Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 26 - ஃபிட்னெஸ் துறையில் ஃப்ரான்சைஸ்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ரான்சைஸ் தொழில்

குவிந்துகிடக்கும் வாய்ப்புகள்!

வெல்னெஸ் மற்றும் ஃபிட்னெஸ் நிறுவனங்கள்’ என்ற பெயரில் யோகா மையம், ஜிம், தியான மையம், ஸ்பா எனப் பல வகையான நிறுவனங்கள் வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஃப்ரான்சைஸிங்கை எடுத்து, வெற்றிகரமான தொழில் செய்வது எப்படி?

உங்கள் குறிக்கோள், உங்கள் தேவை..!

நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முதல் காரியம், புதிதாக ஒரு ஃப்ரான்சைஸில் இணைகிறீர்களென்றால், அடுத்த மூன்று வருடங்களுக்கு நீங்கள் அதில்தான் கவனம் செலுத்த வேண்டும். காலை எழுந்தவுடன் ஃப்ரான்சைஸ், சாப்பிடும் போதும் ஃப்ரான்சைஸ், தூங்கும்போதும் ஃப்ரான்சைஸ், கனவிலும் ஃப்ரான்சைஸ் என 24 மணி நேரமும் நீங்கள் உங்கள் நிறுவனம் குறித்த சிந்தனையிலேயே இருக்க வேண்டியிருக்கும். உங்கள் இலக்கு என்ன, ஒரு வருடத்தில் ஈட்டிய தொகை எவ்வளவு, லாபம் எவ்வளவு, லாபத்தை எப்படிப் பயன்படுத்து கிறீர்கள், பிசினஸுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையெல்லாம் தெளிவாகக் கண்டுகொள்ள வேண்டியது அவசியம். பிசினஸைக் கட்டியெழுப்புவதும் உடைப்பதும் உங்களால் மட்டுமே முடியக்கூடியது. எனவே, இந்தப் பயணத்தில் நீங்கள் பொறுமையாக, நிம்மதியாக, அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 26 - ஃபிட்னெஸ் துறையில் ஃப்ரான்சைஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பேக்-அப் திட்டம்!

நீங்கள் ஒரு திட்டத்தை வரையறுப்பதற்கு முன்னர், ஒரு பேக்-அப் திட்டத்தை வரையறுக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை உங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், உங்கள் பிசினஸை யார் நடத்துவார், அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்களா அல்லது இனிமேல்தான் ஏற்பாடு செய்ய வேண்டுமா... போன்ற கேள்விகளுக்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்க வேண்டும்.

பிராண்டிங்!

நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தின் பெயர் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஒரு பேடன்ட் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அது டிரேட்மார்க் இல்லாததாக இருக்க வேண்டும். இது இப்போது யோசிக்க ஒரு சின்ன விஷயமாகத் தெரியலாம். ஆனால், எதிர்காலத்தில் பெரிய மாற்றத்துக்கு இது காரணமாக இருக்கும். உங்கள் நிறுவனத்தின் பெயருக்கு வேறு ஒருவர் டிரேட்மார்க் வைத்திருந்தால், உங்கள் உழைப்பு நேரம் எல்லாமே வீண். எனவே, ஒரு டிரேட்மார்க் நிபுணரிடம் இது குறித்து நன்கு விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தணியாத ஆர்வம்!

`ஃபிட்னெஸ் துறையில் பிசினஸ் தொடங்க வேண்டும் அல்லது ஒரு ஃப்ரான்சைஸில் இணைய வேண்டும்’ என்று நினைத்தால், அதற்கு உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டியது தணியாத ஆர்வம். அது இல்லாமல் உங்களால் நிச்சயமாக ஒரு ஃபிட்னெஸ் நிறுவனத்தை நடத்த முடியாது. ஏனென்றால், உங்கள் பிராண்டை நினைக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு உடனே நினைவில் வருவது உங்கள் முகமும் உருவமும்தான். எனவே, பேஷன் இல்லாமல் உங்களால் ஒரு ஃபிட்னெஸ் மற்றும் வெல்னெஸ் துறையில் இயங்க முடியாது.

ஃபிட்னெஸ்
ஃபிட்னெஸ்

பிரமாண்ட வளர்ச்சி!

இந்தியாவின் ஃபிட்னெஸ் துறை, ஒவ்வொரு வருடமும் ஒரு பிரமாண்டமான வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்த வளர்ச்சி இப்போதைக்குத் தடைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே, ஃபிட்னெஸ் துறையில் இறங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. தனிப்பட்ட ஆரோக்கியம் குறித்தும், தினசரி உடற்பயிற்சி குறித்தும் மருத்துவர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு உண்டாக்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்தான் ஃபிட்னெஸ் துறை பெரும் வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது. அதோடு, இந்தக் காலத்தில்தான் பெண்களுக்கு சேவை செய்யும் ஃபிட்னெஸ் நிறுவனங்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. இந்த இடைவெளியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஃபிட்னெஸ்
ஃபிட்னெஸ்

டார்கெட் ஆடியன்ஸ்!

உண்மையில், ஃபிட்னெஸ் என்பது எல்லோருக்குமானது. குழந்தைகள், பெரியவர்கள், அனைத்துப் பாலினங்கள் என ஒரு பெரிய வட்டமே உங்களுக்கு டார்கெட் ஆடியன்ஸாக இருப்பார்கள். இதன் காரணமாக நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் உங்கள் பிசினஸை கொண்டு செல்ல இயலும். உங்களுக்கு நெருங்கியவர்கள், நண்பர்கள், குடும்பம், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் என எல்லாரிடமும் நீங்கள் உங்கள் பிசினஸைக் கொண்டு செல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இடத் தேர்வு மற்றும் பயிற்சியாளர்கள்!

தற்போது ஜிம் என்பது அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அது உங்கள் வாடிக்கையாளர்கள் வந்து சேரக்கூடிய வகையில் மையமான ஓர் இடத்தில் இருப்பதுதான் நல்லது. ஜிம்மின் பரப்பளவு பெரிதாக அமைய வேண்டும். ஏனென்றால், உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களுக்கு என ஒரு ஸ்பேஸ் வேண்டும் என நினைப்பவர் களாகவே இருக்கிறார்கள். கூடவே, ஜிம்முக்குத் தேவையான உபகரணங்களை யும் வாங்க வேண்டும். ஜிம் அமைந்திருக்கும் இடத்தைவிட முக்கியமானது அங்கிருக்கும் பயிற்சியாளர். என்னதான் பிரமாண்டமாக ஜிம் இருந்தாலும், பயிற்சி சரியில்லையென்றால் யாரும் ஜிம்முக்கு வரப் போவதில்லை. சாதாரணமாக, இந்த விஷயங்களிலெல்லாம் ஃப்ரான்சைஸ் ஓனர் நிச்சயமாக உதவுவார்.

ஃபிட்னெஸ்
ஃபிட்னெஸ்

2019-ம் ஆண்டில் டாப் 10 இடங்களில் இருந்த ஜிம் ஃப்ரான்சைஸ்கள்...

யூ.எஃப்.சி ஜிம்

2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஜிம், 2013 முதல் ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது. இப்போது வரை 200 முதல் 500 ஃப்ரான்சைஸிங் யூனிட்டுகள் இருக்கின்றன.

ஸ்நாப் ஃபிட்னெஸ் 24/7

2003-ம் தொடங்கப்பட்டு, 2008-ம் ஆண்டிலிருந்து ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது. 300 யூனிட்டுகள் இருக்கின்றன.

தல்வார்க்கர்ஸ் ஜிம்

1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஜிம் இப்போது 150 ஃப்ரான்சைஸ் யூனிட்டுகளுடன் செயல்படுகிறது.

ஃபிட்னெஸ்
ஃபிட்னெஸ்

எனர்ஜி ஃபிட்னெஸ்

2003-ம் ஆண்டு தொடங்கப்பட்டது; 2018-ம் ஆண்டிலிருந்து ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது.

பாடி பில்டிங் இந்தியா

2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அடுத்த ஆண்டிலிருந்தே ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது.

O2 ஜிம்

2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஜிம், 2010-லிருந்து ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது.

கோல்ட்ஸ் ஜிம்

1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஜிம், 2002-ம் ஆண்டிலிருந்து ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது.

ஃபிட்னெஸ் ஒன்

இந்தியாவின் பிரபல ஜிம் ஃப்ரான்சைஸ். 2004-லம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கிரிஸ் கெதின் ஜிம்

2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2018-லிருந்து ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது.

எனிடைம் ஃபிட்னெஸ்

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம். அப்போதிருந்தே ஃப்ரான்சைஸிங்கில் இருக்கிறது.

(ஜெயிப்போம்)