Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 19 - வலிமையான ஃப்ரான்சைஸ் உறவு...

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ரான்சைஸ் தொழில்

வளர்த்தெடுப்பது எப்படி?

ம்பிக்கை என்பது நம் தொடர் முயற்சியாலும், செயல்களாலும் பிறரிடம் சம்பாதிப்பது. ஃப்ரான்சைஸருக்கு ஃப்ரான்சைஸிகளுடன் இருக்கும் தொடர்பு, அவர்களின் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், ஒரு ஃப்ரான்சைஸ் அமைப்பின் வெற்றிக்கும் முக்கியம்.

எனவே, ஒரு தரமான தொழில் உறவை அமைக்க சில முக்கியக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பார்ப்போம். 1. வெற்றிகரமான பைலட் ஆபரேஷன் 2. பணியமர்த்தல் திட்டம் 3. பயிற்சி 4. ஃப்ரான்சைஸ் மேனேஜ்மென்ட் 5. கள ஆதரவு 6. வெளிப்படையான பேச்சுவார்த்தை 7. நிறுவனத்தை வளர்க்கத் தொடர்ந்து முயற்சி 8. பிராண்ட் புரொமோஷன்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 19 - வலிமையான ஃப்ரான்சைஸ் உறவு...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வெற்றிகரமான பைலட் ஆபரேஷன்

ஒரு கம்பெனி ஃப்ரான்சைஸ் செய்யத் தொடங்குவதற்கு முன்னர், அதனிடம் ஒரு வெற்றிகரமான பிசினஸ் மாடல் இருக்க வேண்டும். அப்படி ஒரு மாடல் இருந்தால்தான், அதுபோலவே வேறொன்றை உருவாக்க முடியும். எனவே, ஃப்ரான்சைஸர் அடைந்த வெற்றிகள், லாபங்கள் குறித்த எல்லாவற்றின் ஆவணமும் இருக்க வேண்டும். அந்த வெற்றிகளும் லாபங்களும் எப்படி அடையப்பட்டன என்பதற்கும் ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால், அதை எளிதாகப் பின்பற்றி வெற்றியை அடைய முடியும்.

பணியமர்த்தல் 

ஒரு ஃப்ரான்சைஸி, ஃப்ரான்சைஸை வாங்க முடிவு செய்யும்போது அவருக்கிருக்கும் எதிர்பார்ப்புகளிலிருந்துதான் அவருக்கும் ஃப்ரான்சைஸருக்கும் இருக்கும் நெடுநாள் உறவு எப்படியிருக்கும் என்பதை முடிவு செய்ய முடியும். ஃப்ரான்சைஸரின் பிசினஸ் மாடலுடன் பொருந்திப் போவதாக ஃப்ரான்சைஸியின் தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தனிநபரின் பொருளாதார பலம், தனிப்பட்ட குணங்கள் மற்றும் முந்தைய பிசினஸ் அனுபவங்கள் போன்றவற்றை யெல்லாம் வைத்துத்தான் இதை நிர்ணயிக்க முடியும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

பிசினஸ் நிலைத்து நிற்கும் வரை அதற்கு ஒழுங்காக முதலீடு செய்ய ஃப்ரான்சைஸி யிடம் பணபலம் இருக்கிறதா என்பதை ஃப்ரான்சைஸ் அமைப்புகள் சரிபார்க்க வேண்டும். ஃப்ரான்சைஸிலிருந்து லாபம் வரும் வரை, அதற்குத் தேவையான செலவைச் செய் வதற்கும் ஃப்ரான்சைஸி யிடம் போதுமான வளங்கள் இருக்க வேண்டும்.

கூடவே, ஃப்ரான்சைஸியின் அனுபவமும் முக்கியம். உதாரணமாக, விற்பனையில் நிறைய கவனம் தேவைப்படும். விற்பனையில் ஆர்வமில்லாத நபர் தொழிலுக்குப் பொருந்த மாட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பயிற்சி

ஃப்ரான்சைஸர் தொடக்கத்தில் தரும் பயிற்சியை வைத்துத்தான் ஃப்ரான்சைஸி எவ்வளவு வேகமாக பிசினஸில் வெற்றிகரமானவராக ஆகிறார் என்பதை நிர்ணயிக்க முடியும்.

எனவே, இந்தப் பயிற்சித் திட்டம், ஃப்ரான்சைஸரின் துறையில் நன்கு தேர்ச்சிபெற்ற புரொஃஃபஷனல் பயிற்சி யாளர்களைக்கொண்டு பயிற்சியளிக்கப்பட வேண்டும். மேலும், பிசினஸில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப ஃப்ரான்சைஸிகளையும், அவர்களின் ஊழியர்களையும் தயார் செய்ய, ஃப்ரான்சைஸர் தொடர்ந்து பயிற்சிக் கூட்டங்களை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும்.  

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

ஃப்ரான்சைஸ் உறவு மேலாண்மை

ஃப்ரான்சைஸர் தன் நிறுவனத்தை வளர்த்துக் கொண்டே செல்லும்போது, தங்கள் திட்டங்களை எப்படி அடையப்போகிறோம், ஃப்ரான்சைஸிகளுக்கு எப்படி ஆதரவு அளிக்கப்போகிறோம் என்பது அந்த நிறுவனத்துக்குத் தெரிந்திருக்க வேண்டும். உதவிக்கு என ஒரு ஆபீஸ் அமைத்து அங்கிருந்து பிற ஃப்ரான்சைஸி களைத் தொடர்பு கொள்வோமா அல்லது ஃப்ரான்சைஸிகள் அமைந்திருக்கும் நகரங்களில் உதவிக்கு/ ஆதரவுக்கு என ஆட்களைத் தரலாமா என்பதை நிறுவனம் முடிவு செய்ய வேண்டும். விற்பனையிலும் உற்பத்தித்திறனிலும் சிறந்து விளங்கும் ஃப்ரான்சைஸிகளுக்கு விருதுகள், பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.

கள ஆதரவு

ஃப்ரான்சைஸரின் கள அலுவலர்கள்தான் ஃப்ரான்சைஸை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள். அவர்கள் ஃப்ரான்சைஸின் முகமாகவே பார்க்கப்படுவார்கள். எனவே, ஃப்ரான்சைஸரின் இந்த ஊழியர்கள் அடிக்கடி ஃப்ரான்சைஸிகளைப் பார்வையிட வேண்டும். தங்களுக்கிருக்கும் வழக்கமான வேலைகளைச் செய்யும் அதே வேளையில், ஃப்ரான்சைஸிகள் வெவ்வேறு விஷயங்கள் குறித்துத் தரும் தகவல்களையும் கவனத்துடன் கேட்டு, அதை ஃப்ரான்சைஸரிடம் கொண்டு சேர்க்கவும் வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிப்படையான பேச்சுவார்த்தை

சிறு ஃப்ரான்சைஸர்கள் எடுத்தவுடனேயே ஒரு ஆணையம் அமைத்தால், ஃப்ரான்சைஸிகளுடன் கலந்துரையாட முடியாமல் போகும். அதேசமயம், ஃப்ரான்சைஸியின் எண்ணிக்கை கூடக்கூட, வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த கமிட்டிகளும், ஆணையங்களும் அமைக்க வேண்டியது அவசியம். `ஃப்ரான்சைஸிகளே ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வருவார்கள், அதுவரை நாம் காத்திருப்போம்’ என்று ஃப்ரான்சைஸர்கள் முடிவெடுப்பது நல்லதல்ல. ஏனென்றால், ஏதாவது ஒருகட்டத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து முடங்கிவிடுவார்கள். எனவே, அந்தக் கட்டத்தை அவர்கள் அடையாமலிருக்க, ஃப்ரான்சைஸர்கள் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்க வேண்டும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

கூடவே, இணையத்திலும் இதற்கு வழி செய்யலாம். ஃப்ரான்சைஸிகள் தங்கள் கேள்விகளையும் கருத்துகளையும் சக ஃப்ரான்சைஸிகளுக்குத் தெரிவிக்க இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிறுவன வளர்ச்சித் திட்டம்

புதுத் தயாரிப்புகள், புதுத் தொழில்நுட்பம், பிசினஸை நடத்த புது அமைப்பு என ஏதாவதொன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது ஃப்ரான்சைஸி பிசினஸ் தொடர்ந்து வளர்வதற்கு முக்கியம். ஃப்ரான்சைஸர்களுக்கு ஒரு பிசினஸ் குறித்து இருக்கும் அறிவைவிட, ஃப்ரான்சைஸிகளுக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை ஃப்ரான்சைஸர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, ஃப்ரான்சைஸிகளின் அறிவை, அனுபவத்தை வைத்துத் தொழிலை வளர்க்கத் தயங்கக் கூடாது. ஒரு ஃப்ரான்சைஸ் நெட்வொர்க்கிலிருக்கும் ஃப்ரான்சைஸி ஒருவர் சிறப்பாக இயங்கி வெற்றியடைகிறார் எனில், அவர் வெற்றிக்கான படிகளாக எவை இருந்தன என்பதைப் பிற ஃப்ரான்சைஸிகளுக்கும் தெரிவிக்க வேண்டிய பொறுப்பை ஃப்ரான்சைஸர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிராண்ட் புரொமோஷன்

இறுதியாக, ஃப்ரான்சைஸருக்கு என்று பிராண்ட் புரொமோஷன் செய்யத் தொடர்ந்து ஒரு திட்டம் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

ஒருவேளை, ஃப்ரான்சைஸ் நிறுவனம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது, அதற்கு புது ஃப்ரான்சைஸிகளை விற்பது முக்கியமானதாக இல்லையென்றாலும், பிராண்டை புரொமோட் செய்வது முக்கியமானதாகவே இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு பொதுமக்கள் பார்வை பிராண்டுக்கு கிடைக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை என்பதை மறக்க வேண்டாம்.  

(ஜெயிப்போம்)