நாணயம் விகடன் நடத்தும் பிசினஸ் ஸ்டார் அவார்டு நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடக்க இருக்கிறது.
நாணயம் விகடன் வார இதழ் பிசினஸ் ஸ்டார் அவார்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. சரித்திரம் படைத்த பிசினஸ் சாதனையாளர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது.
பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மாஸ்க் என உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர்களின் சாதனை நாம் பேசுகிறோம். இந்திய அளவில் பெரும் தொழிலதிபர்களின் சாதனைகளையும் நாம் பேசத் தவறியதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலும் பல முக்கியமான பிசினஸ்மேன்கள் உருவாகி, நம் நாட்டின் பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறார்கள்; இன்றும் உயர்த்தி வருகிறார்கள்.

அது மாதிரியான தொழில்முனைவோர்களைப் பாராட்டி கெளரவிப்பதற்காகவே இந்த விருது வழங்கப்படுகிறது.
ஒன்பது முக்கியமான பிரிவுகளில் முக்கியமான தொழிலதிபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. லைஃப்டைம் அச்சீவ்மென்ட் அவார்டு, செல்ஃப்மேட் ஆன்ட்ரபிரினர் அவார்டு, பிசினஸ் மென்டார் அவார்டு, பிசினஸ் மென்டார் அவார்டு (இன்ஸ்ட்டிடியூஷன்), ஃபீனிக்ஸ் அவார்டு, பிசினஸ் கார்ப்பரேட் கான்சியஸ் அவார்டு, பிசினஸ் இன்னோவேஷன் அவார்டு, பிசினஸ் ரைசிங் ஸ்டார் அவார்டு, ஸ்டார்ட் அப் சேம்பியன் அவார்டு என ஒன்பது கேட்டகிரியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த ஆண்டுகளில் சுந்தரம் பாசர்னஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா, ஜி.ஆர்.டி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன், முருகப்பா குருப் நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.முருகப்பன், டி.டி.கே குருப் நிறுவனத்தின் தலைவர் ஜகந்நாதன், கே.பி.ஆர் நிறுவனத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைவர் செளந்தர்ராஜன், பொன்ப்யூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொன்னுசுவாமி, கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன், ஃப்ரெஸ்டெஸ்க் நிறுவனத்தின் சி.இ.ஒ க்ரிஷ் மாத்ருபூதம், கிஷ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஒ சுரேஷ் சம்பந்தம் உள்பட பலரும் இந்த விருதினைப் பெற்று, கெளரவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு எட்டு கேட்டகிரிகளில் எட்டு முக்கியமான தொழிலதிபர்கள் கெளரவிக்கப்பட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன் பங்கேற்கப் போகிறார்.
இந்த ஆண்டும் நடக்கவிருக்கும் இந்து விருது வழங்கும் நிகழ்ச்சியை எல்.ஐ.சி நிறுவனம் முக்கியமான ஸ்பான்சராக உள்ளது. க்ரிப்டோ பார்ட்னராக பி.என்.பி டாக்ஸ் நிறுவனமும், அசோசியேட் ஸ்பான்சராக பூம் கார்ஸ் நிறுவனமும் இருக்கப் போகின்றன!