Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 23 - அழகுக்கலை அள்ளித்தரும் வாய்ப்புகள்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ரான்சைஸ் தொழில்

ஃப்ரான்சைஸ் பிசினஸ் டிப்ஸ்

னிதர்கள் எப்போதும் தாங்கள் அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

சாதி, மதம், இனம், படிப்பு, வர்க்கம் என எல்லாப் பாகுபாடுகளையும் தாண்டிய இந்த எண்ணம், அழகு சாதனம் மற்றும் சலூன் என்ற மிகப்பெரிய பிசினஸ் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அழகு சாதனம் மற்றும் சலூன்களுக்கு இருக்கும் பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்று பார்ப்போம்.

பிரமாண்ட வளர்ச்சி!

`நமது கலாசாரத்தில் அழகுபடுத்திக்கொள்வது என்பது பெண்களுக்கானது’ என்ற எண்ணம் கடந்த நூற்றாண்டு வரை இருந்தது. கடந்த நூறு ஆண்டுகளில் பணம் படைத்த பெண்களில் ஒரு பிரிவினர் மட்டுமே அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வமும், அதற்கான பணத்தைச் செலவு செய்வதற்கான தகுதியும் பெற்றிருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அழகுபடுத்திக்கொள்வது அனைத்துப் பெண்களுக்குமே (ஆண்களுக்கும்கூட!) அவசியம் என்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

ஃப்ரான்சைஸ் தொழில் - 23 - அழகுக்கலை அள்ளித்தரும் வாய்ப்புகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 2013-ம் ஆண்டு `நைகா’ (Nykaaa0 எனும் நிறுவனத்தை ஃபால்குனி நய்யார் (Falguni Nayar) தொடங்கியபோது, காஸ்மெட்டிக் துறைக்கு இயற்கையாக ஒரு வளர்ச்சி கிடைத்தது. இந்தியாவில் அழகு சாதனப் பொருள்களை ரீடெயிலில் விற்பதற்கு இருந்த இடைவெளியைக் கண்டார் நய்யார். அதை இணைய வணிகம் வழியே சரிசெய்ய முடியும் என்று நம்பினார். ஏறத்தாழ எட்டு வருடங்களுக்குப் பிறகு, நைகா தற்போது தனக்கென ஒரு சந்தையை நிறுவியிருப்பது மட்டுமன்றி, 61 அழகு நிலையங்களையும் அமைத்திருக்கிறது. கூடவே, எல்லா இழப்புகளிலிருந்தும் மீண்டு, 2.31 கோடி ரூபாய் லாபத்தை 2019 வணிக வருடத்தில் பதிவு செய்திருக்கிறது. நைகாவின் வழித்தடத்தைப் பின்பற்றி பல காஸ்மெட்டிக் தளங்கள் தற்போது இயங்கிவருகின்றன.

இன்றைக்கு அழகுபடுத்துவது என்பது அனைவருக்குமே அவசியம் என்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சமூக வலைதளங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. நேரடித் தொடர்புகள் மக்களால் நம்பத் தகுந்தவை என்று கருதப்படுகிறது. இன்ஃப்ளூயன்ஸர்கள் தற்போது மார்க்கெட்டிங் கிங்குகளாக மாறியிருக்கின்றனர். அவர்கள் மூலம், முடியை மென்மை யாக்கும் தயாரிப்பு முதல் ஃபேஸ்மாஸ்க் வரை அத்தனையையும் விற்றுத் தீர்க்கிறார்கள். புதிய புதிய நிறுவனங்கள் இப்படித் தோன்றும்போது, பழைய பிராண்டுகள் டிரெண்டுக்கு தகுந்தாற்போல மாறி, மக்களின் மனதில் தொடர்ந்து இடம்பிடிக்கின்றன.

அழகுக்கலை
அழகுக்கலை

சலூன் துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்!

இந்தியாவில் புதிது புதிதாக சலூன்கள் தோன்றத் தொடங்கியபோது, `அவற்றின் கட்டணம் அதிகமானது; அவை பணக்காரர்களுக்கு மட்டுமேயானது’ என்ற ஒரு கருத்து பரவலாக இருந்தது. அதோடு, முடிதிருத்தம் செய்வது தவிர, வேறு எதற்கும் சலூனை நாடும் வழக்கம் மக்களிடம் இல்லை.

ஆனால், காலம் மாற மாற இந்தப் போக்கும் மாறியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சேவைகள் அத்தனையையும் பயன்படுத்திக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள். காரணம், முடி அலங்காரத்தில் வாடிக்கையாளர் களுக்கு சமீபத்திய டிரெண்டுகள் மேல் உண்டாகியிருக்கும் ஆர்வம்தான்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 23 - அழகுக்கலை அள்ளித்தரும் வாய்ப்புகள்!

சலூன்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அடிப்படைச் சேவைகள் தொடங்கி சிறப்புச் சேவைகள் வரை வளர்ந்திருக்கும் சலூன்கள் ஒரு பெரிய வளர்ச்சிப் பயணத்தைக் கடந்து வந்துள்ளன. SBDC Net தரும் புள்ளிவிவரங்கள்படி, 2012-ம் ஆண்டு மட்டும் ஏறத்தாழ 82,000 பியூட்டி சலூன்களும், 4,000 முடித் திருத்தகங்களும் இணைந்து 20 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளன. இந்த வளர்ச்சிக்குப் பெரிய சலூன்கள் மட்டும் காரணமல்ல, சின்னச் சின்ன சலூன்களும்தான்.

வெறும் பிராண்ட் பெயரை மட்டும் நம்பாமல், டார்கெட் மார்க்கெட் எது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற விலையை நிர்ணயித்தால் இந்தத் துறையில் வெற்றிதான்.

ஆண்டுக்கு 25% என்ற அளவில் வளர்ச்சி கண்டுவரும் துறை என்பதால் போட்டிகளும் பலமாகவே இருக்கின்றன. புதுமை செய்யும் சலூன்கள் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வைத்திருப்பதால், வெற்றி விகிதமும் அதிகரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாப் 10 ஃப்ரான்சைஸிகள்!

இந்தியாவிலிருக்கும் டாப் 10 சலூன் ஃப்ரான்சைஸிகள் என்னென்ன தெரியுமா?

1. ஜாவெத் ஹபீப் ஹேர் & பியூட்டி

2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2014-லிருந்து ஃப்ரான்சைஸிங் செய்துவருகிறது. இதற்கு 484 ஃப்ரான்சைஸிங் யூனிட்டுகள் உள்ளன.

2. ட்ரூஃபிட் & ஹில்

1805-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், லண்டனைச் சேர்ந்தது. 2015-ம் ஆண்டு முதல் ஃப்ரான்சைஸிங் செய்கிறார்கள். 1,040 ஃப்ரான்சைஸிங் யூனிட்டுகள் இருக்கின்றன.

3. ஸ்டூடியோ 11 சலூன் மற்றும் ஸ்பா

2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2013-லிருந்து ஃப்ரான்சைஸிங் செய்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஃப்ரான்சைஸிங் யூனிட்டுகள் உள்ளன.

4. ஷானாஸ் ஹூசைன்

1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 1975 முதலே ஃப்ரான்சைஸிங் செய்கிறது. 200 யூனிட்டுகள் இருக்கின்றன.

5. லேக்மே சலூன்

லேக்மே சலூன் 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1998 முதல் ஃப்ரான்சைஸிங் செய்து வருகிறது. 170 யூனிட்டுகள் இருக்கின்றன.

6. கிரீன் டிரெண்ட்ஸ்

2002-ம் ஆண்டு நிறுவப்பட்ட கிரீன் டிரெண்ட்ஸ் 2010-லிருந்து ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது. 200-500 யூனிட்டுகள் வரை இருக்கின்றன. இவர்களின் ஃபேமிலி சலூன் கான்செப்ட் பிரபலம்.

அழகுக்கலை
அழகுக்கலை

7. கட் அண்ட் ஸ்டைல்

2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட் அண்ட் ஸ்டைல் 2018 முதல் ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது. 20-50 வரை ஃப்ரான்சைஸிங் யூனிட்டுகள் இருக்கின்றன.

8. நேச்சுரல்ஸ்

சென்னையைச் சேர்ந்த முன்னணி நிறுவனம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஃப்ரான்சைஸிங் உரிமையைப் பெண்களுக்கு அளிப்பதில் முன்னுரிமை தருகிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் இதற்கு உள்ளன.

9. நீல்டேவிட்ஸ் இன்டர்நேஷனல் சலூன்

2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு 50-100 யூனிட்டுகள் உள்ளன. 2014 முதல் ஃப்ரான்சைஸிங் தந்து வருகிறது.

10. ஸ்ட்ராண்ட்ஸ் சலூன்ஸ்

2005 ஆண்டில் தொடங்கப்பட்டது; 2007-ம் ஆண்டு முதல் ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது. 50-100 யூனிட்டுகள் வரை இருக்கின்றன.

இந்தத் துறையில் ஃப்ரான்சைஸிங் வாய்ப்பைத் தேடுபவர்கள் இந்த நிறுவனங்களைப் பரிசீலிக்கலாம்.

(ஜெயிப்போம்)