தொழில் தொடங்குவது அல்லது நிறுவனங்களை வழிநடத்துவது என்பது மிகப் பெரிய சவால். தொழில்நிறுவனங்களின் பயணங்களிலும் சரி, தனி நபர்களின் வாழ்க்கையிலும் சரி; ஏதேனும் ஒரு திருப்புமுனை ஒட்டுமொத்த திசையையும் மாற்றிவிடும். ஆனால், அதைத் தெரிந்துகொள்ளவே பல காலம் ஆகும்.
இப்படியிருக்க, திருப்புமுனை கண்ட சில நிறுவனங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்தத் தொடர். ஏதோ ஒரு பொருளைத் தயாரித்து, அந்தப் பொருளை நன்றாக விற்பனை செய்துவரும் வேளையில் ஏதோ ஒரு நிகழ்வு அந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை வேறு விதமாக மாற்றியமைக்கிறது. இந்த நிகழ்வுகள் தானாக நடந்த ஒரு விஷயமாகவும் இருக்கலாம்; அல்லது திட்டமிட்டு நாம் செய்த ஒரு செயலாகவும் இருக்கலாம்.

இந்தத் தொடரில் எந்த நிறுவனம் எந்தச் செயலால் திருப்புமுனை நிலையை அடைந்தது, திருப்புமுனை ஏற்படுத்திய அந்த சம்பவம் எப்படி நடந்தது, அதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
அண்மைக் காலத்தில் நம் நாட்டில் திருப்புமுனை கண்ட சில நிறுவனங்களை உதாரணங்களாகப் பார்ப்போமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகேம்ஸ் (CAMS)
Computer Age Management Services என்பதன் சுருக்கம்தான் CAMS. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் Registrar and Transfer Agent (RTA) பிரிவில் 69% சந்தையை வைத்திருக்கிறது. ஆனால், இந்த நிறுவனம் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டபோது பல தொழில்களைச் செய்துவந்தது. அவற்றை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு தற்போதைய தொழிலுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகின. ஆனால், தற்போது இந்தப் பிரிவில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது கேம்ஸ். எப்படி நடந்தது இந்த திருப்புமுனை?

பிவிஆர் (PVR)
இந்தியாவில் அதிக திரைகளை வைத்திருக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அஜய் பிஜிலி. டெல்லியில் இருந்த ஒரு தியேட்டரில் பல பிரச்னை. எவ்வளவோ முயன்றும் தீர்வு ஏதும் கிடைக்காததால், அதை விலைக்கு வாங்குகிறார் அஜய்யின் அப்பா. அப்பாவுக்குப் பிறகு அஜய் பிஜிலி அந்தத் தியேட்டரை ஏற்று நடத்தத் தொடங்கி, ஆஸ்திரேலிய கம்பெனி ஒன்றுடன் கைகோக்க, அதுவே வெற்றிகரமான ஒரு பிசினஸ் மாடலாக உருவாகி, இன்று இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கிறது பி.வி.ஆர். எந்த சம்பவம் இந்த நிறுவனத்தை மாற்றியது?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டைட்டன்
டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான நிறுவனம் இது. வாட்ச் தயாரிக்க புறப்பட்ட இந்த நிறுவனம், இன்று தங்க நகைகள், கண்ணுக்கு அணியும் கண்ணாடிகள் எனப் பல பொருள்களை உற்பத்தி செய்கிறது. எப்படி சாத்தியமானது இந்த மாற்றம்?

ஐ.டி ப்ரெஷ் (ID Fresh)
இட்லி, தோசா ப்ரெஷ் என்பதன் சுருக்கம்தான் IDFresh. ஏதோ ஒரு தொழிலை செய்யலாம் எனத் திட்டமிட்டு, முதலில் இட்லி, தோசை மாவைத் தயார் செய்து விற்கத் தொடங்க, பெங்களூர் மக்களுக்கு அது மிகவும் பிடித்துப் போய்விட, இன்று ரூ.2,000 கோடிக்குமேல் டேர்ன் ஓவர் செய்கிறது இந்த நிறுவனம். இட்லி, தோசை மாவைத் தாண்டி, வடை மாவு உட்பட பல வகையான மாவுகளையும் தயார் செய்து விற்கத் தொடங்கி இருக்கிறது இந்த நிறுவனம். இந்த மாற்றம் எப்படி நடந்தது?
இதுபோல, வரலாற்றுப் பக்கங்களில் பல புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அது தனிநபரின் வாழ்க்கையில் நடந்ததாக இருக்கலாம், நிறுவனங்களில் நடந்ததாக இருக்கலாம், தோல்வி அடைந்த நிறுவனங்களை வளர்ச்சிப்பாதைக்கும் கொண்டு வந்திருக்கலாம். புதிய பிராண்டை உருவாக்கி இருக்கலாம். இதுபோல திருப்புமுனை தருணங்களை இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று விகடன்.காமில் பார்க்கவிருக்கிறோம்!
அடுத்த வாரம், திருப்புமுனை கண்டதன் விளைவாக இன்று மிகப் பெரிய வெற்றி கண்ட மாரிகோ நிறுவனம் பற்றிப் பார்ப்போம்.