Published:Updated:

கேள்வி - பதில்: நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அணுக வேண்டும்?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

தெளிவான வழிகாட்டல்

ஒருவருக்கு நுகர்வோர் தொடர்பான பிரச்னைகள் இருக்கும்பட்சத்தில், பிரச்னையின் எந்த நிலையில் அந்த நபர் நுகர்வோர் அமைப்புகள் அல்லது நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக வேண்டும்?

- கே.வனிதா, முக்கூடல்

எஸ்.சரோஜா, சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்

“நுகர்வோருக்கு ஏதாவது பிரச்னைகள் இருப்பின், முதலில் பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்துக்கோ அல்லது சேவை வழங்குபவருக்கோ எழுத்துபூர்வமாக பிரச்னைகளைத் தெரியப்படுத்தி தீர்வுகோர வேண்டும்.

அப்போது,

பிரச்னைகளுக்கான புகார் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (பில், வாரன்டி கார்டு, ஒப்பந்தப் பத்திரம் உள்ளிட்ட அனைத்துவிதமான ஆவணங்கள்) பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
கேள்வி - பதில்: நுகர்வோர் எப்போது நீதிமன்றத்தை அணுக வேண்டும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் எதுவும் நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது கொடுக்கப்பட்ட பதில் நுகர்வோருக்குச் சாதகமாக இல்லையென்றாலோ, பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகளையோ அல்லது குறைதீர் மன்றங்களையோ அணுகலாம். இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்குமானால், நுகர்வோர் தொடர்பான வழக்குகளைக் கையாளக்கூடிய வழக்கறிஞர் ஒருவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.”

நான் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவருகிறேன். அடுத்த ஆண்டு தனியாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். நான் என் நிறுவனம் சார்பில் என் பி.எஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்த முடியுமா?

- முத்துராஜ், குடந்தை

ஆர்.கணேஷ், உதவி பி.எஃப் கமிஷனர், வேலூர்

“தனியே தொடங்கப்படும் நிறுவனத்தின் தனி முதலாளியாக (Sole Proprietor) இருப்பின், அதில் நீங்கள் உங்களுக்காக பி.எஃப் சந்தா செலுத்த இயலாது. ஆனால், அந்த நிறுவனத்தில் செய்யும் வேலைக்காகச் சம்பளம் வாங்கும் பங்குதாரராகவும் (Partner or Director in dualcapacity, receiving wages) நீங்கள் இருப்பீர்கள் எனில் அந்த ஊதியத்துக்கான மாதாந்தர வைப்பு நிதியைச் செலுத்த முடியும்.”

என்னிடம் ரூ. 10 லட்சம் இருக்கிறது. என் முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகள். இப்போது ஸ்மால்கேப் ஃபண்டுகளில் மொத்த முதலீட்டை மேற்கொள்வது லாபகரமாக இருக்குமா?

- சு.பாலசுப்பிரமணியன், விழுப்புரம்

எஸ்.ராமலிங்கம், பார்ட்னர் என்.ஜே இந்தியா.

“ரூ.10 லட்சத்தை ஐந்து வருடங்களுக்குக் குறையாமல் முதலீடு செய்பவராகவும், அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முதலீட்டாளராகவும் இருக்கும் பட்சத்தில் ரூ 2.5 லட்சம் வீதம் ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் மற்றும் கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரூ.17 லட்சம் எதிர்பார்க்கலாம்.

ஓரளவு ரிஸ்க் எடுப்பவராக இருந்தால், ரூ.2 லட்சம் வீதம் ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்டுகளிலும், மீதமுள்ள ரூ.6 லட்சத்தை மூன்றாகப் பிரித்து ரூ.2 லட்சம் வீதம் பி.ஜி.ஐ.எம் இந்தியா டைவர்சிஃபைடு ஃபண்ட், கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ மேக்னம் மல்ட்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.

ஆண்டுக்குச் சராசரியாக9-10% வருமானம் கிடைத்தால், ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை எதிர்பார்க்கலாம். முதலீட்டை ஆண்டுக்கு ஒரு முறையாவது மதிப்பீடு செய்து வாருங்கள்.”

எஸ்.சரோஜா - ஆர்.கணேஷ் - எஸ்.ராமலிங்கம்
எஸ்.சரோஜா - ஆர்.கணேஷ் - எஸ்.ராமலிங்கம்

அதிகமாக டிவிடெண்ட் தரும் பட்டியலிடப்பட்ட பங்குகளில் அதிக தொகையை முதலீடு செய்துள்ளேன். எனக்குக் கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி எதுவும் செலுத்த வேண்டுமா?

- எ.மகேஷ்வரன், தேனி

கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர்

“பட்ஜெட் 2020-21-ன்படி, முதலீட்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு முதலீட்டாளர் வரி செலுத்த வேண்டும். இந்த டிவிடெண்ட் தொகை ஒருவரின் வருமானத்துடன் வீட்டு வாடகை போன்ற இதர வருமானம் என்ற கணக்கில் சேர்க்கப்படும்.

இந்த வருமானத்துக்கு ஒருவரின் அடிப்படை வருமான வரம்புக்கேற்ப வரி செலுத்த வேண்டி வரும். மேலும், நிதியாண்டில் டிவிடெண்ட் வருமானம் 5,000 ரூபாயைத் தாண்டும்போது மூலத்தில் 10%வரிப் பிடித்தம் (டி.டிஎஸ்) செய்யப்படும்.”

என்னிடம் ரூ. 5 லட்சம் இருக்கிறது. நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதற்கு பதிலாக கில்ட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், கூடுதல் வருமானம் கிடைக்குமா?

- வேலுச்சாமி, விழுப்புரம்

கோவர்தனன் பாபு, நிதி ஆலோசகர்

“கில்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறிப்பிட்ட காலங்களில் நல்ல வருமானம் அளிக்கும். அரசுக் கடன் பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்வதால், `கவர்ன்மென்ட் செக்யூரிட்டீஸ் ஃபண்ட்’ என்றும் கூறுவார்கள்.

வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்துவரும் காலங்களில், கில்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நல்ல லாபம் தரும். வங்கிகளில் வட்டி ஏறும் காலத்தில், சுமாரான லாபம் அல்லது நஷ்டம் இருக்கும்.

கில்ட் மியூச்சுவல் ஃபண்டில் வருமான ஏற்ற இறக்க ரிஸ்க் உண்டு. தற்போது, வட்டி விகிதம் கணிசமாகக் குறைந்துவிட்டது.

தாங்கள், தற்போது முதலீடு செய்யலாம். அதே நேரத்தில், இனி கடனுக்கான வட்டி குறையாது என்ற நிலையில், இதில் மேற்கொண்டு முதலீடு செய்ய வேண்டாம்.”

கே.ஆர். சத்தியநாராயணன் - கோவர்தனன் பாபு - எஸ்.ஸ்ரீனிவாசன்
கே.ஆர். சத்தியநாராயணன் - கோவர்தனன் பாபு - எஸ்.ஸ்ரீனிவாசன்

என்னுடய வயது 30. மாதச் சம்பளத்தில் பணியாற்றிவருகிறேன். ஓரளவுக்கு என்னால் ரிஸ்க் எடுக்க முடியும். 15 ஆண்டுகள் என்ற இலக்குவைத்து முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எனக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எவை?

- எல்.ரம்யா, சிவகாசி

எஸ்.ஸ்ரீனிவாசன், நிதித் திட்டங்கள் விநியோகஸ்தர், மணிகேர்

“உங்களின் கேள்வியிலுள்ள தெளிவு வரவேற்கப்படுகிறது. நீங்கள் 15 வருடங்களுக்கு மாதந்தோறும் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

உங்களால் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதால், லார்ஜ்கேப் ஃபண்ட் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் கலந்து முதலீடு செய்யலாம்.

லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில், ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் அல்லது கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

மிட்கேப் ஃபண்ட் என்கிறபட்சத்தில் பி.ஜி.ஐ.எம் மிட்கேப் அல்லது ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com