Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 24 - வாகனத்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்!

ஒரு விரிவான பார்வை

பிரீமியம் ஸ்டோரி
றக்குறைய 135 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, 1886-ம் ஆண்டு கார் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்தே, ஆட்டோமொபைல்துறை வளர்ச்சிக்கு வித்திடும் ஒரு துறையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலும் தற்போது பல்லாயிரக்கணக்கான ஆட்டோமொபைல் ஃப்ரான்சைஸ்கள் இருக்கின்றன. உங்களுக்கு கார்களைப் பிடிக்குமென்றால், நீங்கள் தாராளமாக உங்கள் ஹாபியை உங்கள் தொழிலாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 24 - வாகனத்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்!

உங்களுடைய ஆட்டோமொபைல் ஃப்ரான்சைஸியை கொடிகட்டிப் பறக்கவைக்க சில வழிமுறைகள் இங்கே...

முதலில் நீங்கள் எந்த மாதிரியான ஆட்டோமொபைல் ஃப்ரான்சைஸில் ஈடுபட நினைக்கிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். உலகம் முழுக்கவே பல வகையான ஆட்டோமொபைல் துறைகள் பல்வேறு வகையான சேவைகளையும் தயாரிப்புகளையும் வழங்கிக்கொண்டிருக்கின்றன. உங்களுக்கிருக்கும் அனுபவத்தையோ, ஆர்வத்தையோ வைத்து உங்களுக்கு எந்த மாதிரியான துறை பொருந்தும் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

ஆட்டோ கிளாஸ் (Glass) ஃப்ரான்சைஸ், ஆட்டோ பெயின்ட் ஃப்ரான்சைஸ், ஆட்டோமோட்டிவ் ரிப்பேர் ஃப்ரான்சைஸ், கார் வாடகை ஃப்ரான்சைஸ், கார் வாஷ் ஃப்ரான்சைஸ், ஆயில் சேஞ்ச் ஃப்ரான்சைஸ் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஃப்ரான்சைஸ் இவற்றில் உங்களுக்கு எது பொருந்தும் என்பது குறித்து ஆய்வு செய்து, ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்.

ஏற்கெனவே உள்ள ஃப்ரான்சைஸிகளைச் சந்தித்து, எந்த மாதிரியான ஆதரவு வழங்கப்படுகிறது என்பதைக் கேளுங்கள்!

ஆட்டோமோட்டிவ் ஃப்ரான்சைஸில் முதலீடு செய்தவுடன், அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஃப்ரான்சைஸ் வழங்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் என்னென்ன வாய்ப்புகளை வழங்குகிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டால் ஃப்ரான்சைஸர் உங்களுக்கு ஒரு ஃப்ரான்சைஸ் ப்ராஸ்பெக்டஸை அனுப்பி, ஃப்ரான்சைஸ் வாய்ப்பு குறித்து முழு விவரங்களையும் தெரிவிப்பார்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டதும், ஃப்ரான்சைஸின் தலைமை அலுவலகத்தில் ஒரு சந்திப்புக்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேளுங்கள். அந்தச் சந்திப்பு மிக முக்கியமானது. ஏனென்றால், அந்தத் தருணத்தில்தான் நீங்கள் எந்த மாதிரியான நபர்களுடன் வேலை செய்யப்போகிறீர்கள், எந்த மாதிரியான நபர்கள் உங்கள் ஃப்ரான்சைஸுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். கூடவே, ஃப்ரான்சைஸ் பிசினஸில் அவர்கள் எவ்வளவு புரொஃபஷனலாக நடந்துகொள்கிறார்கள் என்பதையும் கணித்துக்கொள்ள முடியும்.

உங்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தால், தற்போது அந்த நிறுவனத்தில் ஃப்ரான்சைஸ் எடுத்திருப்பவர்களின் தொடர்பு விவரங்களைக் கேட்டு வாங்குங்கள். அடுத்ததாக, அந்த ஃப்ரான்சைஸிகளைச் சந்தித்து, அவர்களிடம் எந்த மாதிரியான ஆதரவு வழங்கப்படுகிறது என்பதைக் கேளுங்கள். எவ்வளவு முதலீடு செய்ய வேண்டியிருந்தது என்பதைக் கேளுங்கள், அவர்களுக்கு எந்த அளவுக்கு லாபம் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

முக்கியமான பகுதி இப்போது முடிந்துவிட்டது. அடுத்து உங்கள் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

திட்டம் தயாரியுங்கள்: ஒரு பிசினஸ் திட்டத்தைத் தயாரித்துக்கொள்ளுங்கள். உங்கள் பிசினஸ் திட்டத்தில் முக்கிய விவரங்கள் அனைத்தும் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம், உங்கள் பிசினஸ் என்ன, உங்கள் ஃபைனான்ஸ் எப்படி இருக்கிறது, உங்கள் மார்க்கெட்டிங் திட்டம் என்ன, உங்கள் ஸ்டாஃபிங் எப்படி இருக்கிறது என எல்லாவற்றையும் விவரமாகக் குறிப்பிடவும். இதில் ஆச்சர்யப்படும் வகையில் மாற்றங்கள் உண்டாகலாம். ஆனால், இதுதான் உங்களுக்கு வழிகாட்டும். இதுதான் தேவையான நிதியுதவியை உங்களுக்குப் பெற்றுத்தரும்.

நிதி திரட்டல்: பிசினஸைத் தொடங்க, உங்களுக்கு நிதியுதவி தேவைப்படும். உங்களுக்கு நல்ல வசதி இருக்கிறது என்றால், நீங்கள் சொந்தப் பணத்தையே முதலீடு செய்யலாம் அல்லது வேறு வழிகளைப் பின்பற்றலாம். வங்கியில் கடன் வாங்குகிறீர்களென்றால், பிற ஆட்டோமொபைல் ஃப்ரான்சைஸ்கள் எப்படி லோன் வாங்கியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதைப் பின்பற்றலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடத்தைத் தேடுதல்: உங்கள் பகுதியில் எங்கே ஆட்டோமொபைல் பிசினஸ் தொடங்கலாம், எங்கே தொடங்கக் கூடாது என்பது குறித்து இருக்கும் சட்டங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இவற்றை வைத்துத்தான் நீங்கள் உரிமங்கள் வாங்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும். ஒரு ஃப்ரான்சைஸியாக உங்களுக்கு ஓர் இடத்தைத் தேட உதவிகள் கிடைக்கும். அதை ஃப்ரான்சைஸரே செய்வார்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

உரிமங்கள் வாங்குதல்: எந்தெந்த முக்கியமான உரிமங்கள் வாங்க வேண்டும் என்பதைக் கண்டறியுங்கள். நம் மோட்டார் வாகனச் சட்டங்கள் ஆட்டோமொபைல் துறைக்கு என்னென்ன உரிமங்கள் வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கின்றன.

இன்ஷூரன்ஸ் வாங்குங்கள்: நீங்கள் ஆட்டோமொபைல் பிசினஸைத் தொடங்கும்போது, அதற்கு இன்ஷூரன்ஸ் வாங்குவது கட்டாயம். குறிப்பாக கார் ரிப்பேர் ஷாப் தொடங்கினால், இன்ஷூரன்ஸ் இல்லாமல் இயங்கவே கூடாது.

தேவையான பொருள்களை வாங்குதல்: ஆட்டோமொபைல் பிசினஸ் தொடங்கும் போது, தொடக்கத்தில் செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு ஃப்ரான்சைஸியாக, உங்களுக்குத் தேவையான உதவிகள் ஆட்டோ மோட்டிவ் ஃப்ரான்சைஸரிடமிருந்து வரும்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 23 - அழகுக்கலை அள்ளித்தரும் வாய்ப்புகள்!

தகுதியான நபர்களைப் பணியில் அமர்த்துங்கள்: உங்கள் நிறுவனத்தின் அளவைப் பொறுத்து அல்லது திட்டத்தைப் பொறுத்து எத்தனை ஊழியர்களை வேலைக்கு வைக்கப்போகிறீர்கள் என்பது மாறும். சரியான நபர்களை பணியமர்த்தி, நிர்வகித்து உங்கள் பிசினஸை வளர்ப்பதற்கு இது மிக முக்கியம்.

கடைசிக் கட்டம்: வழக்கம்போல நமக்கு கடைசிக் கட்டம் விளம்பரம் மற்றும் சந்தைப் படுத்துதல்தான். அதற்கென ஒரு தொகையை ஒதுக்கி அதை முறைப்படி செய்யுங்கள்.

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைஸ் ஃப்ரான்சைஸ் நிறுவனங்கள்...

1.மஹிந்த்ரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் (Mahindra First Choice)

2.ஆம்கோ ட்ரான்ஸ்மிஷன் ஷாப் அண்ட் டோட்டல் கார் கேர் (AAMCO: Transmission shop & Total Car Care)

3. 3எம் கார் கேர் (3M Car Care)

4. கோஸி கார் கேர் (Cozy Car care)

5. ஆட்டோ ஹெர்ப் (Auto Herb)

6. வீல் க்ளீனர் (Wheel Cleaner)

7. மால்கோ (Malco Car Care Products)

8. அஷபுரா டிரேட் மற்றும் டிரான்ஸ்போர்ட் (Ashapura Trade & Transport Pvt Ltd)

9. சீல் அல்ட்ரா (Seal Ultra)

10. ஆட்டோமேட்டிவ் இந்தியா (Automative India)

உங்கள் ஆர்வம் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து உங்களுக்கேற்ற ஃப்ரான்சைஸைத் தேர்வு செய்யுங்கள்.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு