விளக்குகிறது இரண்டாவது பகுதி. இந்தப் புத்தகத்தின் மூன்றாவது பகுதி, சவால்களை மையமாகக்கொண்ட இன்னோவேஷன் என்பது என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது. சரியாக வடிவமைக்கப்பட்ட கேள்விகளின் மூலமாக உங்களுடைய நிறுவனத்தில், `இன்னோவேஷன்’ எனும் இன்ஜினை இயங்கச் செய்வது எப்படி என்பதையும், இந்த முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏனைய இன்னோவேஷன்களை ஊக்குவிக்கும் முறைகளைவிட எப்படி பத்து மடங்கு வரை ‘ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட்’டை அதிகரிப்பது என்பதையும் மூன்றாவது பிரிவில் சொல்கிறது இந்தப் புத்தகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சரியான கேள்விகள், சரியான தீர்வுகள்!

``சிறப்பான கேள்விகளே சிறப்பான பதில்களை வெளியே கொண்டு வருகின்றன’’ என்கிறார் ஆசிரியர். இதற்கு உதாரணமாக பின்வரும் விஷயத்தைச் சொல்கிறார்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

“அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகள் எதிர்கொள்ளும் அசெளகர்யங்கள் குறித்து அவர்களிடம் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் பயணிகள் கொந்தளித்த ஒரு விஷயம், அவர்களுடைய லக்கேஜ்கள் தாமதமாக வருகின்றன என்பதுதான். அப்போது, 15 நிமிட நேரத்தில் பயணிகளுக்கு லக்கேஜ் கிடைத்துக் கொண்டிருந்தது. ‘இவ்வளவு கொந்தளிக்கிறார்களே...’ என்று எக்கச்சக்கமான செலவில் புதிய கன்வேயர்கள், இயந்திரங்கள் என வாங்கி, 15 நிமிட நேரத்தை எட்டு நிமிடமாகக் குறைத்தனர். மீண்டும் சர்வே செய்தால் பயணிகள் அந்த விஷயத்துக்கும் கொந்தளித்தனர். இனியும் நேரத்தைக் குறைக்க முடியாது என்ற நிலையில், `வேறு என்ன செய்தால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும்’ என்று யோசித்தனர் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள். பிறகு சுலபமான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். லக்கேஜை வேகமாகக் கொண்டு சேர்க்க முயல்வதற்குப் பதிலாக, பயணிகள் லக்கேஜ் வரும் இடத்துக்கு தாமதமாக வரும் வகையில் நடவடிக்கைகளை (பாதையைச் சற்றுச் சுற்றிச் செல்லுமாறு அமைத்தல், விமானத்திலிருந்து பயணிகள் கீழே இறங்கும் நேரத்தைச் சற்று தாமதித்தல் போன்ற நடவடிக்கைகள்) எடுத்தனர். பிரச்னை சுமுகமாக முடிந்தது. பயணிகள் நடந்துவரும் வழியில் கடைகள் பலவற்றையும் அமைத்தனர். தாமதப்படுத்தும் உபாயத்தில் பணம் சம்பாதிப்பதற்கான வழியும் கிடைத்தது. இப்போது லக்கேஜ், பயணிகள் வரும் முன்னரே பயணிகளுக்காக வந்து சேர்ந்து காத்திருந்தது. பயணிகள் குதூகலமாகவும் இருந்தனர். ‘‘லக்கேஜைக் கொண்டுவந்து சேர்ப்பதை வேகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே செயல்பட்டபோது, `பயணிகளை தாமதிக்க வைக்கலாம்’ என்ற எண்ணமே தோன்றவில்லை. செலவில்லாத ஒரு தீர்வை விட்டுவிட்டு எக்கச்சக்கமாகச் செலவழித்தது எதனால்... சரியான கேள்வி கேட்கப்படாததால்தான் இல்லையா?’’ என்கிறார் ஆசிரியர்.

“ `காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பது எப்படி?’ என்று கேட்பதற்கு பதிலாக, `காத்திருக்கும் நேரத்தை மகிழ்ச்சிகரமாக ஆக்குவது எப்படி?’ என்று கேள்வியை மாற்றிக் கேட்டிருந்தால், சரியான தீர்வு கிடைத்திருக்கும். பலனில்லாத கேள்விகள் பலனில்லாத பதில்களையே தரும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றிக் கேட்டால்..?

“அது எப்படிச் சரியான கேள்வி சரியான பதிலைத் தரும் என்கிறீர்களா... கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். விவாகரத்து கோரும் கணவன், மனைவி என வைத்துக்கொள்வோம். கணவன் சாதாரண வேலை, சராசரி சம்பளம், சராசரி உடல்நிலை, சராசரி அலுவலக வேலை நேரம் மற்றும் குழந்தையுடனான சுமுக உறவுடன் இருக்கிறார். மனைவியோ சராசரியைவிட அதிக சம்பளம், ஒரு சில உடல்நலப் பிரச்னைகள், வேலை சம்பந்தப்பட்ட அதிக பயணங்கள் மற்றும் குழந்தையுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். விவாகரத்து வழக்கில் நீங்கள்தான் நீதிபதி. யாரிடம் குழந்தை வளர வேண்டும் என்று கேட்டால், என்ன தீர்ப்பு கொடுப்பீர்கள்? ‘அம்மாவிடம்...’ என்றுதானே... ஆரம்பத்திலேயே கேள்வியை மாற்றிக் கேட்டால் அதாவது, `யாரிடம் குழந்தை இருக்கக் கூடாது?’ என்று கேட்டால், ‘அம்மா’ என்றுதான் பதில் வரும் இல்லையா?

Invisible Solutions
Invisible Solutions

கேள்வியை மாற்றிக்கேட்டால், தீர்ப்பு எப்படி மாறுகிறது பார்த்தீர்களா? ஏனென்றால், கேள்விகளே உங்களுடைய சிந்தனையின் போக்கை மாற்றி அமைக்கிறது. எனவே, கேட்கப்படும் கேள்விகள் நாம் ஏற்கெனவே கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்க வேண்டுமே தவிர, நம்பும் விஷயத்தை ஊர்ஜிதப்படுத்தும் வண்ணம் இருக்கக் கூடாது’’ என்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

சரியான விடை தரும் கேள்விகள்!

“நாம் அதிகமாகத் தெரிந்துவைத்திருக்கும் விஷயத்தில் (உதாரணமாக, நாம் செய்யும் தொழில் குறித்து), அதில் வரும் சிக்கல்கள் குறித்து ஒரே மாதிரியான கேள்விகளையே கேட்டால், தவறான பதில்களே கிடைக்கும். கேள்விகளை மாற்றிக் கேட்கும்போது, கேள்விகளில் ஓர் அந்நியத்தன்மை வெளிப்படையாகத் தெரியும். `இதை ஏன் இப்படிக் கேட்கிறார்...’ எனச் சிலர் நினைப்பார்கள். இந்தப் புத்தகம் சொல்லும் லென்ஸ்களைத் (கேள்விகளை) தொடர்ந்து உபயோகித்துவந்தால் இது போன்ற மாற்றுக் கேள்விகளைக் கேட்பது மிகச் சுலபமாகிவிடும்” என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

‘‘உடல் தசையைப் பயிற்சிகளின்மூலம் வலுவேற்றுவது போன்றது இது. நிறைய ஐடியாக்கள் வேண்டும் என்ற சூழ்நிலையில் வெகு சில தரமான, சிறப்பான கேள்விகளே கேட்கப்பட வேண்டும். நிறைய பயனற்ற கேள்விகள், மதிப்பற்ற கழிவுகளை மட்டுமே உருவாக்கும். மிகக் குறைந்த சரியான கேள்விகள், மதிப்பை அதிகரிக்கும்’’ என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

இன்னோவேஷன் செய்யத் துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது!

- நாணயம் விகடன் டீம்