Published:Updated:

Netflix: சந்தா கட்டணங்கள் அதிரடியாக குறைப்பு; சந்தை விரிவாக்க யுக்தியா?

Netflix (Representational Image)
News
Netflix (Representational Image) ( Pixabay )

மொபைல் மட்டும் என்ற திட்டத்தின் மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.199-லிருந்து ரூ.149-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பேசிக் பிளான் மாதாந்திர கட்டணம் ரூ.499லிருந்து ரூ.199 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்ட்ர்ட் பிளான் மாதாந்திரக் கட்டணம் ரூ.649-லிருந்து ரூ.499-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய ஓ.டி.டி சந்தையில் தனது தொழில் பங்களிப்பை அதிகரிக்கவும், பரவலான வாடிக்கையாளர்களைச் சென்றடையவும் அமெரிக்க ஓ.டி.டி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் தனது திட்டங்களுக்கான கட்டணங்களை அதிரடியாகக் குறைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓ.டி.டி தளமாக உள்ள அமேசான் பிரைம் விடியோ தனது சந்தா கட்டணத்தை சமீபத்தில் உயர்த்தியது. இந்நிலையில், அதை தனக்குச் சாதகமாக மாற்றி வாடிக்கையாளர்களை ஈர்க்க நெட்ஃபிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது.

மக்களின் பொழுதுபோக்கு நுகர்வு கொரோனா பாதிப்புக்குப் பிறகு பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. தியேட்டருக்குச் செல்லும் கூட்டம் குறைந்திருக்கும் அதேநேரத்தில் ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.

Netflix (Representational Image)
Netflix (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உச்ச நட்சத்திரங்களின் படங்கள்கூட நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிடும் அளவுக்கு ஓ.டி.டி தளங்களின் முக்கியத்துவம் மாறியிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அமேசானில் தொடர்ந்து பிராந்திய மொழி படங்கள் அதிகம் வெளியாகின. அதேபோல், சர்வதேச தயாரிப்புகளுக்கு பெயர் போன நெட்ஃபிளிக்ஸ் தொடர்ச்சியாக பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. மேலும், முக்கியமான பிராந்திய மொழி படங்களையும் அவ்வப்போது வெளியிடுகிறது.

படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், பின்தங்கியுள்ள டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற இன்னும் பல ஓ.டி.டி தளங்களும் இந்திய ஓ.டி.டி சந்தையில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன.

இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தனது திட்டங்களுக்கான கட்டணங்களை தற்போது அதிரடியாகக் குறைத்துள்ளது.

Netflix (Representational Image)
Netflix (Representational Image)
Pixabay

மொபைல் மட்டும் என்ற திட்டத்தின் மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.199-லிருந்து ரூ.149-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பேசிக் பிளான் மாதாந்திரக் கட்டணம் ரூ.499-லிருந்து ரூ.199 -ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்ட்ர்ட் பிளான் மாதாந்திரக் கட்டணம் ரூ.649-லிருந்து ரூ.499-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ப்ரீமியம் பிளான் மாதாந்திர் கட்டணம் ரூ.799-லிருந்து ரூ.649-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமேசான் சந்தா கட்டணங்கள் முன்பிருந்த விலையை விட 50% உயர்த்தியுள்ளது. இந்தியச் சந்தையில் அமேசான் முன்னணி இடத்தைப் பிடிக்க காரணம், அதன் குறைவான சந்தா கட்டணம்தான். ஆனால், தற்போது அதன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நெட்ஃபிளிக்ஸ் தனது கட்டணங்களைக் குறைத்தன் மூலம் இந்திய ஓ.டி.டி சந்தையின் முதல் இடத்தை அமேசானிடமிருந்து தட்டிப் பறிக்குமா என்பது போகப் போக தெரியும்.