Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : முரண்பாட்டின் பாதையிலிருந்து விலகுவோம்! - சாதகமான பலன்களைப் பெறுவோம்..!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

முரண்பாட்டின் ஆணிவேரைப் புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் அதைக் களைய முடியும்.

நாணயம் புக் ஷெல்ஃப் : முரண்பாட்டின் பாதையிலிருந்து விலகுவோம்! - சாதகமான பலன்களைப் பெறுவோம்..!

முரண்பாட்டின் ஆணிவேரைப் புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் அதைக் களைய முடியும்.

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்
ல்லாவிதமான சிக்கல்களுக்கும் காரணம் முரண்பாடுகள்தான். முரண்பாடுகளையே நமக்குச் சாதகமானவையாக ஆக்கிக்கொள்வது எப்படி, முரண்பாடுகளைக் களைந்து அவற்றிலிருந்து சாதகமான பலன்களைப் பெறுவது எப்படி என்பதைச் சொல்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் புத்தகமான ‘ஆப்டிமல் அவுட்கம்.’ ஜெனிஃபர் கோல்டுமேன் எனும் பெண்மணிதான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

முரண்பாடுகள் சகஜமாகிவிட்ட வாழ்க்கை..!

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மிகவும் பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நேரம் அவரின் அம்மா போனில் அழைத்து, “நீ ஏன் என்னை வந்து பார்க்க மாட்டேன் என்கிறாய். குறைந்தபட்சம் போனிலாவது பேசலாமே?” என்று கேட்டாராம். அதற்கு ஆசிரியர், ‘‘அம்மா, ஏற்கெனவே தலைக்குமேல் வேலை. நீயும் என்னைக் கஷ்டப்படுத்தாதே’’ என்று வெடுக்கென சொல்லிவிட்டாராம். `என்னதான் பிஸி என்றாலும் பெற்ற தாயிடம் இப்படிப் பேசலாமா...’ என்று தோன்றலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமானவை. இது போன்ற சூழ்நிலைகளைத் தவிர்த்துவிட்டு சரியாகச் செயல்படுவது எப்படி என்பதைச் சொல்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் முரண்பாடுகள்..!

‘‘முரண்பாடுகளும் மோதல்களும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. இவை சில நன்மைகளையும் உருவாக்கும். பணியிடத்தில் முரண்பாடுகள்தான் புத்தாக்கச் சிந்தனைகளுக்கு வழிவகுக்கும். பலர் இணைந்து செயல்படும் ஒரு குழுவுக்குள் ஏற்படும் முரண்பாடுகளும் மோதல்களும்தான் ஒரு சிலரை போட்டி மனப்பான்மையுடன் கிரியேட்டிவாகச் சிந்திக்கவைத்து, அந்தக் குழுவையே சிறப்பான குழுவாக மாற்றியமைக்கும். ஏனென்றால், ஒரு குழுவில் எல்லோரும் மனமொப்பி ஒரே மாதிரியாகச் சிந்தித்தார்கள் என்றால், அந்தக் குழுவால் புரட்சிகரமான சிந்தனைகள் எதையும் கொண்டுவந்துவிட முடியாது இல்லையா?

முரண்பாடுகள் இல்லாவிட்டால் உலகம் சப்பென்று ஆகிவிடும். பெரிய புரொடக்டிவிட்டி இல்லாமல், ஈடுபாடு குறைந்து ஒரு வாழ்க்கைக்கு சுவைகூட்டும் இடமாக இல்லாமல் போய்விடும்’’ என்கிறார் ஆசிரியர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தானாக வளரும் முரண்பாடு..!

“முரண்பாடு என்பது அதுவாகவே முரண்பாட்டை வளர்த்தெடுத்து, அதைத் தானாகவே நிலை நிறுத்திக்கொள்ளும் வல்லமைகொண்ட ஒரு விஷயம். அதாவது, முரண்பாட்டின் குணாதிசயமே ஒரு முரண்பாடு உருவாகிவிட்டதென்றால், அது நீண்டு நிலைத்திருக்கும் வகையில் தானாக வளர்ந்துகொள்ளும்.

உதாரணமாக, நாம் ஒருவருடன் முரண்பாடு கொள்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு நம்முடைய சிந்தனை, செயல், நடவடிக்கை என எல்லாமே அந்த முரண்பாட்டை அதிகரிக்கும் கோணத்தில் அமைந்துவிடவே வாய்ப்புகள் அதிகம். இது எதனால், முரண்பாடு என்பது அதுவாகவே ஏன் அதிகரிக்கிறது, அதற்கான காரணி என்ன என்பதை ஆராய வேண்டும்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

முரண்பாட்டின் ஆணிவேர்..!

