Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : வாழ்க்கையை மாற்றும் ஒற்றை வார்த்தை!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

வல்லமை படைத்த மந்திரம்!

நாணயம் புக் ஷெல்ஃப் : வாழ்க்கையை மாற்றும் ஒற்றை வார்த்தை!

வல்லமை படைத்த மந்திரம்!

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்
ங்கள் வாழ்க்கையை பிரமிக்கத்தக்க அளவில் முன்னேற்றமடையச் செய்யும் ஒரு வார்த்தை உங்களுக்குக் கிடைத்தால் எப்படியிருக்கும்...

தொடர் தோல்வியிலிருந்த ஒருவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்செல்லும் அற்புதமான விஷயமாக அது இருக்குமல்லவா! எது அந்த வார்த்தை, அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்துச் சொல்கிறது ஜான் கோர்டன் (Jon Gordon), டேன் பிரிட்டன் (Dan Britton) மற்றும் ஜிம்மி பேஜ் (Jimmy Page) எழுதிய ‘ஒன் வேர்டு – தட் வில் சேஞ்ச் யுவர் லைஃப்’ என்ற புத்தகம்.

நாணயம்  புக் ஷெல்ஃப் : வாழ்க்கையை மாற்றும் ஒற்றை வார்த்தை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரேயொரு வார்த்தை போதும்!

``ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நாம் புத்தாண்டு உறுதிமொழிகளை எடுக்கிறோம். சில நாள்களிலேயே அவற்றைக் காற்றில் பறக்கவிட்டுவிடுகிறோம். இதற்கு முக்கியக் காரணம், அதிக வார்த்தைகளைக்கொண்டவையாக அவை இருப்பதுதான். ஆனால், ஒரேயொரு வார்த்தை என்பது அப்படிப்பட்டதல்ல. ஒரு வார்த்தையை இலக்காகக்கொண்டு செயல்படும்போது அது மிக முக்கியமானதாகத் தோன்றும். இந்த முறையைப் பல ஆயிரம் பேர் கடைப்பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். 1999-ம் ஆண்டில் கண்டறியப்பட்டது இந்த ஒரேயொரு வார்த்தை நடைமுறை. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பலரும் இதைப் பின்பற்றி பெரிய அளவில் பலனடைந்திருக்கிறார்கள்.

மன மாற்றமே வாழ்வின் மாற்றம்!

‘‘வெற்றி என்பது நாம் எதைச் சாதிக்கிறோம் என்பதிலிருந்து நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, நாம் எந்த மாதிரியான நபராக உருவெடுக்கிறோம் என்பதிலிருந்து நிர்ணயிக்கப்படுவதில்லை. புத்தாண்டுத் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் ‘வேட்டியை மடித்துக்கொண்டு செயல்பட வேண்டியது ஒன்று மட்டுமே பாக்கி’ என்ற எண்ணத்தை நம் மனதில் உருவாக்கிக் கொள்கிறோம். இந்தவிதமான திட்டங்கள் நாம் நினைப்பதைச் சாதிப்பதற்காக நம் மூளைக்கும் கைகளுக்கும் வேலையைத் தருவதாக அமைகின்றன. அதனாலேயே நாம் இந்தவிதத் தீர்மானங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தவறுகிறோம். ஏனென்றால், இந்தத் திட்டங்களை நிறைவேற்ற மனது என்பது முக்கியம். ஆனால், மனம் என்ற ஒன்று இருப்பதை மறந்துவிட்டு மூளையும் கைகளும் மட்டுமே நம் புத்தாண்டுத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த போதுமானவை என்று நாம் நினைத்துச் செயல்படுகிறோம். எனவேதான் ஒவ்வொரு வருடமும் படுதோல்வியை அடைகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`மன மாற்றமே வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவரும்’ என்பதைப் புரிந்துகொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் இந்த வாழ்க்கையை மாற்றும் `ஒரே வார்த்தை’ என்ற தத்துவம். மூளையைக் கொண்டு செய்யத் திட்டமிடப்படும் அனைத்து விஷயங்களையும் நிகழ்த்த அதிக அளவிலான மனோபலம் (Willpower) நமக்குத் தேவை. இதனாலேயே மனதை அடிப்படையாகக் கொண்டு திட்டம் தீட்ட, ஒரு வருடத்துக்கு `ஒரே வார்த்தை’ என்ற அடிப்படையில் நாம் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. உங்கள் தேவைக்கேற்ப ஒரேயொரு வார்த்தையைக் கண்டுபிடியுங்கள். அதையே குறிக்கோளாக வைத்துச் செயல்படுங்கள். அது உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க உதவும்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

ஒற்றை வார்த்தை என்பது நம்முடைய கவனத்தைக் குவித்து (லேசர் ஃபோகஸ்) செயல்பட வைக்கிறது. மிஷன் ஸ்டேட்மென்ட், ஸ்லோகன் போன்றவையெல்லாம் பல வார்த்தைகளைக் கொண்டவையாக இருந்து வேலை செய்யாமல் போய்விடுகின்றன. அதனால்தான், ஒற்றை வார்த்தை என்பது நெத்தியடியாக வேலை செய்கிறது’’ என்கின்றனர் இந்நூலின் ஆசிரியர்கள்.

எந்த வார்த்தையைத் தேர்வு செய்வது?

புத்தக ஆசிரியர்களில் ஒருவரான டேன், எந்த வார்த்தையைக் கொண்டு செயல்படுவது என்று யோசித்தாராம். பல வார்த்தைகளை யோசித்த அவர், அவற்றைப் பட்டியலிட, ‘Intimacy’ (நெருக்கம்) என்ற வார்த்தையை அந்த ஆண்டுக்கான வார்த்தையாக வைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கினாராம். ‘நெருக்கம்’ என்ற வார்த்தை அவர் செயல்பட்ட அனைத்துத் துறைகளிலுமே சிறப்பாகச் செயல்பட உதவியது என்கிறார்.

One Word That Will Change Your Life
One Word That Will Change Your Life

‘‘வார்த்தைகள் என்பவை கோக்கப்படும் போது மிகுந்த சக்தி கொண்டவையாக மாறுகின்றன.

`ஒரே வார்த்தை’ என்பது மிகப் பெரிய மாறுதலை வாழ்வில் கொண்டுவரக்கூடியதாக இருக்கிறது. ஒரு வார்த்தை உங்கள் மனதினுள் ஆழப் பதிந்து செய்யும் காரியம் அத்தனையிலும் அதுவே முன்வந்து நிற்கும்.

கூர்மையாக, சவாலாக, இலக்கை நோக்கி நம்மை இழுப்பதாக அந்த ஒரு வார்த்தை செயல்படும். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் அந்த ஒரு வார்த்தையின் மகத்துவத்தை உணர்ந்து நம்முடைய இலக்கு நோக்கிய பயணத்துக்கு உறுதுணையாக இருக்கத் தேவையான அனைத்து ஊக்கங்களையும் தருவார்கள்’’ என்கின்றனர் நூல் ஆசிரியர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்-பிளக் மற்றும் பிளக்-இன்

``இதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களை இந்த உலக இயக்கத்தின் ஓட்டத்திலிருந்து அவிழ்த்துக் கொள்ளுங்கள் (Unplug – டி.வி., இசை, கணினி, ஸ்மார்ட்போன், ஏனைய மனிதர்கள்) அதிகாலை நேரத்தில் அமைதியாக இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின்னர் உங்கள் மனதுக்கு என்ன வேண்டும் என்ற கேள்வியை நிதானமாகக் கேளுங்கள்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

இந்த நடைமுறையில் முதலில் நீங்கள் அனுபவிக்கப்போவது, உங்கள் மூளையில் அமைதி என்பதைத்தான். எந்த அளவிலான ஒலியை (Noise) உங்கள் மூளை அன்றாடம் எதிர்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரியும். அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளெல்லாம் மூளையில் அடிக்கடி நினைவுக்கு வந்துபோகும். இங்கேதான் நீங்கள் வாழ்க்கையின் ஓசையிலிருந்து பிரிந்து செல்லக் கற்றுக்கொள்கிறீர்கள். இந்தச் சத்தத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேறிவிட்டீர்களென்றால், உங்களுக்குச் சக்தி கிடைக்கிறது. அந்தச் சூழலில்தான் நீங்கள் உங்களுக்குத் தேவையான ஒற்றை வார்த்தை எது என்பது குறித்துச் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். உங்களை முழுமையாக ‘அன்பிளக்’ செய்துகொண்ட பிறகு, `எனக்கு என்ன வேண்டும்’, `என் பாதை எதை நோக்கிப் பயணிக்கிறது’, `நான் எங்கே போக வேண்டும்’ ஆகிய கேள்விகளைக் கேளுங்கள். இந்த மூன்று கேள்விகளும் மிக மிக அவசியமானவை.

சரியான ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்த அடுத்த கணமே உங்களால் அதை நன்கு வளர்த்தெடுக்க முடியும் என்பதையும் உணர ஆரம்பிப்பீர்கள். எப்படி உங்களை ‘அன்பிளக்’ செய்தீர்களோ, அதேபோல் உங்களுடைய வார்த்தையுடன் உங்களை ‘பிளக்-இன்’ செய்துகொள்ளுங்கள். மனதை அதை நோக்கிச் செலுத்துங்கள். `வார்த்தையைத் தேர்வு செய்துவிட்டேன்’ என்றில்லாமல், அதை ஒரு பாதையாக மாற்றிக்கொள்ளுங்கள். அத்துடன் நின்றுவிடாமல் உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களுக்கு அந்த வார்த்தையை உணர்த்துங்கள்.

இதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் போது நீங்கள் ஒரு சக்தி படைத்த மனிதராகவும், பாசிட்டிவ் குணம் கொண்டவராகவும் உணர ஆரம்பிப்பீர்கள். அப்போது அந்த ஒற்றை வார்த்தை உங்களை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தையும் மாற்றுகிறது என்பதை நன்கு உணர்வீர்கள்’’ என்று சொல்லி முடிக்கிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள்.

ஒற்றை வார்த்தையைக்கொண்டு முன்னேறுவது எப்படி என்பதை விளக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை அவசியம் படிக்கலாம்; பயன் பெறலாம்!

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism