Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : மனம் மயக்கும் பேச்சு மந்திரம்!

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் ஷெல்ஃப்

கற்றுக்கொள்ளும் வழிகள்!

னித வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கம்யூனிகேஷனை உள்ளடக்கியதே. அன்றாடம் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் நாம் கேள்விகளைக் கேட்டு, படித்து, விளக்கி, எழுதி, வாதிட்டு, விவாதித்து முடிவெடுக்கிறோம்.

இதைச் சிறப்பாகச் செய்வதற்கான விதிமுறைகளும் கருவிகளும் இருந்தாலும், அவை குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. அந்த விதிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துச்சொல்கிறது இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் மைக்கேல் குரோஜெரஸ் (Mikael Krogerus) மற்றும் ரோமன் ஸ்சாப்பெல்லர் (Roman Tschappeler) ஆகிய இரு எழுத்தாளர்கள் இணைந்து எழுதிய ‘தி கம்யூனிகேஷன் புக்: 44 ஐடியாஸ் ஃபார் பெட்டர் கான்வர்சேஷன்ஸ் எவ்ரி டே’ என்ற புத்தகம்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆறு அம்சங்கள்

டாக்டர் ராபர்ட் சியால்டினி (Robert Cialdini) என்ற அமெரிக்க சைக்காலஜிஸ்ட் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை ஒரேயொரு விஷயம் குறித்து ஆராய்வதற்காகச் செலவிட்டார். மனிதர்கள் ‘சரி/ஆம்’ (Yes) என்று ஏன் சொல்கிறார்கள் என்பது அந்த ஆய்வு. அந்த ஆய்வின் விளைவாக அவர் ஆறு அம்சங்களைக் கண்டறிந்தார். ஒருவர் சொல்லும் விஷயங்களை மற்றொருவர் ஒப்புக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஆறு அம்சங்களில் ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது. பரஸ்பரம் மாற்றிக்கொள்ளுதல், அதிகாரம், இசைவு, பொதுவான சம்மதம், பற்றாக்குறை, விருப்பம் ஆகியவை அந்த ஆறு அம்சங்கள். அவை குறித்துக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

`` `பரஸ்பரம் மாற்றிக்கொள்ளுதல்’ என்பது, நீங்கள் உங்களுக்கு உகந்தது எது என்று நினைக்கிறீர்களோ அதை மற்றவர்களுக்குச் சொல்லும்போது, அது ஒப்புக் கொள்ளப்படுகிறது. `அதிகாரம்’ என்பது, ஒரு நிபுணராக ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அது ஒப்புக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, மருத்துவர் ஒருவர் இன்ன மருந்தைச் சாப்பிடுங்கள் என்று சொல்வது. `இசைவு’ என்பது தொடர்ந்து ஒரு விஷயம் நிலையாக இருக்கும்போது (சொல்லும் செயலும் ஒரே மாதிரி இருக்கும்படி நடத்திச் செல்லும்போது) அது ஒப்புக்கொள்ளப்படுகிறது. `பொதுவான சம்மதம்’ என்பது மனிதர்கள் மந்தை மனநிலையைக்கொண்டிருப்பவர்கள் என்பதால், மற்றவர்கள் அந்த விஷயத்தைச் செய்கின்றனர் என்று குறிப்பிட்டுக் காட்டும் போது அது ஒப்புக்கொள்ளப்படுகிறது. `பற்றாக்குறை’ என்பது நீங்கள் சொல்வது எதைத் தரும் என்பதைவிட, அதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் நீங்கள் எதை இழப்பீர்கள் என்று சொல்லும்போது அந்த விஷயம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. `விருப்பம்’ என்பது விரும்பும் நபர்கள் சொல்வதை இந்த உலகத்தில் ஒருவரும் மறுப்பதில்லை. எனவே, மற்றவர்கள் விரும்பும் நபராக நீங்கள் இருந்து, ஒரு விஷயத்தைச் சொன்னால், அது மற்றவர்களால் ஒப்புக் கொள்ளப்படுகிறது’’ என்று விளக்குகிறது இந்நூல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மீட்டிங்குகள் ஏன் சீக்கிரம் முடிவதில்லை?

மீட்டிங்குகள் குறித்து விரிவாகப் பேசும் அடுத்த அத்தியாயத்தில், அவை ஏன் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன என்பதை விளக்குகிறது. ``மீட்டிங்குகளுக்கான காரணம் என்னென்ன என்பதைப் பின்வரும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். (1) தகவல்களைச் சொல்ல (2) ஒரு விஷயம் குறித்து விவாதிக்க (3) ஒரு விஷயம் குறித்து அனுமதி கேட்க. இந்த அளவுக்குத் தெளிவாகப் பிரிக்க முடிந்தாலும் ஏன் மீட்டிங்குகள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன என்றால், பங்கேற்கும் ஒவ்வொருவரும் அந்த மீட்டிங் எந்த வகைப்பட்டது என்பதில் ஒருமித்த கருத்து இல்லாமல் இருப்பதால்தான். ஒவ்வொருவரும் அந்த மீட்டிங் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தது என்று புரிந்துகொள்வதாலேயே மீட்டிங்குகள் முடிவதற்கு நீண்ட நேரமாகிறது. ஒரு வேலை என்பது, கைவசம் எவ்வளவு நேரம் இருந்தாலும் அது முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளக்கூடியது என்பதை மீட்டிங் நடத்துபவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டால் மீட்டிங்குகள் பயனுள்ளவையாக அமையும்’’ என்கிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

``மீட்டிங்குகளில் புரிந்துகொள்வதற்காகக் கேட்கப்படும் கேள்விகள், மீட்டிங்கின் மூலம் முயற்சி செய்யப்படும் விஷயத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகக் கேட்கப்படும் கேள்விகள் (எல்லோருக்கும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறதா... போன்றவை) மற்றும் ஒருவருக்கு எந்த அளவுக்குப் புரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக் கேட்கப்படும் கேள்விகள் ஆகிய மூன்று வகையான கேள்விகளே கேட்கப்பட வேண்டும். அதேசமயம், இவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கவும் கூடாது. அப்படிச் செய்தால் மீட்டிங் முடிய வெகு நேரம் ஆகத்தான் செய்யும்’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

The Communication Book
The Communication Book

மீட்டிங்கில் பாஸ் எப்படிப் பேச வேண்டும்?

அடுத்தபடியாக, ஒரு பாஸாக எப்படி உங்களுடைய குழுவுடன் நீங்கள் பேச வேண்டும் என்பதைச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். ‘‘ஒரு நிமிடம் நீங்கள் கண்ணை மூடி உங்கள் பழைய பாஸ்களைப் பற்றி யோசியுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் உங்களிடம் பேசினார்கள், அப்படிப் பேசியதில் உங்களுக்கு மிகவும் எரிச்சலூட்டியது எது என்பதை நினைவுகூர்ந்து கொண்டால் அதுவே போதுமானது.

உங்களுடைய சிறந்த பாஸ் நிறைய சாதித்தவராக மட்டுமல்லாமல், நல்ல கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் இருந்திருப்பார். பொதுவாக, குற்றம் கண்டுபிடித்துப் பேசாமலும், சற்றுப் புகழ்ந்து பேசுவதும் சிறப்பு’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் சொல்வதை எப்படி ஒப்புக்கொள்ள வைப்பது?

‘‘உங்களுடைய ஐடியாவை ஒரேயடியாக முழுமையாகச் சொல்லவே கூடாது. சுலபத்தில் செரிமானமாகும்படி சின்னச் சின்ன துண்டுகளாக அதைப் பிரித்து சொல்ல ஆரம்பித்தால், எப்பேர்ப்பட்ட ஐடியாவுக்கும் மற்றவர்களின் ஒப்புதலைப் பெற முடியும்’’ என்கின்றனர் ஆசிரியர்கள். ``உதாரணமாக, ஒரு ட்ரக்கை (லாரி) யாராவது தூக்கிச் செல்ல முடியுமா... முடியாது. அதே ட்ரக்கை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துவிட்டால் யார் வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம் அல்லவா... அதேபோலத்தான்’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

மனம் மயக்கும் பேச்சு மந்திரம்
மனம் மயக்கும் பேச்சு மந்திரம்
``நல்ல பேச்சு என்பது மற்றவர்களைக் கேட்கத் தூண்டும்படியும், கேட்பவர்களின் மனதை மாற்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அந்த மாற்றம், அவர்களாகவே செய்துகொண்டது என்பது போன்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டும்’’ என்கின்றனர் ஆசிரியர்கள்.

மிகக் கடிமான விஷயங்களை எப்படிக் கதையாகச் சொல்லிப் புரியவைப்பது, ஒரு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை எப்படிச் செய்வது, எப்படி அடித்து நகர்த்தி காரியங்களைச் செய்வது, எப்படி ஒரு விஷயத்தைக் காது கொடுத்துக் கேட்பது, முன்பின் தெரியாத புதியவர்களிடம் எப்படிப் பேச்சுக் கொடுப்பது, சொல்லுக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படி உறவுகளைப் பிளவுபடாமல் இருக்கச் செய்வது, எப்படி நல்ல கேள்விகளைக் கேட்பது, பல்வேறு விதமான மனிதர்களிடமிருந்து எப்படி இடைவெளியைக் கடைப்பிடிப்பது, எப்படி குழந்தைகளிடம் பேசுவது (உங்களுக்குக் குழந்தைகள் இல்லாவிட்டால்கூட) உள்ளிட்ட பல விஷயங்களுக்கான தெளிவான பதிலைத் தருகிறது இந்தப் புத்தகம்.

இன்றைய சூழலில் மிக முக்கிய விஷயமான கம்யூனிகேஷன் திறனை வளர்ப்பதற்கான நல்ல பல விஷயங்களைச் சொல்லும் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை அவசியம் படித்துப் பயன் பெறலாம்!

- நாணயம் விகடன் டீம்