Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 16 - முடிவெடுக்க உதவும் 15 கேள்விகள்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ரான்சைஸ் தொழில்

ஒரு செஃல்ப் டெஸ்ட்

ரு ஃப்ரான்சைஸை வாங்கி, அதை நிர்வகிப்பது என்பது உங்களுக்கு நீங்களே `பாஸ்’ எனும் உயர்வை அளிப்பதாக இருக்கலாம்.

ஆனால், ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என எல்லா விஷயங்களையும் சொதப்பிவிடக் கூடாது அல்லவா... அதற்குத்தான் இந்தப் பதினைந்து கேள்விகள். எந்த மாதிரியான ஃப்ரான்சைஸ் உங்களுக்கு ஏற்றது என்பதை ஆலோசிக்க இந்தக் கேள்விகள் உதவும்.

இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நிதானமாக, நேர்மையான பதில்களைச் சொல்லுங்கள். பிறகு முடிவெடுங்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 16 - முடிவெடுக்க உதவும் 15 கேள்விகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. ஃப்ரான்சைஸ் என்றால் என்ன என்பது உங்களுக்குப் புரிகிறதா?

பல நேரங்களில் ஒரு விஷயம் சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லது ஊரில் எல்லாரும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதால் மட்டுமே நாமும் அதைச் செய்து பார்க்க வேண்டும் என நினைப்போம். பிறகு, அதனால் பெரும் பொருள் செலவையோ மன உளைச்சலையோ உண்டாக்கிக்கொள்வோம். இப்படித்தான் நீங்கள் ஃப்ரான்சைஸையும் தொடங்க நினைக்கிறீர்களென்றால், தயவுசெய்து அந்த முயற்சியைக் கைவிடவும். உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பாதையாக ஃப்ரான்சைஸைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால் மட்டுமே தொடரவும்.

2. சுயதொழில் செய்வதற்கான உடல், மனநலன் உங்களுக்கு இருக்கிறதா?

சுயதொழில் செய்ய முதலில் ஒழுக்கம் தேவை. மன உறுதி தேவை. பொறுப்புகளை, வேலைகளையெல்லாம் வேறு ஒருவர் உந்தித் தள்ளாமலேயே நீங்கள் எடுத்துச் செய்ய வேண்டும்.

Franchise
Franchise

3. உங்களால் மனிதர்களோடு ஒன்றிப் போக முடியுமா?

சுயதொழில் செய்ய நினைக்கும்போது நிச்சயம் நீங்கள் நிறைய பேரிடம் பேச வேண்டியிருக்கும். பணிக்கு ஆட்களை அமர்த்தும்போதும், வாடிக்கையாளர்களிடம் பேசும்போதும், ஃப்ரான்சைஸ் ஓனரிடம் பேசும் போதும் பேச்சில் தன்னம்பிக்கை தெரிய வேண்டும். இந்த குணம் உங்களிடம் இருக்கிறதா?

4. ஃப்ரான்சைஸருக்கு நிறுவனத்தின் மீதிருக்கும் உரிமையை ஏற்றுக்கொள்வீர்களா?

ஒரு நிறுவனத்தில், ஒரு முதலாளிக்குக் கீழே வேலை செய்ய முடியாமல்தான் பலரும் சுயதொழில் முயற்சியில் இறங்குகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில், ஃப்ரான்சைஸில் உங்களுக்கு மேல் ஒருவர் உங்களைக் கண்காணித்தபடி இருப்பார் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா... அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

5. ஃப்ரான்சைஸ் எடுப்பதால் உங்கள் இயற்கையான திறன்களையும், பலங்களையும் பயன்படுத்தி உங்களை வளர்த்துக்கொள்ள முடியுமா?

பிசினஸ்மேனாக இருக்கும் பலரும் தங்கள் கனவாக வேறு ஒரு வாழ்க்கையை வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஒன்றை இழந்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இது ஒரு தவறான புரிந்துகொள்ளல். உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் நீங்கள் ஒரு பிசினஸைத் தொடங்கலாம். உதாரணமாக, நீங்கள் ஓர் எழுத்தாளரென்றால், நீங்கள் ஒரு புக் கஃபே தொடங்கலாம். அப்படி உங்கள் ஃப்ரான்சைஸ் முயற்சி உங்கள் திறனை வளர்ப்பதாக இருக்கிறதா?

திடீர் திடீரென வரும் எதிர்பாராத வீழ்ச்சிகளை உங்களால் சந்திக்க முடியுமா..?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

6. உங்கள் வயதும் ஆரோக்கியமும் இந்த பிசினஸைத் தொடர்ந்து நடத்தி, நீங்கள் போட்ட முதலீட்டைத் திருப்பிப் பெற உதவுமா?

60 வயதில் ஃப்ரான்சைஸ் பிசினஸ் தொடங்கினாலும், உங்களால் முதலீட்டை ஒரே வருடத்தில் எடுத்துவிட முடியும் என நினைக்கும்பட்சத்தில் சிக்கல் இல்லை. ஆனால், எந்தப் பலமும் இல்லாமல், நேரமும் இல்லாமல் ‘அதெல்லாம் பார்த்துக்கலாம்’ என ஆகாயத்தில் கோட்டை கட்டிக்கொண்டு இருக்காதீர்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

7. உங்களால் உழைக்க முடியுமா?

வேறு ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்ததுபோல இல்லாமல், இதுவரை நீங்கள் செய்த எந்த வேலைபோலவும் இல்லாமல் பெரிய அளவிலான கடின உழைப்பு உங்கள் நிறுவனத்தைக் கட்டி எழுப்ப தேவைப்படும். உங்களால் அதைக் கொடுக்க முடியுமா?

8. உங்களுக்குப் பொருளாதார வெற்றியை அடைய வேண்டும் எனும் பேராசை இருக்கிறதா?

உங்களுக்கு என ஒரு குறிக்கோள் இல்லையென்றால், நீங்கள் உங்களுக்கு வரும் வருவாயைக்கொண்டு பிரமாண்டமாக ஒன்றைக் கட்டமைக்க நினைக்க மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு பெரிய பொருளாதார வெற்றி வேண்டும் எனும் ஆசை இருக்கிறதா?

9. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமா?

யார் வேண்டுமானாலும் நல்ல தொண்டனாக இருந்துவிடலாம். ஆனால், எல்லோராலும் நல்ல தலைவனாக இருந்து ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைக்க முடியாது.

நீங்கள் ஒரு நல்ல தலைவரா?

10. பிசினஸின் தொடக்க காலத்தில் வருவாய் வரவில்லையென்றால் உங்களால் சர்வைவ் பண்ண முடியுமா?

சரியான பேக்-அப் பிளானும், போதுமான அளவு சேமிப்பும் வைத்திருந்தால்தான் இந்தக் காலத்தில் தாக்குப்பிடிக்க முடியும். அப்படி ஒரு பிளான் உங்களுக்கு இருக்கிறதா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

11. குடும்பம் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறதா?

குடும்பத்தின் ஆதரவு இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒவ்வொரு நாள் வேலை முடிந்து போகும்போதும் அதிருப்தியான முகங்களைத்தான் பார்ப்பீர்கள். எனவே, உங்கள் குடும்பத்தின் ஆதரவு அவசியம்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

12. வீழ்ச்சிகளின்போது போராட முடியுமா?

திடீர் திடீரென எதிர்பாராத வீழ்ச்சிகள் வர வாய்ப்பிருக்கிறது. அப்படி வரும் வீழ்ச்சிகளை உங்களால் சந்திக்க முடியுமா... அந்த அதிர்ச்சியில் உறைந்து போகாமல் தொடர்ந்து போராட முடியுமா?

13. இலக்கை உங்களால் அடைய முடியுமா?

இறுதி இலக்கை உங்கள் முயற்சியின் மூலம் அடைவதுதானே உங்கள் எண்ணம். உங்களால் அதை அடைய முடியுமா... அதற்கு இந்த பிசினஸ் உதவுமா?

14. சவால்களைத் தருமா?

சவால்களை வென்று ஜெயிப்பதுதானே மகிழ்ச்சி. உங்களுக்குப் போதுமான சவால்களை இந்த ஃப்ரான்சைஸ் பிசினஸ் தருமா?

15. வேறு பாதையில் செல்ல விருப்பமா?

சுயதொழில் அல்லாமல் வேறு ஏதாவது பாதையைத் தேர்வு செய்ய வேண்டும் என மனதில் தோன்றுகிறதா?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பெரும்பாலும் பாசிடிவ்வான பதில்களைத்தான் சொல்லியிருக்கிறீர் களென்றால் வாழ்த்து கள். ஃப்ரான்சைஸ் உங்களுக்கான பாதைதான்.

உங்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லையெனில், குடும்பத்தினரிடமும், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களிடமிருந்து பதில்களைப் பெறுங்கள். நீங்கள் உங்களைத் தெரிந்து வைத்திருப்பதைவிட, அவர்கள் உங்களை ஆழமாகப் புரிந்துவைத்திருப்பார்கள்.

நீங்கள் ஃப்ரான்சைஸ் தேர்வு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய மேற்கண்ட பதினைந்து கேள்விகள் உங்களுக்கு உதவும். உங்கள் பிசினஸ் பயணத்தில் இது ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும். ஃப்ரான் சைஸ் தொடர்பான ஆலோசனைகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

(ஜெயிப்போம்)