Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 25 - கல்வித்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்!

கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
ர்வதேச அளவில் இந்தியாவில் வழங்கப்படும் கல்விக்கும், இந்தியர்களின் அறிவுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது.

நாசா வரை நாம் சென்றிருக்கிறோம். ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அது இன்ஜினீயராக வேண்டுமா, டாக்டராக வேண்டுமா போன்ற பிரமாண்டக் கல்விக் கனவுடன் வளர்த்தெடுக்கிறோம். பள்ளிக் குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் மாலைப் பொழுதில் டியூஷன் சென்டர்களுக்கும், பயிற்சிக் கூடங்களுக்கும் செல்வதை நாம் தினமும் பார்க்கிறோம். இப்படிக் கல்வி நிறுவனங்கள் பெருகியிருக்கும் ஒரு நாட்டில், `கல்வி ஃப்ரான்சைஸ்’ என்பது நிச்சயம் நம் வளர்ச்சிக்கு வித்திடுவதாகவே இருக்கும்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 25 - கல்வித்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்!

கல்வி தொடர்பான ஒரு நிறுவனத்தை ஃப்ரான்சைஸ் எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

1. ஆராய்ச்சி: வெறும் டார்கெட் ஆடியன்ஸ், சந்தை நிலவரம் பற்றி மட்டும் தெரிந்துவைத்திருந்தால் போதாது; கல்வி ஃப்ரான்சைஸின் உட்பிரிவுகளையும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். முதற்கட்டமாக, பல்வேறு கல்வி ஃப்ரான்சைஸ்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்குங்கள். பிற கல்வி ஃப்ரான்சைஸ்களின் மாடல்களையும் வடிவத்தையும் அறிந்துகொள்ளுங்கள். சமகாலக் கல்விச் சந்தை நிலவரத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ப உங்கள் பிஸினஸை வடிவமைப்பது நீண்டகால முயற்சிக்கு வளமான அடித்தளமாக இருக்கும்.

2. உத்வேகம்: எந்த ஃப்ரான்சைஸ், எந்த பிசினஸாக இருந்தாலும் அதற்கு உத்வேகம் அவசியம். கல்வி ஃப்ரான்சைஸ் நிறுவனம் நடத்துவதை ஒரு சாதாரண பிசினஸாக மட்டுமே பார்க்கக் கூடாது. ஏனென்றால் கல்வி, அறியாமை எனும் இருளைப் போக்கும் கருவி. ஒரு நல்ல ஆசிரியர் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு தலைவனை உருவாக்குகிறார். உலகம் முழுவதுமே கல்வியை இப்படித்தான் அணுகுகிறது. எனவே, கல்விமீதும் அறிவின் மீதும், சமூக முன்னேற்றத்தின்மீதும் அக்கறையும் உத்வேகமும் வேண்டும்.

3. பயிற்சி: ஃப்ரான்சைஸில் பயிற்சியளிப்பது ஒரு முறை நடந்து முடியும் விஷயமல்ல. அது தொடர் செயல்பாடு.

கல்வி ஃப்ரான்சைஸ் நிறுவனத்தைத் தொடங்கியது நீங்களாக இருந்தாலும், உங்களை பிரதிநிதித்துவப் படுத்தப்போவது உங்கள் ஊழியர்கள் தான். எனவே, தொடர்ந்து உங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், உங்கள் ஊழியர்களின் நலன் குறித்து உங்களுக்கிருக்கும் பார்வையையும் வெளிப்படுத்துகிறீர்கள். கூடவே பிற ஃப்ரான்சைஸிகளுக்கு உதவுவதன் வழியாக, உங்கள் நிறுவனத்தை நீங்கள் வளர்க்க முடியும். தன்னிச்சையாகச் சென்று பிற ஃப்ரான்சைஸிகளுக்கு உதவுவதைச் செய்யுங்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

4. ஃப்ரான்சைஸி-ஃப்ரான்சைஸர் உறவு: இந்த உறவு, கல்வி ஃப்ரான்சைஸிக்கு மட்டுமே பொருந்தும் கருத்தல்ல. அனைத்து ஃப்ரான்சைஸிகளுமே தங்கள் ஃபிரான்சைஸருடன் நல்ல உறவை வைத்திருந்தால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான சூழல் அங்கு நிலவும். எனவே, நம்பிக்கையின் அடிப்படையிலான ஓர் உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். அந்த உறவுக்கான உழைப்பை முறையே கொடுத்து உரையாடல்களை, விவாதங்களை, ஆலோசனைகளை எளிதாக்குங்கள்.

5. சந்தைப்படுத்துதல்: ஒரு கல்வி ஃப்ரான்சைஸியாக உங்கள் முதல் பொறுப்பு, உங்களுடைய கல்விச் சேவையின் வடிவத்தைச் சந்தைப்படுத்துவது. தொடர்ந்து சந்தைப் படுத்திக்கொண்டே இருங்கள். ஒவ்வொரு வடிவத்தையும் பரிசோதனை செய்து பார்த்து, அதன் வெற்றி விகிதம் எப்படி இருக்கிறது என்பதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 24 - வாகனத்துறையில் ஃப்ரான்சைஸ் வாய்ப்புகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. நிர்வாகத்தின் பின்புலம்: ஒரு ஃப்ரான்சைஸியாக இணையும்போது, முறையே ஆலோசிக்காமல், முதல் ஃப்ரான்சைஸ் நிறுவனத்திலேயே இணையக் கூடாது. எல்லா கல்வி ஃப்ரான்சைஸ் நிறுவனங்களும் உங்கள் கொள்கைகளுடன் ஒத்துப்போகாது. எனவே, ஒரு ஃப்ரான்சைஸில் இணையும்போது குறிப்பிட்ட அந்தக் கல்வி ஃப்ரான்சைஸ் நிறுவனம் எப்படித் தொடங்கப்பட்டது என்பதை விவரமாக அறிந்துகொள்ளுங்கள். அதை யார் தொடங்கியது, எதற்காகத் தொடங்கப்பட்டது, இதுநாள் வரை அவர்கள் சேவை யாருக்குப் பயனளிப்பதாக இருந்திருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், மூன்றாவது நபர் ஒருவரின் கருத்தையும் மறக்காமல் கேட்டுக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால், உங்கள் கொள்கைகளை சமரசம் செய்துகொள்ளாமல், உங்கள் லட்சியத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

7. அமைப்பின் தரம்: உங்கள் பகுதியிலிருக்கும் பாரம்பர்யக் கல்வி நிறுவனங்களைவிட, நீங்கள் இணையப்போகும் ஃப்ரான்சைஸ் எப்படி மாறு பட்டது என்பதை அறிந்து கொள்வது முக்கியம். உங்கள் ஃப்ரான்சைஸின் கல்வித் திட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். அதை பிற கல்வி ஃப்ரான்சைஸ் நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

8. வடிவமைப்பு: ஒரு சராசரி பிசினஸின் திட்டத்தை வடிவமைப்பது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் தோற்றத்தையும் வடிவமைக்கும் கூடுதல் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

உங்கள் ஃப்ரான்சைஸின் பிற கிளைகளைப் பார்த்து, அவர்களின் இன்டீரியர் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதற்கேற்ற ஒரு சூழலை உருவாக்கும்விதமாக, உங்கள் நிறுவனத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் முன்னணியிலிருக்கும் கல்வி ஃப்ரான்சைஸிகளின் பட்டியல் இதோ...

கல்வித்துறை
கல்வித்துறை

அலோஹா: இது 1993-ம் ஆண்டு தொடங்கப் பட்ட நிறுவனம். இதற்கு இந்தியாவில் மொத்தம் 105 யூனிட்டுகள் இருக்கின்றன.

ஆக்‌ஷன் கோச்: இந்த நிறுவனமும் 1993-ம் ஆண்டி தொடங்கப்பட்டதுதான். 500-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் இருக்கின்றன.

ஐ.பி.டி இன்ஸ்டிட்யூட் பிரைவேட் லிமிடெட் (IBT Institute Pvt Ltd): 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு 100-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் உள்ளன.

குமோன் இந்தியா எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட் (Kumon India Education Pvt Ltd): 1954-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு 100-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் உள்ளன.

பிரெயின் செக்கர் டெக்னோ சர்வீசஸ்: 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு 500-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் உள்ளன.

யூசிமாஸ் (UCMAS): மலேசியாவைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், 75 நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் இருக்கின்றன.

ஸ்மார்ட் ஸ்கூல்: 2008-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு 200-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் உள்ளன.

மேத்நேசியம் லேர்னிங் சென்டர்ஸ் (Mathnasium Learning Centers): 2002-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு உலக அளவில் 275 யூனிட்டுகள் இருக்கின்றன.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு