Published:Updated:

நகை மற்றும் ரத்தினங்களின் ஏற்றுமதி மீண்டும் அதிகரிப்பு!

ரத்தினங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ரத்தினங்கள்

ஏற்றுமதி

நகை மற்றும் ரத்தினங்களின் ஏற்றுமதி மீண்டும் அதிகரிப்பு!

ஏற்றுமதி

Published:Updated:
ரத்தினங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ரத்தினங்கள்

முத்து, பவளம், வைடூரியம் உள்ளிட்ட ரத்தினங்கள் மற்றும் ரத்தின ஆபரணங் களும் இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன. 2021 டிசம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து மொத்தம் 3,040.92 மில்லியன் டாலர் மதிப்பிலான நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 2020 டிசம்பர் மாத ஏற்றுமதியைவிட 29% அதிகம் ஆகும். 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 2,348.44 மில்லியன் டாலர் மதிப்புக்கு நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன.

ரூபாய் மதிப்பு அடிப்படையில் ரத்தினங் களின் ஏற்றுமதி ரூ.16,712 கோடியிலிருந்து ரூ.22,915 கோடியாக அதிகரித்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி 6% அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு மொத்தம் 29,084 மில்லியன் டாலர். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2.16 லட்சம் கோடி.

நகை மற்றும் ரத்தினங்களின்
ஏற்றுமதி மீண்டும் அதிகரிப்பு!

ஆனால், தங்க நகைகளுக்கான ஏற்றுமதி 25% வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதாவது, 2019-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, சுமார் 9,270.94 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், 2020-ம் ஆண்டின் டிசம்பரில் அது 3,065.88 மில்லியன் டாலராகக் குறைந்தது. 2021-ல் மீண்டும் 6,915.21 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டின் ஏற்றுமதியுடன் ஒப்பிட்டால் இது 25% குறைவு.

இன்றைய நிலையில், ரத்தினங்கள் மற்றும் அதன் ஆபரணங்களை அமெரிக்கா, ஹாங்காங், தாய்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன.

கடந்த 2021-ம் ஆண்டின் இறக்குமதி செய்ததிலும் இந்த நாடுகளின் பங்கு அதிகமாக இருப்பதாக நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism