Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 13 - ஃப்ரான்சைஸர்... ராயல்டி கட்டணம்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

என்ன வித்தியாசம்?

ஃப்ரான்சைஸ் தொழில் - 13 - ஃப்ரான்சைஸர்... ராயல்டி கட்டணம்!

என்ன வித்தியாசம்?

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

ரம்பத்திலிருந்து தொழிலைத் தொடங்குபவர் களுக்கு தொழில்திறனும், வலுவான தொழில் வளர்ப்புத் திட்டங்களும் இருக்கலாம். ஆனால், ஒரு தொழிலை ஆரம்பித்து, அது செயல்படும் வரை தொழில் தொடங்கும் திட்டம் என்பது வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கை மட்டுமே. திட்டத்தை அமல்படுத்தும் வரை எது சரியாக வரும், எது சரியாக வராது என்பதை அறிய இயலாது. ஏதேனும் ஒன்று எடுபடாமல் போகும்பட்சத்தில் பணம் உறுதியாகத் திரும்ப வராது.

ஃப்ரான்சைஸ் தொழில் - 13 - ஃப்ரான்சைஸர்...  ராயல்டி கட்டணம்!

நீங்கள், `பாடம் கற்றுக்கொண்டோம்...’ என்று சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனால், வெற்றி பெறுவதற்கு முன்னர் எத்தனை பாடங்களை கையைச் சுட்டுக்கொண்டு கற்க முடியும்... `வெற்றியைவிட, தோல்வியில்தான் நிறைய பாடங்களைப் படிக்கிறீர்கள்’ என்று சொல்லப்படுவதுண்டு. அது உண்மையாகக் கூட இருக்கலாம். எம்.பி.ஏ மாதிரியான பட்டத்தைப் படித்துவிட்டு, மொத்தப் பணத்தையும் தோற்றுப்போகும் ஒரு தொழிலில் பறிகொடுப்பது எந்த வகையிலும் பயன் தராது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

புதிய தொழில்முனைவோர்கள் ஃப்ரான்சைஸில் செய்யும் முதலீட்டை, அசையாத சொத்தை வாங்குவதோடு ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள். ஃப்ரான்சைஸ், அறிவுசார் சொத்துரிமையைக் குறிக்கிறது. ஃப்ரான்சைஸின் உண்மையான மதிப்பு, ஏற்கெனவே முழுமையாக வளர்ந்துவிட்ட, வெற்றிகரமான தொழில் மாதிரியை நீங்கள் பெறுவதில் இருக்கிறது.

ஃப்ரான்சைஸிங்கைச் சுற்றி ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மை. அவற்றில் பெரும்பாலானவை பணத்தைச் சுற்றியே இருக்கின்றன. குறிப்பாக, ஃப்ரான்சைஸ் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை ஃப்ரான்சைஸ் கட்டணத்திலிருந்துதான் பெறுகின்றன என்பது முக்கியமான கருத்தாக இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃப்ரான்சைஸ் கட்டணம் என்றால் என்ன?

ஃப்ரான்சைஸ் கட்டணம் என்பது நீங்கள் செலுத்தும் நுழைவுக் கட்டணம். இந்த நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தியதும் திறக்கும் கதவு, ஃப்ரான்சைஸரின் வணிக அமைப்புக்கு உங்களுக்கு வழிகாட்டுகிறது. உங்களுக்கு முழுமையான ‘செட்அப்’ ஒன்று கிடைக்கும். எனவே, இதை நீங்கள் கட்டாயமாகச் செலுத்தியாக வேண்டும்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 13 - ஃப்ரான்சைஸர்...  ராயல்டி கட்டணம்!

ஃப்ரான்சைஸ் கட்டணத்தையும், நீங்கள் ஃப்ரான்சைஸை வாங்கச் செலுத்தும் தொகையையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. நீங்கள் வாங்க நினைக்கும் ஃப்ரான்சைஸின் தொகை + ஃப்ரான்சைஸ் கட்டணம் ஆகிய இரண்டும் சேர்ந்ததுதான் நீங்கள் செய்யும் தொடக்க முதலீடு. நீங்கள் முதலில் செலுத்தும் ‘தொடக்க ஃப்ரான்சைஸ் கட்டணம்’ என்பது, ஒரு ஃப்ரான்சைஸ் அமைப்பில் இணைய நீங்கள் செலுத்தும் முதல் தொகை என வைத்துக்கொள்வோம்.

அப்படி இருக்கும்போது, நீங்கள் செலுத்தும் ராயல்டி பேமென்ட்கள் அந்த அமைப்பில் தொடர்ந்து நீடிக்க நீங்கள் செலுத்தும் மெம்பர்ஷிப் கட்டணம். நீங்கள் தொடர்ந்து செலுத்தும் இந்த ராயல்டி தொகையை வைத்துதான் ஃப்ரான்சைஸர் நிறுவனம் ஃப்ரான்சைஸிகளுக்கு ஆதரவளித்து, பிசினஸை பெருகச் செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராயல்டி கட்டணம் ஏன்..?

பொதுவாகவே ஃப்ரான்சைஸர் வழியாக ஃப்ரான்சைஸிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள், அதாவது ஃபீல்டு கன்சல்டன்டிங், மார்க்கெட்டிங் திட்டங்கள், வணிகத் திட்டங்கள் அனைத்தும் ஃப்ரான்சைஸிகள் கொடுக்கும் ராயல்டி கட்டணம் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. கூடவே, ஃப்ரான்சைஸரின் தலைமை அலுவலகத்துக்கான செலவுகள்... அதாவது அலுவலக மேலாண்மை, ஊழியர் சம்பளம் போன்றவையும் ராயல்டி பேமென்ட்களிலிருந்தே கவனிக்கப்படுகின்றன. பிராண்டை வளர்க்கவும், புதிய ஃப்ரான்சைஸிகளை அமைப்புக்குள் கொண்டு வரவும் ராயல்டி தொகை பயன்படுத்தப்படுகிறது.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

ஃப்ரான்சைஸர்கள் தங்களது ராயல்டி கட்டணம் என்ன என்பதை நிறுவ பல வழிகள் உள்ளன. ஃப்ரான்சைஸர் சம்பாதிக்கும் மொத்த விற்பனை சதவிகிதம் ஐந்து முதல் ஒன்பது சதவிகிதம் வரை இருக்கும். ஃப்ரான்சைஸி மொத்த விற்பனையில் 91-95 சதவிகிதத்தை எடுத்துக்கொள்கிறார்; மீதமுள்ளவை ஃப்ரான்சைஸருக்குச் செல்கின்றன.

மொத்த விற்பனை என்பது சேவைகள், பொருள்கள் மற்றும் பிற தயாரிப்புகள் அல்லது வணிக உரிமையாளரால் விற்பனை செய்யப்படும் வருவாயின் அளவு. மேலும், ஊழியர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடிகள் வரி அல்லது வருமானம் / பண வரவு - செலவுகள் / சரிசெய்தல் ஆகியவற்றால் குறைக்கப்படுவதில்லை.

பெரும்பாலான ஃப்ரான்சைஸர்கள் அமைப்புகளில் இந்த சதவிகித முறையே ஃபிக்ஸ் செய்யப்படுகிறது. ஆனால் இது விற்பனையின் அளவைப் பொறுத்து அதிகரிக்கும் அல்லது குறையும். சில ஃப்ரான்சைஸர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்துக்கும் குறைந்தபட்ச ராயல்டி கட்டணம் தேவைப்படுகிறது, இது ஒரு சதவிகிதம் என்ற அளவிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகை என்ற அளவிலோ நிர்ணயம் செய்யப்படுகிறது.

நிறுவனத்தின் இயல்புக்கு ஏற்ப அல்லது ஃப்ரான்சைஸ் வாங்கப்போகும் உங்கள் வசதிக்கு ஏற்ப கட்டணங்களை மாற்றியமைக்கலாம்!

ராயல்டி தொகை வெவ்வேறு விற்பனை வரம்புகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. வெற்றிகரமான உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான ராயல்டி தொகை எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். அதேசமயம் சில உரிமையாளர்கள், போட்டியாளர்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவார்கள். இந்த ராயல்டி தொகையை உங்கள் ஃப்ரான்சைஸரோடு பேசி முடிவு செய்ய வேண்டும். உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி உங்களுக்குச் சாதகமானதாக இருக்க வேண்டும்.

சலுகைகள்... ஒரு பார்வை!

ஃப்ரான்சைஸர் உங்களுக்குச் செய்து கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து ஏற்கெனவே பேசியிருந்தாலும், ஃப்ரான்சைஸ் கட்டணம் மற்றும் ராயல்டி கட்டணம் குறித்துப் பேசுவதால் உங்களுக்கு வந்து சேர வேண்டிய சலுகைகள் என்னென்ன என்பதை மேலும் ஒரு முறை பார்ப்போம்.

1) ஃப்ரான்சைஸரின் அமைப்பை, பிராண்ட் பெயரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி. 2) நீங்கள் ஃப்ரான்சைஸ் அமைக்க ஓர் இடத்தை ஏற்பாடு செய்வது - மேலும் ஃப்ரான்சைஸி அலுவலகத்தைக் கட்டமைப்பதற்கான உதவிகள். 3) உங்கள் பிசினஸுக்குத் தேவையான பொருள்கள், போர்டுகள் போன்றவற்றை உங்களுக்குத் தருவது. 4) ஆபரேட்டிங் குறிப்புகள். 5) உங்களுக்கு, உங்கள் மேனேஜருக்கு மற்றும் உங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி. 6) தொடக்கநிலையில் ஒரு பிரமாண்ட மார்க்கெட்டிங் திட்டத்துக்கான வழிகாட்டல். 7) நிறுவனம் தொடங்குவதற்கு முன்னர் நிறுவன இடத்தில் பயிற்சி. 8)கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள்.

நிறுவனங்களின் அமைப்பைப் பொறுத்து ராயல்டி கட்டணம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்று பார்த்தோம். அதேபோல அமைப்புகளைப் பொறுத்து பிற விளம்பரக் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் இயல்புக்கு ஏற்ப அல்லது ஃப்ரான்சைஸ் வாங்கப்போகும் உங்கள் வசதிக்கு ஏற்ப கட்டணங்களை மாற்றியமைக்கவும் முடியும்.

அடுத்து, ஃப்ரான்சைஸரிடம் நீங்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகள் என்னென்ன என்பது குறித்துப் பார்ப்போம்!

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism