Published:Updated:

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் பிசினஸ் பிராண்டாக மாறியது எப்படி..?

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

மார்க்கெட்டிங்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் பிசினஸ் பிராண்டாக மாறியது எப்படி..?

மார்க்கெட்டிங்

Published:Updated:
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
பிரீமியம் ஸ்டோரி
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண நிகழ்ச்சியானது ஓ.டி.டி தளம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. இது எப்படி சாத்தியம் என டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணரான சக்திவேல் பன்னீர் செல்வத்திடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.

“சமூக வலைதளங்கள் தனிப்பட்ட ஒருவரின் தகவல்களைப் பகிரும் இடமாக இருந்து, விளம்பரம் செய்யும் ஓர் இடமாக மாறி, இன்று பல கோடி ரூபாய் பிசினஸ் செய்யும் இடமாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் அதிக ஃபாலோயர்கள் கொண்டவர்களை ‘இன்ஃப்ளூயன்சர்’கள் என்பார்கள். இந்த ‘இன்ஃப்ளூயன்சர்’களை ஒரு பிராண்டை சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்து வதன்மூலம், அந்த பிராண்ட் மக்களை எளிதில் சென்றடையும். மேலும், ‘இன்ஃப்ளூயன்சர்’களும் வருமானம் ஈட்டும் மார்க்கெட்டிங் டெக்னிக் தற்போது டிரெண்டாக உள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன் - விக்கி போன்ற திரைப் பிரபலங்களைப் பொறுத்தவரை, அவர்கள் ‘இன்ஃப்ளூயன்சர்’கள் என்பதைத் தாண்டி மக்கள் அவர்களை ‘செலிபிரெட்டி’களாகக் கொண்டாடுகிறார்கள். அதனால் அவர்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மக்களுக்கு எப்போதும் இருக்கும். குறிப்பாக, நயன்தாரா எந்த சமூக வலைதளங்களிலும் தனி அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை. நயனின் புகைப்படம் தொடங்கி, தகவல்கள் வரை அனைத்துமே விக்னேஷ் சிவன்தான் பகிர்வார். நயன், பெரும்பாலும் பேட்டி எதையும் தருவதில்லை. அடிக்கடி எந்த அவார்டு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. அதனால் நயன்தாரா பற்றிய செய்தி பகிரப்படும்போதெல்லாம் மக்கள் அதைப் படிப்பதில் அலாதியான ஆர்வம் காட்டுகிறார்கள்.

நயன்தாரா அணியும் ஆடை தொடங்கி, ஹேர் ஸ்டைல் தொடர்பாக என்ன செய்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள சமூக வலைதளங்களில் பெண்கள் கூட்டம் காத்துக்கிடக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக விக்னேஷ் சிவன் பகிரும் சில புகைப்படங்கள் நயன் - விக்கியை ‘ரொமான்டிக் கப்பிள்ஸ்’ இடத்துக்குக் கொண்டு செல்ல ஆரம்பித்தது.

சக்திவேல் 
பன்னீர் செல்வம்
சக்திவேல் பன்னீர் செல்வம்

இவ்வாறு மக்களின் ஆர்வத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, திருமணம் என்னும் மையப்புள்ளியில் நிறுத்தி, அதை பிசினஸாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் திருமணத்துக்குக் குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.

‘இப்படி திருமணத்தைக் கூட விற்று காசு பார்க்க வேண்டுமா’ என்பது பல நெட்டிஷன்களின் கருத்தாக இருந்தது. வாய்ப்பு இருக்கும்பட்சத்தில், அதை பிசினஸாக மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. இது அந்தத் தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பமும்கூட, மேலும், இதனால் கூட்ட நெரிசல் இருக்காது.

சில ஆண்டுகள் முன்பு சினேகா - பிரசன்னா தங்களுடைய திருமண வீடியோக்களை ஒளிபரப்ப ஒரு சேனலுக்கு மட்டும் அனுமதி அளித்தனர். இப்போதைய டிரெண்டுக்கு ஏற்ப நயன் ஓ.டி.டி தளத்தில் தன்னுடைய திருமண வீடியோ கவரேஜை விற்பனை செய்துள்ளார்.

இந்தத் திருமண வீடியோவை ஒளிபரப்ப நயன் பல கோடிகள் வாங்கியிருப்பதாகச் சொல்லப் படுகிறது. வீடியோ மூலம் வரும் வருமானம் என்பதைத் தாண்டி, நயன்தாரா - விக்னேஷ் திருமணத் தன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் திருமண ஆடை, அணிகலன்கள், அவர்களுக்கு ஸ்டைலிங் செய்தவர்கள், ஈவென்ட் பிளானர் என எல்லோரையும் ‘டேக்’ செய் திருந்தனர். இதிலும் பிசினஸ் நுணுக்கங்கள் இருக்கிறது. அவர்கள் ‘டேக்’ செய்திருந்த வர்களின் சமூக வலைதள பக்கத்தை மக்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள். அதன் மூலம் அந்த பிராண்டுக்கு புதிய கஸ்டமர்களோ, ஃபாலோயர் களோ வர வாய்ப்பு உண்டு. இவ்வாறு ‘டேக்’ செய்வதற்குக் கட்டணம் வாங்கியிருக்கலாம். அல்லது சிலவற்றை ‘ஸ்பான்ஸர்’ வாங்கி இருக்கலாம். எனவே, அதிலும் வருமான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா ஒரு லிப் பாம் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும், ஒரு டீ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். எனவே, நிதி சார்ந்த விஷயங் களில் பல அனுபவங்களை பெற்றவராக இருக்கிறார்.

எப்போதும் நமக்கென இருக்கும் தனித்துவத்தை மூலதனமாகக் கொண்டே பணம் சம்பாதிக்க வேண்டும். நயன் தன்னுடைய ஐகான் ஸ்டேட்மென்ட் மூலம் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார்’’ என்றார்.

நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் வர்த்தக உலகத்தைக் கலக்கிய திருமணம் என்றால் அது கொஞ்சம்கூட மிகையில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism