Published:Updated:

ரிலையன்ஸ் குழுமத்தில் அடுத்தகட்டம்... முகேஷ் அம்பானி புதிய திட்டம்..!

முகேஷ் அம்பானி
பிரீமியம் ஸ்டோரி
முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் குழுமத்தில் அடுத்தகட்டம்... முகேஷ் அம்பானி புதிய திட்டம்..!

ரிலையன்ஸ்

Published:Updated:
முகேஷ் அம்பானி
பிரீமியம் ஸ்டோரி
முகேஷ் அம்பானி

நிறுவனங்கள் சிறிதோ, பெரிதோ, அதை அடுத்த தலைமுறைக்கு எப்படிக் கொண்டுபோகப்போகிறது என்பது முக்கியமான விஷயம். தனக்குப் பிறகு, தனது நிறுவனத்தை யார் நடத்த வேண்டும் என்பது குறித்த வேலையை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

பிசினஸ் பத்திரிகையான புளூம்பெர்க் இது குறித்து பெரும் கட்டுரையை வெளியிட்டிருக் கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் குடும்பம் செய்தது போல, ரிலையன்ஸ் குழுமத்தை மாற்ற முகேஷ் அம்பானி திட்டம் வைத்திருப்பதாக அந்தச் செய்தி சொல்கிறது.

வால்மார்ட் பாணியில் ரிலையன்ஸ்...

வால்மார்ட் நிறுவனத்தின் நிறுவனர் சாம் வால்டன். இவர் இறப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே, தனக்குப் பிறகு, தன் நிறுவனம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டிருந் தார். ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து, அதன் மூலம் வால்மார்ட் நிறுவனம் நடத்தப்படும். இதுபோல, ஓர் அறக்கட்டளையைத் தொடங்கி அதன்கீழ் ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, இரட்டை குழந்தைகளான ஆகாஷ், இஷா மற்றும் இளைய மகன் ஆனந்த் ஆகியோர் இயக்குநர்களாக இருப்பார்கள் எனவும், முகேஷ் அம்பானியின் நம்பிக்கையைப் பெற்ற சிலர் இந்த அறக்கட்டளையில் ஆலோச கர்களாக இருப்பார்கள். அவர்களே நிறுவனத்தை வழிநடத்துவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ரிலையன்ஸின் அடுத்தகட்டத் தலைமை குறித்து முகேஷ் அம்பானி இதுவரை வெளிப் படையாக எதையும் சொல்லவில்லை. ஆனால், கடந்த ஜூன் மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய முகேஷ், ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள அடுத்தகட்ட தலைவர்கள் (வாரிசுகள்), குழுமத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள் என்று சொன்னார்.

ரிலையன்ஸ் குழுமத்தில் அடுத்தகட்டம்... முகேஷ் அம்பானி புதிய திட்டம்..!

என்ன காரணம்..?

ரிலையன்ஸ் குழுமம் 1973-ம் ஆண்டு திருபாய் அம்பானியால் தொடங்கப்பட்டது. மிகப் பெரிய குழுமமாக வளர்ந்தது. முகேஷ் மற்றும் அனில் ஆகியோர் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்தனர். ஆனால், 2002-ம் ஆண்டு திருபாய் அம்பானி உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டதால், அண்ணன் தம்பி இரு வருக்கும் இடையே பெரும் சிக்கல் உருவானது. திருபாயின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் தலைவராக வும், அனில் துணைத் தலைவராகவும் இருந்தனர். ஆனால், பல விஷயங்கள் குறித்து முடிவெடுப்பதில் பல சிக்கல்கள் இருந்தன.

சில ஆண்டுக் காலம் இருந்த சிக்கல், 2005-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவராக இருந்த கே.வி.காமத் உள்ளிட்ட சிலர், இரு தரப்புக்கும் சுமுகமாகப் பேசி, பிரச்னையைத் தீர்த்து வைத்தனர்.

முக்கியமான எனர்ஜி பிசினஸ் முகேஷ் அம்பானி வசமும், டெலிகாம், பவர், நிதிச் சேவைகள் உள்ளிட்ட தொழில்கள் அனில் அம்பானி வசமும் இருந்தன. 2008-ம் ஆண்டு போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அனில் அம்பானி உலக அளவில் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தார். ஆனால், தற்போது அவர் எல்லா சொத்துகளையும் இழந்து, நெட்வொர்த் இல்லாத நபராக இருக்கிறார். அனிலின் குழுமத்தில் பிளவு ஏற்பட்டது மட்டுமல்லாமல், பெரும் நிதிச் சிக்கலிலும் மாட்டித் தவிக்கிறார். இவர் வசம் உள்ள அனைத்துத் தொழில்களும் நஷ்டத்திலும் கடனிலும் உள்ளன.

ஆனால், முகேஷ் அம்பானியின் செயல்பாட்டால் ரிலையன்ஸ் குழுமம் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவின் அதிக சந்தை மதிப்புடைய நிறுவனமாக ரிலையன்ஸ் உயர்ந்திருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய குழுமம், மீண்டும் ஒரு பிளவை சந்திக்கக் கூடாது என்பதற்காகத் தனக்குப் பின் ஓர் உறுதியான தலைமைக் கட்டமைப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார் முகேஷ் அம்பானி.

ஆரம்பத்தில் எனர்ஜியில் மட்டும் இருந்த ரிலையன்ஸ், தற்போது டிஜிட்டல் ரீடெயில் என விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என முகேஷ் கருதுவதாகச் செய்திகள் வெளியாகி இருக் கின்றன. மனைவி நீதா மற்றும் மூன்று குழந்தைகள் என அனைவருக்கும் ஹோல்டிங் நிறுவனத்தில் (அறக்கட்டளை) சமபங்குகள் இருக்கும் என்றும் தெரிகிறது. தற்போது ரிலையன்ஸ் மட்டுமே பட்டியலிடப்பட்ட நிறுவனம். வரும் காலத்தில் ரீடெய்ல் மற்றும் டிஜிட்டல் உள்ளிட்ட பிரிவுகளும் பட்டிய லிடப்படலாம். அப்படி நடந் தால், அனைத்து நிறுவனங் களிலும் அனைவருக்கும் சம பங்கு இருக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு வருவ தாகத் தெரிகிறது. இதனால், நிச்சயமற்ற தன்மை விலகி ரிலையன்ஸ் வளர்ச்சிக்காக அனைவரும் உழைப்பார்கள் என முகேஷ் கருதுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கேற்ப ஏற்கெனவே தனது வாரிசுகளைத் தயார்படுத்தி இருக்கிறார் முகேஷ். இரட்டையர்களான ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோர் 2014-ம் ஆண்டு முதல் இயக்குநர் களாக இருக்கிறார்கள். ஆகாஷ் டெலிகாம் பிரிவிலும், இஷா ரீடெய்ல் பிரிவிலும் இயக்குநர் களாக இருக்கிறார்கள். இளைய மகன் ஆனந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார்.

தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.16 லட்சம் கோடி. இதில் முகேஷ் அம்பானி குடும்பத்தின் பங்கு 50.6 சதவிகிதமாக இருக்கிறது. 2005-ம் ஆண்டு நடந்தது போன்று மீண்டும் ஒரு சங்கடம் தன் குடும்பத்தில் வரக்கூடாது என்பதில் முகேஷ் கவனமாகவே இருக்கிறார்!

முடிவுக்கு வராத இந்துஜா நிறுவனச் சிக்கல்..!

நூறு ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்துஜா குழும நிறுவனத்தை அடுத்து நடத்தப்போவது யார் என்கிற சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள், பல்வேறு வழக்குகளை இந்தியாவிலும் இங்கிலாந்திலும் தொடுத்து நடத்திவருவதால், இறுதி முடிவு என்பது எடுக்கப்படாமலே இந்த நிறுவனம் நடந்துவருகிறது.

எனினும், இந்த நிறுவனம் தொடர்ந்து பிசினஸில் கலக்கி வரக் காரணம், இந்த நிறுவனம் தொழில்ரீதியாக நிபுணத்துவம் பெற்ற புரொஃபஷனல்களால் நடத்தப் படுவதுதான் என்கிறார்கள் மேலாண்மைத்துறை மேனேஜர்கள். யார் நடத்தினால் என்ன, நிறுவனம் நன்கு செயல்பட்டால் போதுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism