Published:Updated:

நாணயம் புக் ஷெல்ஃப் : திறமையை எடைபோடுவது எப்படி..? - விரிவான அலசல்

நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்

நிறைய சுயசிந்தனை கொண்டிருக்கும் நபர்களே வெற்றிக்கான சரியான வித்துகளை இடுபவர்களாக இருக்கின்றனர்.

நாணயம் புக் ஷெல்ஃப் : திறமையை எடைபோடுவது எப்படி..? - விரிவான அலசல்

நிறைய சுயசிந்தனை கொண்டிருக்கும் நபர்களே வெற்றிக்கான சரியான வித்துகளை இடுபவர்களாக இருக்கின்றனர்.

Published:Updated:
நாணயம்  புக் ஷெல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் புக் ஷெல்ஃப்
ருவரின் திறமையைக் கண்டறிய ஒவ்வொருவரும் ஒரு உத்தியைப் பின்பற்றுவார்கள். பொதுவாக, நிறுவனங்களில் புதிதாகப் பணிக்கு அமர்த்த நடக்கும் நேர்காணல்களின்போது ஒரு சில நிர்வாகிகள், ‘‘அந்த ஆளை என்னிடம் ஐந்து நிமிடம் அனுப்புங்கள்.

அவர் சரிப்பட்டு வருவாரா, மாட்டாரா என்று அளந்து பட்டென்று சொல்லிவிடுகிறோம்’’ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள், தங்களுடைய உள்ளுணர்வால் ஒரு நபரின் திறன் குறித்து கணிக்க முடியும் என்பதில் பெரும் நம்பிக்கைகொண்டிருப்பவர்கள். அப்படி கணிப்பது என்பது சாத்தியமே இல்லை என்பதையும், திறமை என்றால் என்ன, அதை எடைபோடுவது எப்படி என்பதையும் விளக்கமாகச் சொல்கிறது இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தவிருக்கும் `தி டேலன்ட் டெல்யூஷன்’ (The Talent Delusion) என்ற புத்தகம்.

நாணயம்  புக் ஷெல்ஃப் : திறமையை எடைபோடுவது எப்படி..? - விரிவான அலசல்

தவறான நபரை வேலைக்குத் தேர்ந்தெடுத்தால்..?

‘‘பிரச்னைகள் இல்லாத நிறுவனங்களே இல்லை. எல்லா நிறுவனங்களிலும் கண்டிப்பாகப் பணியாளர்கள் குறித்த பிரச்னைகள் இருக்கும். யாரைத் தேர்வு செய்வது என்பதில் ஆரம்பித்து, எப்படி நிர்வகிப்பது, யாருக்குப் பதவி உயர்வு கொடுப்பது, எப்படி ஊக்குவிப்பது, எப்படி அவர்களை வளர்த்தெடுப்பது, எப்படித் தக்கவைத்துக்கொள்வது, யாரை வேலையைவிட்டுத் தூக்குவது என்பது வரையிலான பல கேள்விகளும் சிக்கல்களும் எல்லா நிறுவனங்களிலும் இருக்கும். உளவியல் என்பதுதான் இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான விடை என்ற போதிலும், பெரும்பாலான நிறுவனங்கள் இதைக் கண்டுகொள்வதே இல்லை. இதன் விளைவாக, சரியான நபரைப் பணியில் அமர்த்தவும், தக்கவைத்துக் கொள்ளவும் முடியாமல், தவறான நபரைப் பணியில் அமர்த்திவிட்டு, அவரை வேலையைவிட்டுத் தூக்கவும் முடியாமல், பணியிலிருக்கும் சரியான நபருக்கு உரிய மரியாதையைச் (சம்பள மற்றும் பண உயர்வு) செய்யவும் முடியாமல் அவர்களைக் குமையவிட்டு நிறுவனங்கள் பல்வேறுவிதமான தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. இந்தரீதியில் நடக்கும் தவறுகளால் நல்ல பணியாளர்களுக்குச் சரியான தலைவர்கள் கிடைக்காமல் போய், நிறுவனத்தின் உற்பத்தித் திறனை முடக்கிப் போட்டுவிடும் நிலை ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம், ‘ஆட்களை என்னால் எடைபோட்டுவிட முடியும்’ என்று பலரும் ஆழமாக நம்பும் மூடநம்பிக்கைதான். உளவியல் எனும் அறிவியலை இது போன்ற விஷயங்களில் சரியான பாதையில் செல்வதற்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், குறைந்தபட்சம் தவறான பாதையில் செல்லாமல் தவிர்ப்பது எப்படி என்பதை நிறுவனங்களும் நிர்வாகிகளும் கட்டாயம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் தோமஸ் சாமோரோ-பிரீமியூஸிக் (Tomas Chamorro-Premuzic).

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திறமை மீதான போர்!

“இருபது வருடங்களுக்கு முன்னர் மெக்கென்ஸி நிறுவனம் `திறமைக்கான போர்’ (War for Talent) என்ற சொற்றொடரை அறிமுகம் செய்தது. `நிறுவனங்கள் பிரச்னையில்லாமல் அமைதியாகச் செயல்பட திறமை தேவை. எனவே, திறமையைக் கண்டுபிடிப்பதற்கான போர் இது’ என்றார்கள். ஆனால், இந்தப் போரை ஆரம்பித்து இருபது வருடங்களாகியும் அமைதி தோன்றவில்லை. வேலையை ஒரு சுமையாக நினைத்துச் செய்யும் நபர்கள், திறமையிருந்தும் `நல்ல வேலை வேண்டும்’ என்ற கனவை மட்டும் வைத்துக்கொண்டு வேலை தேடாமல் கம்மென்று இருக்கும் நபர்கள், பணியிடத்தில் ஏற்கெனவே கிடைத்த கசப்பான அனுபவத்தால் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு வாழ நினைக்கும் திறமையானவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களிடையே நமக்குத் தேவையான திறமைகளைக்கொண்டிருக்கும் நபர்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. எனவே இதை, `திறமைக்கான போர்’ என்பதைவிட, `திறமை மீதான போர்’ (War on Talent) என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

நாணயம்  புக் ஷெல்ஃப்
நாணயம் புக் ஷெல்ஃப்

திறமை என்பது என்ன?

“ `நாம் திறமைசாலியாக இருக்க வேண்டும், அதை மற்றவர்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும், அதை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று நினைக்கும் அதே நேரத்தில், நம்மால் நம்முடைய திறமையையோ அல்லது மற்றவர்களுடைய திறமையையோ சரியாக அளவீடு செய்வதற்கான அளவுகோல்களை நாம் ஒருபோதும் பயன்படுத்துவது கிடையாது. திறமையைக் கண்டறிந்து, வளர்த்தெடுத்து, காசாக்குவதுதான் இன்றைய நிறுவனங்களின் அடித்தளமாக இருப்பதால், நாம் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் காலத்தில் இருக்கிறோம்.

திறமைக்கான ஊக்குவிப்பு!

நிறுவனம் பணம் செலவழித்து, பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்து, தகுதியை உயர்த்தி அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போவது என்பது பயிற்சி பெறாத பணியாளர்களைப் பணியில் வைத்திருப்பதற்குச் சமமான ஒன்று. திறமையைக் கணக்கிடும் பழைய முறையில், சுயசிந்தனையை அதிகம் பயன்படுத்தும் இன்றைய பணியாளரின் திறனைச் சரியாகக் கணக்கிட முடியாது. நிறைய சுயசிந்தனை கொண்டிருக்கும் நபர்களே வெற்றிக்கான சரியான வித்துகளை இடுபவர்களாக இருக்கின்றனர். மேலும், எந்தவொரு நிறுவனத்திலும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலிருக்கும் திறமையான நபர்களே ஒட்டுமொத்த செயல்பாட்டில் அதிகப்படியான பங்களிப்பை (லாபம் தரத்தக்க) தருபவர்களாக இருப்பார்கள் (பார்க்க: மேலேயுள்ள வரைபடம்).

நாணயம்  புக் ஷெல்ஃப் : திறமையை எடைபோடுவது எப்படி..? - விரிவான அலசல்

திறமை என்பது பெரிய விஷயங்களை எளிதாகச் (பெருமுயற்சியின்றி) செய்து முடிப்பதிலேயே இருக்கிறது. இதில் முக்கியமான விஷயம், ஊக்குவிப்புதான். சமதிறன் இருக்கும் நபர்களிடையே அதிக அளவில் ஊக்குவிப்பு சிந்தனைகொண்டவரே சிறப்பான செயல்பாட்டைக்கொண்டிருப்பார். ஊக்குவிப்பு அதிகம்கொண்ட இருவரின் மத்தியில் அதிகமான செயல்திறன் கொண்டிருப்பவரே அதிக உற்பத்தித்திறனை அளிப்பவராக இருப்பார். ஒரு மனிதருடைய செயல்திறனின் உச்சத்தை நிர்ணயிப்பது திறமை என்பதையே இது காட்டுகிறது” என்கிறார் ஆசிரியர்.

The Talent Delusion
The Talent Delusion

திறமையை எப்படி அளவிடுவது?

திறமையை அளவீடு செய்வதற்கு தனி அத்தியாயத்தையே ஒதுக்கியிருக்கிறார் ஆசிரியர். அனைவருக்கும் பிடித்தவராக இருத்தல் (Rewarding), செயலாற்றும் வல்லமை (Able), மனமுவந்து முயல்தல் (Willing), ஐ.க்யூ சோதனை (IQ test), பர்சனாலிட்டி டெஸ்ட் போன்றவற்றைத் திறமையின் அங்கங்களாகச் சொல்லும் ஆசிரியர், இவை குறித்த நுணுக்கமான பல அம்சங்களை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.

திறமையை ஈடுபாட்டுடன் நிறுவனத்தின் பணிகளில் பயன்படுத்தி செயல்படச் செய்வது எப்படி, திறமையை எப்படி வளர்த்தெடுப்பது, எதிர்காலத்தில் திறமை என்பது எப்படி இருக்கும், திறமை எப்படி அளவீடு செய்யப்படும் என்பதையெல்லாம் விளக்கமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம். `நிறுவனத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என நினைக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒரு முறை படிக்கலாம்.

- நாணயம் விகடன் டீம்