Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 22 - உணவுச் சந்தையில் வாய்ப்புகள்..!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

விரிவான தகவல்கள்!

ஃப்ரான்சைஸ் தொழில் - 22 - உணவுச் சந்தையில் வாய்ப்புகள்..!

விரிவான தகவல்கள்!

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்
ந்தியாவிலிருக்கும் உணவு மற்றும் குளிர்பானங்கள் சந்தை பல்கிப் பெருகிவரும் ஒன்று.

பிரமாண்டமான நகரமயமாக்குதல் மற்றும் பெருகிவரும் மில்லினியல்களின் ஜனத்தொகை இதற்குக் காரணம் எனலாம். ஆர்கானிக் உணவு குறித்த விழிப்புணர்ச்சியும், உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு முக்கியக் காரணங்கள். இப்படி உடல் ஆரோக்கியத்தின்மீது அதீத கவனம் செலுத்தி, ஜிம்மிலேயே கிடக்கும் இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை நடைமுறையை மாற்றியிருப்பதனாலேயே உணவு மற்றும் குளிர்பானங்கள்துறை பிரமாண்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து சந்தித்துக்கொண்டிருக்கிறது.

ஃப்ரான்சைஸ் தொழில் - 22 - உணவுச் சந்தையில் வாய்ப்புகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`2025-ம் ஆண்டு உலகிலேயே ஐந்தாவது பெரிய வாடிக்கையாளர் சந்தையாக இந்தியா மாறவிருக்கிறது’ என்கிறது கான்ஃபெடெரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரி மற்றும் கிரான்ட் தான்டன் (Grant Thornton) வெளியிட்ட ஓர் அறிக்கை. இதில் பெருமளவு நுகர்வுக்கு உள்ளாகப்போவது உணவு மற்றும் குளிர்பானங்கள்தானாம். இந்தியாவின் பிரமாண்டமான விவசாயத்துறை, உணவு மற்றும் குளிர்பானங்கள் சந்தைக்குப் பக்கபலமாக இருக்கிறது. உலக அளவில் தானியங்களை அதிகம் உற்பத்தி செய்வது இந்தியாதான். மேலும், அரிசி, கோதுமை, கரும்பு, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் இந்தியா சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாதான் பெருமளவு பால் மற்றும் மாட்டிறைச்சி உற்பத்தி செய்யும் நாடாகவும் இருக்கிறது. மிகப்பெரிய நிலப்பரப்பு, தோதான தட்பவெப்பம், நீண்ட கடற்கரை இருப்பு மற்றும் குறைவான ஊதியச் செலவு ஆகியவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

1990-களின் தொடக்கத்தில் நடந்த தாராளமயமாக்கல், தொழில்துறைகளுக்கான தடைகளையெல்லாம் தகர்த்திருக்கிறது. தன் சந்தைக்குப் பொருள்களை எப்படிக் கொண்டுசேர்ப்பது என்பதற்கு பதிலாக, சூப்பர் மார்க்கெட் போன்ற பல சில்லறை வணிக அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், போக்குவரத்து மற்றும் சேமிப்புக்கான வசதி களும் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் மக்கள் தொகையும், வளர்ந்து வரும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களும் இந்திய உணவு மற்றும் குளிர்பானங்கள் துறைக்குக் கூடுதல் நன்மையாக இருக்கின்றன.

தொழில் முனைவோர் சர்வதேச உணவுகளை உள்ளூர் சுவையுடன் உருவாக்கித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாடிக்கையாளர் கள் தாங்கள் தேர்வு செய்யும் தயாரிப்பு குறித்து விவேகம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் குறிப்பிட்ட பிராண்டுகளையும் அவற்றின் தரத்தையும் நம்புபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் புரதம் நிறைந்த உணவுகளையும், பழங்களையும், காய்கறிகளையும்தான் வாங்குகிறார்கள். கார்ப்போஹைட்ரேட் அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கிறார்கள். பாட்டில் தண்ணீர் சந்தையை 50 மில்லியன் டாலர்களுக்கு கூட்டும்விதமாக, தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் இந்தியச் சந்தையில் இருக்கிறார்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

இந்தியாவில், மதுபானங்களைத் தவிர்த்து, குளிர்பானங்களின் சந்தை 16 பில்லியன் டாலராக இருக்கிறது. மிகவும் அதிகமாக நுகர்வு செய்யப்படுவது தேநீர் மற்றும் காபிதான் என்றாலும், கார்ப்பனேடட் பானங்கள், ஆரோக்கிய பானங்கள், பால் தயாரிப்புகள் எனப் பலவும் இந்தியச் சந்தையில் இருக்கின்றன.

வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக சர்வதேச அளவிலான தர நிர்ணயங்கள் மற்றும் பாதுகாப்பு நிர்ணயங்கள் இந்தியத் தயாரிப்புகளுக்குப் பொருந்துமா எனக் கேட்டால், பொருந்தும்தான். ஆனாலும், தர மேலாண்மைக்கான விதிமுறைகள் தற்போதும் தேவையாகவே இருக்கின்றன.

இந்தியாவின் மொத்த உணவு மற்றும் குளிர்பானத்துறையின் மதிப்பு 400 பில்லியன் டாலர் என்றால், அதில் ஏறத்தாழ 130 பில்லியன் டாலருக்கு வழி வகுப்பது ஃபுட் பிராசஸிங்தான்.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகளில் 10% ஃபுட் பிராசஸிங்காகவே இருக்கிறது. அமெரிக்கா, வியட்நாம், ஈரான், சவுதி அரேபியா ஆகியவைதான் முக்கியச் சந்தைகள். அரிசி மற்றும் கோதுமைதான் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவு பிசினஸ்கள் இன்னமும் இடம் தொடர்பானதாகவும், விருந்தோம்பல் துறைக்கு மட்டுமே ஏற்றதாகவும் இருப்பதில்லை. தற்போது ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் கூட்ஸின் சில்லறை மார்க்கெட்டின் மதிப்பு மட்டுமே 100 பில்லியனாக இருக்கிறது. இது உணவகங்கள் மார்க்கெட்டைவிட ஐந்து மடங்கு அதிகம். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளி, ஒரு தனித்துவமான பிசினஸ் வாய்ப்பை அளிப்பது. இந்த இடைவெளியில் நீங்கள் உங்கள் புதுமையையும், தனித்துவமான பிசினஸ் மாடல்களையும் கொண்டுவந்தால், இரண்டு மார்க்கெட்டையுமே கவர் செய்து, அந்த இடைவெளியை நிரப்பிவிட முடியும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

பொதுவாக, உணவக பிசினஸ் என்பது உள்ளூரைப் பொறுத்ததாகவும், அதன் வணிகத்தைப் பெரிதாக்குவதில் பல சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால், ரீடெயில் பிசினஸில் தயாரிப்புகள் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிதாகக் கொண்டுசெல்லக் கூடியதாகவும், பெரிய அளவில் விரிவாக்கம் செய்யக் கூடியதாகவும், பெருமளவு லாபத்தை கொடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றன. இவற்றை வைத்துக்கொண்டு உணவகங்கள் செல்ல முடியாத சந்தையின் ஓர் எல்லைக்கு உங்களால் போக முடியும். இந்த இரண்டு துறைகளும் சேர்ந்து, அடுத்த பத்தாண்டுகளில் பெரிய பிசினஸ்களை உருவாக்கப்போகின்றன.

தொழில்முனைவோர் சர்வதேச உணவுகளை உள்ளூர் சுவையுடன் உருவாக்கித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் மக்கள் ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வெளியே சாப்பிடுகிறார்கள். அதுவும் ஆரோக்கியமான உணவை மட்டுமே உண்ண வேண்டும் என நினைக்கிறார்கள். பலர் சைவமாகக்கூட மாறுகிறார்கள். இதன் விளைவாக, சிறு தானியங்கள், கடலை, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் ஆயுர்வேதத் தயாரிப்புகளெல்லாம் நம் வாழ்வில் திரும்ப வருகின்றன. சிறப்பு டீக்கள் மற்றும் காபிகள் கார்பனேடட் பானங்களையே தோற்கடிப்பவையாக இருக்கின்றன. எதிர்காலம், புதுமையான நிலைத்து நிற்கக்கூடிய ஹைபிரிட் பிசினஸ் மாடல்களை உருவாக்கும் பிராண்டுகளுக்கே சொந்தமாக இருக்கும். உணவு பிசினஸில் இறங்க நினைக்கும் இளம் தொழில்முனைவோருக்கு சில அறிவுரைகள்...

1. விரிவாக்கம் செய்யக்கூடிய சிறிய பிசினஸ் மாடல்களில் கவனம் செலுத்துங்கள். 2. தொழில்நுட்பத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். தயாரிப்பை மேம்படுத்தவும், ஆய்வு செய்யவும் நிறைய பணத்தைச் செலவு செய்யுங்கள். 3. உங்கள் தயாரிப்பின் எந்த அம்சம் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது என்பதைக் கண்டுகொள்ளுங்கள். 4. தொழிலைத் தொடங்குவதற்கு முன்னரே மாற்றுத் திட்டத்தை யோசித்து வைக்காதீர்கள். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சென்று பிசினஸை வளர்க்க வேண்டும் எனும் உங்கள் மனோதிடம்தான் வெற்றியைக் கொண்டுவரும். அதனால், மிகச் சரியான நோக்கத்தோடு களத்தில் இறங்குங்கள்.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism