Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : மாறாதவரையும் மாற்றும் வித்தை...!

நாணயம் புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

மனிதர்களை உங்களுக்கேற்ப மாற்றும் வழிமுறைகள்..!

நாணயம் புக் ஷெல்ஃப் : மாறாதவரையும் மாற்றும் வித்தை...!

மனிதர்களை உங்களுக்கேற்ப மாற்றும் வழிமுறைகள்..!

Published:Updated:
நாணயம் புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்
ற்றவர்களை மாற்றுவதில்தான் நமக்கான வெற்றி இருக்கிறது. ஆனால் ‘நம்மால் மற்றவர்களை மாற்ற முடியுமா?’ என்ற கேள்வி நமக்குள் எப்போதும் இருக்கும்.

மற்றவர்களை மாற்றுவது சாதாரண விஷயமல்ல. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் ‘தி கேட்டலிஸ்ட்’ என்ற புத்தகம். இதன் ஆசிரியர் ஜோனா பெர்ஜர் (Jonah Berger), பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் ஸ்கூலில் பேராசிரியராக இருந்தவர்.

நாணயம் புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துப்பாக்கியின்றி சரணடைய வைப்பது...

எஃப்.பி.ஐ-யின் கேஸ் ஏஜென்ட்டான க்ரெக் வீச்சி என்பவரின் அனுபவத்துடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். எஃப்.பி.ஐ-யின் சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரியாக இருந்தவர் இவர். போதை மருந்து கடத்தும் குற்றவாளி ஒருவரைப் பல மாதங்கள் தொடர்ந்து துப்பறிந்து அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்த க்ரெக், அதைச் செய்வதற்கென ஒரு கூட்டத்தை நடத்தினார். குற்றவாளியைக் கைது செய்வதற்கான துல்லியமான திட்டம் தீட்டப்பட்டு, கூட்டம் முடிந்து, எல்லோரும் சென்ற பின் ஒருவர் மட்டும் க்ரெக்கிடம் வந்து, ‘‘குற்றவாளியின் குணம், குடும்பம், அவர் ஏதாவது செல்லப்பிராணிகள் வளர்க்கிறாரா” என்றெல்லாம் கேட்டாராம். இந்தக் கேள்விகள் கொஞ்சம் விநோதமாக இருந்தாலும் அவர் கேட்ட தகவல்களைச் சொன்னாராம் க்ரெக். ‘‘சரி, குற்றவாளியின் போன் நம்பரைக் கொடுங்கள்’’ என்று கேட்டு வாங்கிச் சென்றுவிட்டாராம் அந்த நபர்.

குற்றவாளியைக் கைது செய்யும் நேரம் வந்தது. எக்கச்சக்கமான துப்பாக்கி ஏந்திய போலீஸ் படையுடன் அந்தக் குற்றவாளி தங்கியிருந்த இடத்தைச் சூழ்ந்துகொள்ள, குற்றவாளியின் வீட்டுக் கதவு நீண்ட நேரம் திறக்கவே இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு கதவைத் திறந்து வெளியே வந்து சரணடைந்தான் குற்றவாளி. அவனுக்குப் பக்கத்தில் இன்னோர் ஆள். அவரைப் பார்த்ததும் அதிர்ந்து போனாராம் க்ரெக். காரணம், குற்றவாளியைக் கைது செய்ய நடந்த கூட்டத்தில், அவரைப் பற்றிய விநோதமான கேள்விகளைக் கேட்ட அதே நபர்தான் குற்றவாளியுடன் இருந்தாராம். விசாரித்தபோதுதான் பணயக் கைதியை சரணடையவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தும் புரொஃபஷனல் (Hostage Negotiator) அவர் என்று தெரிந்திருக்கிறது. துப்பாக்கியின்றி, ரத்தமின்றி குற்றவாளிகளைச் சரணடைய வைக்கும் அளவுக்குச் சாமர்த்தியமாகப் பேச்சுவார்த்தை நடத்துபவர் அவர் என்பதை அறிந்து, அவரைப்போல மாற வேண்டும் என்று நினைத்து, அதற்கான முயற்சியில் இறங்கி, பிறகு ஒரு ‘ஹோஸ்டேஜ் நெகோஷியேட்டராக’ மாறினாராம் க்ரெக். இந்தக் கதையைச் சொல்வதன் மூலம் ‘மாற்ற முடியாதது என்பது எதுவுமே இல்லை’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாற விரும்பாதவன் மனிதன்..!

உலகில் வாழும் அனைவருக்குமே அவர்கள் மாற்ற விரும்பும் ஏதாவது ஒரு விஷயம் இருக்கவே செய்கிறது. விற்பனைப் பிரதிநிதிகள் அவர்களுடைய வாடிக்கையாளர்களை, பணியாளர்கள் அவர்களுடைய பாஸ்களை, லீடர்கள் தங்களுடைய நிறுவனங்களை, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கைகளை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான மாற்ற விரும்பும் விஷயம் எப்போதும் இருக்கவே செய்கிறது. ஆனால், மாற்றுவது மிகவும் கடினமானது. அறிவுறுத்தி, வசப்படுத்துமாறு பேசி, அழுத்தம் கொடுத்து, அழுத்தமாகத் தள்ளிவிட்டு எனப் பல்வேறுவிதமான முயற்சிகளைச் செய்தாலுமே மாற வேண்டியது எதுவுமே இம்மியளவுகூட மாறாது. ஏனென்றால், `மாறக் கூடாது’ என்ற குணம் மனிதர்களுக்கு இயல்பாய் இருக்கும் ஒன்று. ஒரு கல்லை அதிக அழுத்தம் கொடுத்து நகர்த்திவிட்டால், மீண்டும் அந்தக் கல் பழைய நிலைக்கு வராது. ஆனால், மனிதர்கள் கல் அல்லர். அழுத்தி நகர்த்தினால் எதிர்வினை ஆற்றுவார்கள். பொருளை வாங்கவைத்துவிட வேண்டும் என்று அழுத்தம் தந்தால், வாடிக்கையாளர் விலகிச் செல்வார்கள்.

நாணயம் புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

கேட்டலிஸ்ட்-ஆக மாறுங்கள்..!

‘‘ஆக, அதிக அழுத்தம் தருதல் நெகட்டிவ் விளைவுகளையே ஏற்படுத்தும். அப்படியென்றால் எப்படி நாம் நினைக்கும் அளவிலான மாற்றத்தைக் கொண்டு வருவது? மாற்றம் கொண்டுவர நினைப்பவர், மாற வேண்டியவர்கள் மனதிலிருக்கும் தடைகளை நீக்கி, மாறத் தேவையான நடவடிக்கைகளை அவர்களாகவே எடுக்க வைக்க வேண்டும். இதற்கு மாற்றம் கொண்டுவர நினைப்பவர்கள் வேதியியலில் பயன்படுத்தப்படும் சொல்லான `வினையூக்கி’ (Catalyst) என்பதைப் போன்ற பங்களிப்பையே தர முயல வேண்டும். ஏனென்றால், வேதியியல் மாற்றமே சுலபத்தில் மாற்றத்தை நிகழ்த்தும். கரி எப்படி வைரமாக மாறுகிறதோ, அது போன்ற வேதி மாற்றங்களால்தான் மாற்றங்கள் சாத்தியமாகும். ‘அடுத்தவர் சொல்லி மாறுவதைவிட நானாக மாறுவதன் அவசியம் உணர்ந்து மாறினேன்’ என்று நினைப்பவர்கள் மனிதர்கள் என்பதை மனதில்கொண்டு செயல்பட வேண்டும். இப்படிப்பட்ட மாற்றம்தான் நீண்டநாள்கள் தங்கியிருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

மாற்றத்தின் மகத்துவம்..!

``இந்த வேதிமாற்றம், நடக்க முடியாமலிருக்கும் தடைகளைக் குறைப்பதுதான்’’ என்கிறார் ஆசிரியர். “பொதுவாக, தடைகள் எதிர்வினைகளை உண்டாக்கும். எதிர்வினை (Reactance) ஆற்றும் குணம் கொண்ட மனிதர்களைக் கையாள்வதால், மனிதர்களை மாற்றத்தை நோக்கி அழுந்தித் தள்ளாமல் அவர்களே அவர்களை நம்பும்படி மாற்றும் வினையூக்கிகளாக (Catalyst) நாம் செயல்பட வேண்டும். இருக்கும் நிலையிலிருந்து மாறாமல் இருக்க விரும்பும் குணம் கொண்டிருக்கும் மனிதர்களை மாறாதிருப்பது சிறந்த விஷயமல்ல என்பதைப் புரியவைத்தும், மாறாதிருப்பதற்கு அவர்கள் கொடுக்கும் விலை (மாறுவதற்குத் தரும் விலையைவிட அதிகம்) என்ன என்பதையும் இந்த கேட்டலிஸ்ட்கள் மற்றவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். மேலும், எப்போதுமே மிக மிக மோசமான செயல்திறனை (உழைப்பால் வரும் Performance) விட்டே மனிதர்கள் மாற நினைப்பார்கள்.

The Catalyst: How to Change Anyone’s Mind
The Catalyst: How to Change Anyone’s Mind

அடுத்தபடியாக, மாற வேண்டிய தேவையுள்ள மனிதர்கள் அவ்வாறு மாறாமலிருப்பதால் வரும் மோசமான விளைவுகளை உணர்ந்துகொள்ள முடியாத அளவிலான தூரத்தில் இருப்பார்கள். கேட்டலிஸ்டுகளின் பணி அந்த தூரத்தைக் குறைத்து, வரும் சிக்கல்களை உணர வைப்பதாகும்.

நாணயம் புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

மாற்றத்துக்குத் தரும் விலை...

மாற்றத்தால் வரும் நல்ல விளைவுகள் நிச்சயமற்றதன்மை கொண்டவை. சந்தேக விதைகள் விதைக்கப்பட்டு, அடர்த்தியான சந்தேக மரங்கள் வளர்க்கப்பட்ட இடத்தில் மாற்றத்துக்கான காற்று என்பது முழுமையாகத் தடைப்பட்டுவிடும். அதனால், கேட்டலிஸ்ட்கள் நிச்சயமற்ற தன்மையை விளக்கி உறுதியான பலன்களை வெளிப்படையாகச் செய்ய வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

``கேட்டலிஸ்ட்கள் பல்வேறு வகையான மாற்றங்கள் தந்த பலன்களுக்கான ஆதாரங்களைத் திரட்டிக் காட்டுவதன் மூலமே மாற்றம்கொள்ள வேண்டியவர்களை நம்பவைக்க வேண்டும்’’ என்கிறார் ஆசிரியர்.

மாற்றம் நிச்சயம் வரவேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு வினையூக்கியாக மாறினால் மட்டுமே அதைக் கொண்டுவர முடியும் என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் நிச்சயம் ஒரு முறை படித்துப் பயன் பெறலாம்.

- நாணயம் விகடன் டீம்