முரண்பாட்டின் ஆணிவேரைப் புரிந்துகொண்டால் மட்டுமே அதைக் களைய முடியும். எவ்வளவு பெரிய முரண்பாடானாலும் சரி, அதை அலசி ஆராய்ந்து எங்கிருந்து அந்த முரண்பாடு தொடங்கியது என்பதையும் அந்தப் பிரச்னையின் ஆணிவேர் எது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். இதைச் செய்யாதவரை, `முரண்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்கிறேன்’ பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நாம் அதை அதிகரிக்கும் வேலைகளை மட்டுமே செய்வோம்” என்று அடித்துச் சொல்கிறார் ஆசிரியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முரண்பாட்டில் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான நடைமுறைகளை விவரிக்கிறார் ஆசிரியர்.

எப்படி நாம் நம்மை அறியாமலேயே முரண்பாட்டை அதிகரிக்கும் வகையில் நடந்துகொள்கிறோம். முரண்பாடு வளர்ந்து பெரும் பிரச்னையாகும் வரை அதை நாம் நம்மையறியாமலேயே செய்துவிட்டு, பிரச்னை முற்றிப்போய் சண்டை நடந்த பிறகு ‘ஏன் இப்படி நடந்துகொண்டோம்’ என்று ஏன் வருத்தப்படுகிறோம், அதன் பிறகு எப்படியாவது மீண்டும் சண்டை போட்ட நபரோடு சேர்ந்துவிடலாமா (அதற்கு எதிராளி தயார் இல்லையென்றாலும்) என்று ஏன் யோசிக்கிறோம் என்பதையெல்லாம் விளக்கமாகச் சொல்கிறார்.

Optimal Outcomes
Optimal Outcomes

இறுதியாக, முரண்பாட்டைத் தீர்த்துக் கொள்வதற்கான பாதையை வடிவமைத்து, பரீட்சித்துப் பார்த்து அதில் பயணிப்பது எப்படி என்பதை ஆசிரியர் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

“ `முரண்பாட்டைத் தீர்ப்பது என்ன பெரிய விஷயமா... சரணாகதி அடைந்தால் தீர்ந்துவிடப்போகிறது’ என்பீர்கள். அதுதான் இல்லை. முரண்பாட்டை வெறுமனே சரணாகதி மூலம் தீர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைவிட அனைவருக்கும் மிகவும் சாதகமான பலன்களைத் (Optimal Outcome) தரும்படி மாற்றியமைப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் அதிகம்” என்கிறார் ஆசிரியர்.

பலன் தரும் வழிமுறைகள்..!

“முரண்பாட்டின் தடப்பாதையை (Conflict Loop) விட்டு விலகி வெளியே வருவது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள எட்டு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அதிலுள்ள கஷ்டத்தை நீங்கள் கணிசமாகக் குறைக்கலாம். ஆனாலும் இந்த வழிமுறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு உண்டு.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

முதலாவதாக, முரண்பாட்டைக் கொஞ்சம் உற்று கவனிப்பதற்காக சற்றே நம் எண்ண ஓட்டத்தை இடை நிறுத்துதல் என்பது. இந்த எண்ண ஓட்ட இடை நிறுத்தம் என்பது நாம் இருக்கும் சூழலை நம்மால் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.

சாதாரணமாக நாம் இயங்கிக்கொண்டிருக்கும்போது நம்மால் சூழ்நிலையின் நுணுக்கங்களைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது. எண்ணவோட்டத்தை இடைநிறுத்தி, சுற்றியிருக்கும் முரண்பாட்டுக்கான சூழ்நிலையைக் கூர்ந்து பார்த்தால் மட்டுமே இந்தவித நுணுக்கங்களை நம்மால் எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும்” என்கிறார் ஆசிரியர்.

“இரண்டாவதாக, முரண்பாட்டின் தடப்பாதையிலிருந்து விலகிவர முயலுதல். சூழ்நிலையின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்ட பிறகு முரண்பாட்டின் தடப்பாதையைக் கண்டுபிடித்து, அதிலிருந்து விலக மனமார நாம் தயாராக வேண்டும்.

இந்த இரண்டையும் செய்துவிட்ட பிறகு இந்தப் புத்தகத்தில் கூறியுள்ள நடைமுறைகளைப் பின்பற்றினால் முரண்பாட்டிலிருந்து மிகவும் சாதகமான பலன்களை நம்மால் பெற முடியும்” என்கிறார் ஆசிரியர்.

வீடு, அலுவலகம், சமூகம் என எல்லா இடங்களிலும் உருவாக வாய்ப்புள்ள முரண்பாட்டின் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து, அதைத் தீர்த்து, அதன் மூலம் கிடைக்கும் சாதகமான பலனைப் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கமாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை கட்டாயம் படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism