Published:Updated:

இணைய வர்த்தகத்துக்குப் புதிய கொள்கைகள்... மத்திய அரசின் ப்ளான் என்ன?

சில விற்பனையாளர்கள் மிக அதிகமாகச் சலுகைகள் வழங்குகின்றன. அவர்களை இணைய வர்த்தக நிறுவனங்களும் ஆதரிக்கின்றன. இதனால், சிறிய வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் இணைய வர்த்தகத்துக்கான கொள்கைகளில் புதிய மாற்றங்களை இந்திய அரசு கொண்டுவரவிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இந்தியாவில் பல ஆண்டுகளாகவே இணைய வர்த்தகம் செய்து வரும் அமேசான் (Amazon) நிறுவனம், இந்தியாவில் இணைய வர்த்தகத்துக்கான விதிமுறைகளை மீறியது, குறிப்பிட்ட விற்பனையாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது. அது குறித்த செய்தியை விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அத்துமீறுகிறதா அமேசான்?
அமேசான்
அமேசான்

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு இணைய வர்த்தகத்துக்கான புதிய கொள்கைகளைக் கொண்டுவரவிருப்பதாகத் தெரிகிறது. அமேசான் நிறுவனம், மேற்கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து, தாங்கள் இந்திய அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டே நடக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய விதிமுறைகளில், அனைத்து விற்பனையாளர்களுக்கும் சமமான வழிமுறைகள் இருக்க வேண்டும், குறிப்பிட்ட விற்பனையாளர்கள் மட்டும் பயன்பெறக்கூடிய வகையில் இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றக் கூடாது உள்ளிட்ட விதிகளுடன் சில கடுமையான விதிமுறைகளும் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த விதிமுறைகள் அமேசான், பிளிப்கார்டிற்கு மட்டுமல்லாது, இந்தியாவில் இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. மேலும் அந்நிய நிறுவனங்களின் முதலீடு தொடர்பான விதிமுறைகளிலும் சில மாற்றங்களை இந்திய அரசு கொண்டு வரலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் அமேசான் நிறுவனம் சில விற்பனையாளர்களுடனான உறவை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

Amazon
Amazon
AP Photo/Michel Spingler

மேலும், சில விற்பனையாளர்கள் மிக அதிகமாகச் சலுகைகள் வழங்குகிறார்கள். அவர்களை இணைய வர்த்தக நிறுவனங்களும் ஆதரிக்கின்றன. இதனால், சிறிய வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சலுகைகள் தொடர்பான விஷயங்களிலும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவும் புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும் எனத் தெளிவாகத் தெரியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு