Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 17 - ஃப்ரான்சைஸி செய்யக் கூடாத 10 தவறுகள்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

ஒரு வழிகாட்டல்

ஃப்ரான்சைஸ் தொழில் - 17 - ஃப்ரான்சைஸி செய்யக் கூடாத 10 தவறுகள்!

ஒரு வழிகாட்டல்

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்
நாம் செய்யும் தவறுகள்தான் நமக்கு அனுபவங் களையும் பாடங்களையும் தருகின்றன, இல்லையா... அதற்காக நாம் தவறு செய்துகொண்டே இருக்க முடியாது.

பிறர் செய்த தவறுகளிலிருந்து நம்மால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஃப்ரான்சைஸ் தொடங்க நினைப்பவர்கள் செய்யும் 10 பொதுவான தவறுகள் எவையாக இருக்கும் என்பது குறித்துச் சொல்கிறேன்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 17 - ஃப்ரான்சைஸி செய்யக் கூடாத 10 தவறுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1. பெரிய துறை நிச்சயமாக வெற்றியளிக்கும்!

இது எல்லாருக்கும் ஏற்படக்கூடிய எண்ணம்தான். `உணவுத் துறையில் ஃப்ரான்சைஸ் வாங்க வேண்டும்’ என்று நினைப்பவர்கள் உடனடியாக கே.எஃப்.சி அல்லது மெக் டொனால்டு மாதிரியான பிரமாண்ட நிறுவனத்தைப் பார்த்து ‘நாமும் இதேபோல வளர்ந்து விடுவோம்’ என நினைப்பதுண்டு. இங்கே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், ‘சந்தை நிலவரம்.’ உணவுத்துறை என்பது ஒரு வளரும் சந்தையாக இருக்கலாமே தவிர, அது கண்டிப்பாக வெற்றியளிக்கும் சந்தையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

வெற்றி வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டியது நீங்களும், உங்கள் ஃப்ரான்சைஸி ட்ரெயினிங்கும்தான். நீங்கள் எப்படி ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள், என்ன மாதிரியான மார்க்கெட்டிங் திட்டத்தை செயல்படுத்துகிறீர்கள் என்பவைதான் வெற்றியை நிர்ணயிக்குமே தவிர, உங்கள் துறையில் வேறொரு நிறுவனம் வெற்றி அடைந்ததைவைத்து, உங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நினைக்க வேண்டாம்.

2. ஃப்ரான்சைஸர் சொல்லும் தொகையைவிடக் குறைந்த தொகையில் நான் இதைச் செய்து முடிக்கலாம்!

இப்படி நீங்கள் நினைக்கிறீர்களென்றால், தயவுசெய்து இதை உங்கள் ஃப்ரான்சைஸருக்குத் தெரியப்படுத்துங்கள். என்னதான் நீங்கள் உற்சாகமாக நினைத்தாலும் முதலீடு, மூலதனம் என்று கணக்குப் போடப்படுவதைக் குறைத்தீர்களென்றால், முட்டுச்சந்தை நோக்கி பயணிக்கிறீர்களென்றால் ஃப்ரான்சைஸர் அல்ல... வேறு யார் நினைத்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

3. நிறைய ஃப்ரான்சைஸிகள்

ஒரு ஃப்ரான்சைஸ் தொழிலில் பல ஃப்ரான்சைஸிகள் இருக்கும்பட்சத்தில், அதுவொரு பிரமாண்டமான நிறுவனமாக இருக்கும் எனும் எண்ணம் இருக்கிறது. சிறப்பான மார்க்கெட்டிங், சுறுசுறுப்பான சேல்ஸ்மேன், ஒரு கவர்ச்சியான தொழில்துறை இருந்தால்தான் ஒரு ஃப்ரான்சைஸ் அமைப்பு பிரமாண்டமாக வளரும். இதில் என்ன சிக்கல் என்றால், இப்படி நிறைய ஃப்ரான்சைஸிக்கள் இருக்கும்போது ஒரு கம்பெனியின் பிசினஸ் இன்னொரு கம்பெனியால் பாதிக்கப்படும். யாருக்குமே முழுமையாக வெற்றி கிடைக்காது. எனவே, ஒரு நிறுவனத்தில் நிறைய ஃப்ரான்சைஸிக்கள் இருக்கிறார்கள் என்பதால் மட்டும் அதை வாங்க வேண்டாம்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

4. ஓர் அமைப்பில் முதல் ஃப்ரான்சைஸியாக இருக்காதீர்கள்!

ஓர் அமைப்பில் முதல் ஃப்ரான்சைஸியாக இருப்பதால் நன்மைகளும் இருக்கின்றன. உங்களுக்கு நிறைய கவனம் தந்து, பாதுகாப்பார்கள். ஃப்ரான்சைஸருக்கு அந்தத் துறையில் நிறைய நல்ல அனுபவமிருந்தால், அதை உங்களுக்குப் பகிர்ந்தளிப்பார். அவரைப் போன்ற வெற்றி உங்களுக்கும் கிடைக்கும் என நம்பினால் இதைச் செய்யுங்கள். ஆனால், அவரே ஃப்ரான்சைஸ் எப்படி இருக்கும் என ஆழம் பார்க்க இதில் இறங்குகிறாரென்றால், உங்களுக்கு அங்கே பெரிய படிப்பினையோ, வெற்றியோ கிடைக்காது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

5. சட்டரீதியான உதவியில்லாமல் இருப்பது!

நம்மில் நிறைய பேர் தினசரி வாழ்க்கையிலேயே செய்யும் தவறு இது. நமக்கிருக்கும் உரிமைகளையெல்லாம் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும் ஒரு சட்ட வல்லுநர் தேவைப்படுகிறார் அல்லவா... இப்படி இருக்கும்பட்சத்தில் தொழில் வாழ்க்கையில் இறங்கினால், அங்கு ஏற்படும் சிக்கல்களையும் குழப்பங்களையும் தீர்க்க நமக்கு ஒரு சட்ட வல்லுநரின் உதவி தேவைப் படும்தானே... `சரி, ஏதாவதொரு பெரிய சிக்கல் வரட்டும்... அதுவரை அமைதியாக இருப்போம்’ என்று காத்திருக்காமல், `ஃப்ரான்சைஸி ஆகப் போகிறோம்’ என்ற முடிவை எடுத்தவுடனேயே ஒரு சட்ட வல்லுநரின் உதவியை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

6. 80 % ஃப்ரான்சைஸர் ஸ்டைல், மீதி என் ஸ்டைல்!

‘9-5 வேலையில், மேலதிகாரியின் கட்டுப்பாடு களுக்கெல்லாம் கடுப்பாகித்தான் ஃப்ரான்சைஸி வாங்க வந்தோம், இங்கும் ஒரு மேற்பார்வை அதிகாரி இருக்கிறாரா?’ என்று மனம் சோர்ந்து போனால், ஃப்ரான்சைஸிங் உங்களுக்கானதல்ல. நீங்கள் ஒரு ஃப்ரான்சைஸை வாங்குகிறீர்கள் என்றால், கண்டிப்பாக ஃப்ரான்சைஸரின் அமைப்பைத்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது `பெரும்பாலும் அவர் ஸ்டைலை வைத்துக் கொண்டு, கொஞ்சம் மட்டும் என் படைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்று இறங்கினால், அங்கு போட்டிருக்கும் ஒப்பந்தத்தை நீங்கள் மீறுவீர்கள். உங்களை அந்த அமைப்பிலிருந்து துரத்திவிடுவார்கள். எனவே, ஃப்ரான்சைஸரின் திட்டத்தைப் பின்பற்றுங்கள் அல்லது காசைப் பத்திரமாக வைத்துக்கொண்டு வேறு ஏதாவது செய்யுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

7. எல்லா ஃப்ரான்சைஸ் அமைப்புகளும் ஒன்றுதான்!

எல்லா ஃப்ரான்சைஸ் அமைப்புகளும் ஒன்றுதான். அதனால், `இருப்பதிலேயே பெரிய ஃப்ரான்சைஸ் குறைந்த விலைக்கு கிடைக்குமென்றால், அதைத்தான் நான் வாங்குவேன்’ என்று நினைப்பது நீங்கள் செய்யும் பெரிய தவறு. ஒவ்வொரு ஃப்ரான்சைஸ் அமைப்புக்கும் சொந்தமாக ஒரு கலாசாரம் இருக்கிறது. முதலில் ஃப்ரான்சைஸரைச் சந்தித்துப் பேசுங்கள். பிறகு, ஃப்ரான்சைஸிக்கள் சிலரைச் சந்தித்து, அந்த அமைப்புக்குள் நீங்கள் பொருந்திப்போவீர்களா என்று பாருங்கள்.

இப்போது சில ஃப்ரான்சைஸர்கள், ஃப்ரான்சைஸிக்களுக்கும் ராயல்டி ஃபீஸ், வேறு பல சலுகைகள் எனத் தருகிறார்களாம்... வெற்றிக்குப் பரிசாக. அவையெல்லாம் கிடைக்கின்றனவா என்று கவனமாகப் பாருங்கள்.
ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

8. ஃப்ரான்சைஸை வாங்கிவிட்டால் வெற்றி கிடைத்துவிடும்!

நீங்கள் ஒரு பிசினஸ் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் உடனடியாக வெற்றி கிடைத்துவிடுமா... அதேபோலத்தான் ஃப்ரான்சைஸும். இதிலும் நிறைய ரிஸ்க்குகள் இருக்கின்றன. ஃப்ரான்சைஸரின் பிசினஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கடுமையாக நீங்கள் உழைக்க வேண்டும். இங்கே அதிகப்படியாக உங்களுக்கிருக்கும் நன்மை, உங்களிடம் ஒரு திட்டம் இருக்கும். அதை நீங்கள் எவ்வளவு சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறீர்கள் என்பதில்தான் வெற்றி வாய்ப்பு தெரியவரும்.

9. சரியான ஃப்ரான்சைஸைக் கண்டுபிடித்துவிட்டால், உடனே வங்கி லோன் கிடைக்கும்!

தனி பிசினஸ் தொடங்குபவர்களைவிட, ஃப்ரான்சைஸ் ஆரம்பிப்பவர்களுக்குத்தான் வங்கியில் லோன் கிடைக்க வாய்ப்பு அதிகம். ஆனால், நீங்கள் தேர்வு செய்திருக்கும் ஃப்ரான்சைஸியில் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது இல்லையா... எனவே, இந்தத் தப்பெண்ணத்தை உடைத்துப் போடுங்கள். கூடுதல் டிப்ஸ் என்னவென்றால், ஒருவேளை உங்கள் கையில் இப்போது ஒரு வேலை இருந்தால், உடனடியாக ‘ஹோம் ஈக்விட்டி லோனை’த் தொடங்குங்கள்.

10. எனக்கு ஆட்களை வேலை வாங்கத் தெரியும்!

சக ஊழியர்களுடன் வேலை செய்தோ, அவர்களை மேனேஜ் செய்தோ முன்அனுபவம் எதுவும் இல்லையென்றால், இதை உங்கள் ஃப்ரான்சைஸரிடம் பேசுங்கள். பெரும்பாலான ப்ரான்சைஸ் அமைப்புகளில் நீங்கள்தான் ஆட்களை வேலைக்கு எடுத்து, உற்சாகமூட்டி, பயிற்சியளித்துக்கொண்டும் இருப்பீர்கள். ஃப்ரான்சைஸ் வாங்கியவுடன் இந்தத் திறன் கிடைத்துவிடாது அல்லவா.. எனவே, இதைச் செய்ய முடியவில்லையென்றால், அதற்காகப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள், வேலை வாங்கும் திறனை மேம்படுத்திக்கொள்ளுங்கள்!

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism