Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : உற்பத்தித்திறனை அதிகரிக்கும் ரகசியங்கள்! - அறிந்துகொள்ள வேண்டிய சூட்சுமங்கள்

நாணயம் புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் ஷெல்ஃப்

தேர்வு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது என்பதே மோட்டிவேஷன் உருவாக அடித்தளமாக இருக்கிறது!

குறைவான நேரத்தில், நன்கு திட்டமிட்டு அதிகமான வேலைகளை முடித்துவிடுவார்கள் சிலர். `எப்படி அவர்களால் மட்டும் அது முடிகிறது?’ என்ற கேள்விக்கு பதில் சொல்கிறது இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தவிருக்கும் சார்லஸ் டியூஹிக் (Charles Duhigg) எழுதிய ‘ஸ்மார்ட்டர், ஃபாஸ்டர், பெட்டர்’ எனும் புத்தகம்.

`ஏன் சில நபர்களால் மட்டும், சில நிறுவனங்களால் மட்டும் திட்டமிட்ட விஷயங்களைச் சரியாகச் செய்து முடிக்க முடிகிறது’ என்பதை நியூரோசயின்ஸ், உளவியல், பிஹேவியரல் எகனாமிக்ஸ் போன்றவற்றில் ஆராய்ச்சிகளைச் செய்தும், சி.இ.ஓ-க்கள், கல்வியாளர்கள், நான்கு ஸ்டார்களைப் பெற்றிருக்கும் ராணுவ ஜெனரல்கள், திறமையான விமானிகள், கவிஞர்கள் எனப் பல்வேறு வகை மனிதர்களின் அனுபவங்களை மிகச் சிரத்தையுடன் ஆராய்ந்தும் எழுதப்பட்டது இந்தப் புத்தகம்.

நாணயம் புக் ஷெல்ஃப் : உற்பத்தித்திறனை அதிகரிக்கும்  ரகசியங்கள்! - அறிந்துகொள்ள வேண்டிய சூட்சுமங்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உற்பத்தித்திறன் என்பது..!

‘‘தனிநபர்களைப் பொறுத்தவரை உற்பத்தித்திறன் (Productivity) என்பது ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஓர் அம்சமாக இருக்கிறது. ஒருவர் அதிகாலையில் எழுந்து, ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து, குழந்தையை 8 மணிக்குப் பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டாலே அவர் தனது உற்பத்தித்திறனில் உச்சத்தைத் தொட்டதாக நினைக்கிறார். மற்றொருவரோ, அலுவலகம் சென்று, எட்டு மணி நேரம் வேலை பார்த்து, வாடிக்கையாளர்களுடன் பேசி, மெயில்களுக்கு பதில் அனுப்பி மாலை திரும்பும்போது, ‘இன்று நல்ல உற்பத்தித்திறனைக் காட்டினோம்’ என்ற எண்ணத்தில் திளைக்கிறார். ஒரு பொறியாளர் தனக்கிருக்கும் வசதிகளைக்கொண்டு எவ்வளவு அதிகமாகப் பொருள்களை உற்பத்தி செய்கிறோமோ, அதுவே தனது உற்பத்தித்திறன் என்பார். ஆக, உற்பத்தித்திறன் என்பது பல அர்த்தங்களைக்கொண்ட ஒரு விஷயம். உற்பத்தித்திறன் என்று நாம் நினைப்பது (குறிப்பிடுவது) எந்தவொரு செயலிலும் நாம் நம்முடைய சக்தி, நேரம் மற்றும் மூளை ஆகிய மூன்றையும் சிறப்பான வழிகளில் செலவிடுவதுதான். அதாவது, நாம் ஈடுபடும் செயல்களில் இந்த மூன்றையும் அதிக அளவுக்கு உபயோகமாகவும், குறைந்த அளவுக்கு வீணடிப்பதையும் செய்தோமென்றால், அதையே நாம் `உற்பத்தித்திறன்’ என்று சொல்கிறோம். அதிக நேரம் அலுவலகத்தில் இருப்பது மட்டுமோ, மிகவும் கஷ்டப்பட்டு உழைப்பது மட்டுமோ உற்பத்தித்திறன் என்று நினைப்பது தவறு’’ என்று உற்பத்தித்திறன் குறித்து நமக்குச் சரியான புரிந்துணர்வை ஏற்படுத்துகிறார் ஆசிரியர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உற்பத்தித்திறன் - எட்டு விஷயங்கள்..!

இந்தப் புத்தகம் எட்டு முக்கியக் கோட்பாடுகளைச் சொல்கிறது. “வெற்றிபெற்ற மனிதர்கள் மற்றும் நிறுவனங்களெல்லாம் வெறுமனே அவர்கள் செய்யும் செயல்களை மாறுபட்டதாகச் செய்ததால் வெற்றி பெறவில்லை. இந்த உலகம் குறித்த அவர்களுடைய பார்வை, அவர்களுடைய தேர்வு மற்றும் நடவடிக்கைகளெல்லாம் ஒட்டுமொத்தமாக மாறுபட்டதாக இருந்ததால்தான் வெற்றி பெற்றனர். தனிநபரோ, நிறுவனமோ யாராக இருந்தாலுமே இந்தவித நடைமுறையே வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும்.’’

நாணயம் புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

முயற்சி செய்வதற்கான உந்துதல்..!

உற்பத்தித்திறனை அதிகரிக்கத் தேவைப்படும் எட்டு விஷயங்களில் முதலாவதாக ஆசிரியர் குறிப்பிடுவது, முயற்சி செய்வதற்கான உந்துதல் (Motivation). ``மோட்டிவேஷன் என்பது எழுதுவது, படிப்பது போன்ற கற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தக்கூடிய திறன்’’ என்று சொல்லும் ஆசிரியர், ``இதற்கு முதற்படி நாம் செய்ய நினைக்கும் காரியங்களைக் கட்டுப்படுத்தும் திறன் நமக்கு இருக்கிறது என்று நம்புவது” என்கிறார். ‘‘கட்டுப்படுத்துதல் என்பது தேர்வு செய்தல் (Selecting from Choices) என்பதாகக்கூட இருக்கலாம். `இன்னின்ன விஷயங்கள் உள்ளன. நீங்கள் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்’ என்று சொல்லும்போதே மோட்டிவேஷன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. `ஏனென்றால், தேர்வு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது என்பதே மோட்டிவேஷன் உருவாக அடித்தளமாக இருக்கிறது’ என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன’’ என்கிறார் ஆசிரியர்.

குழுக்களின் அவசியம்..

இரண்டாவதாக ஆசிரியர் வலியுறுத்துவது, குழுக்களின் அவசியத்தை. குழுக்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஆசிரியர் சில ஆராய்ச்சி முடிவுகளை மேற்கோள் காட்டுகிறார். “தாங்கள் செய்யும் வேலை உபயோகமானது என்று ஒட்டுமொத்த குழுவும் நம்ப வேண்டும். குழுவின் உறுப்பினர்கள் இந்தக் குழு செய்யும் வேலை, தனிநபராக நமக்கும் உதவியாக இருக்கும் என்று உணர வேண்டும். குழுவுக்கும் தெளிவான இலக்குகளும், ஒட்டுமொத்த காரியத்தில் சரியான பங்களிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் `மற்றவரை நம்பிக் காரியத்தில் இறங்கலாம்’ என்று நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குழுவின் மத்தியில் உளவியல்ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாவதாக, கவனம் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ‘‘கணினிகள், செக்லிஸ்ட்கள் என அனைத்துமே ஏதாவது ஒரு விஷயத்தைத் தவறவிடலாம். ஆனால், முடிவுகளை எடுக்கத் தெரிந்த மனிதனுக்கு எது அவனுடைய கவனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்’’ என்கிறார்.

Smarter Faster Better
Smarter Faster Better

நான்காவதாக ஆசிரியர் பரிந்துரைப்பது, இலக்குகளை நிர்ணயித்தலில் காட்ட வேண்டிய சாதுர்யத்தை. “இலக்குகளை நிர்ணயிக்கும் போதே அடுத்து என்ன நடக்கும், என்னென்ன இடைஞ்சல்கள் வர வாய்ப்புள்ளது, முன்கூட்டியே அதற்குத் தயாராக இருப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டால் எதையும் சுலபமாகச் செய்து முடிக்க முடியும்” என்கிறார் ஆசிரியர்.

நல்ல பணியாளர்களை இழக்காதீர்கள்..!

ஐந்தாவதாக, ``நன்கு பணிபுரியும் நபர்கள் கிடைப்பது அரிதாக இருக்கும் காலகட்டத்தில், அப்படிக் கிடைத்தவர்களை நிலைநிறுத்திக்கொள்ளத் தெரிந்துவைத்துக் கொள்வதே வெற்றிக்கு வழிவகை செய்யும் முக்கியக் காரணியாக அமைகிறது’’ என்கிறார்.

நாணயம் புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

ஆறாவதாக, ``எதிர்காலத்தை கணிப்பதில் என்னென்ன விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் அதற்கேற்றாற்போல் நம்மால் முடிவுகளை எடுக்க முடியும்’’ என்கிறார்.

இன்னோவேஷன் மற்றும் டேட்டாக்களை உள்வாங்கிக்கொள்வதன் அவசியம் ஆகிய இரண்டையும் ஏழாவது மற்றும் எட்டாவது கோட்பாடுகளாகச் சொல்லி இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறார் ஆசிரியர். “இன்னோவேஷன் புரோக்கர்களை (பழைய ஐடியாக்களை புதிய வழிகளில் மாற்றத் தெரிந்த நபர்கள்) நிறுவனத்தினுள் உருவாக்க வேண்டும். டேட்டாக்களை வெறுமனே பார்த்தால் மட்டும் போதாது. அவை என்ன சொல்கின்றன, என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் கவனத்துடன் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

நாம் அனைவருமே நல்ல உற்பத்தித்திறனுடன் செயல்பட முடியும் என்பதைச் சொல்லி, அதற்கான வழிகளையும் காட்டும் இந்தப் புத்தகத்தை வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவரும் கட்டாயம் படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்