Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 28 - கலக்கலான வாய்ப்பு தரும் கார் வாஷ்!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்

வளர்ந்துவரும் பிசினஸ்..!

ஃப்ரான்சைஸ் தொழில் - 28 - கலக்கலான வாய்ப்பு தரும் கார் வாஷ்!

வளர்ந்துவரும் பிசினஸ்..!

Published:Updated:
ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
ஃப்ரான்சைஸ் தொழில்
ன்றைய ஃப்ரான்சைஸிங் சூழலில் வளர்ந்துவரும் பிசினஸ் துறையாக இருப்பவற்றில் முக்கியமானது கார் வாஷ் பிசினஸ். இந்தியாவின் கார் சந்தை குறிப்பிடத் தகுந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துவருகிறது.

இதே நிலை நீடிக்கும்போது, 2050-ம் ஆண்டில், இந்தியா உலகிலேயே அதிக அளவு கார் வாடிக்கையாளர்களைக்கொண்ட நாடாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்ரான்சைஸ் தொழில் - 28 - கலக்கலான வாய்ப்பு தரும் கார் வாஷ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார் வாஷ் என்பது கழுவுதல், சுத்தம் செய்தல், டிரை ஆக்குதல், பாலிஷ் செய்தல் மற்றும் பிற காஸ்மெடிக் கேர் செய்வது என அத்தனையையும் உள்ளடக்கியது. கார் வாஷில் ஒரு காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் சுத்தம் செய்யப்படுகிறது. வெளிப்புறத்தைச் சுத்தம் செய்ய வெந்நீர், டிடர்ஜென்ட் ஃபோமிங், ஸ்டீம் கிளீனிங், வேக்ஸிங், ஹை பிரஷர் கிளீனிங், கோட்டிங் ஆகிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. காரின் உட்புறத்தை கிளீனிங் & கண்டிஷனிங், டிரெஸ்ஸிங், வாக்வமிங், குரூமிங் ஆகியவை செய்து சுத்தம் செய்கின்றனர்.

கார் வாஷ்
கார் வாஷ்

இந்தியா மாதிரியான நாடுகளிலிருக்கும் சிக்கல் என்னவெனில், கார் சுத்தம் செய்யும் மையங்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதில்லை என்பதுதான். காரைச் சுத்தம் செய்யப் பணம் செலவிடத் தயாராக இருந்தாலும்கூட, திருப்திகரமான சேவை கிடைக்குமா எனும் கேள்வி எழுகிறது.

குறிப்பாக, நகரங்களில்தான் இந்தச் சிக்கல் பரவலாக இருக்கிறது. ஏனென்றால், கிராமங்களின் வாழ்க்கைமுறையும், நகரங்களின் வாழ்க்கைமுறையும் இரு வேறு துருவங்களாகவே இருக்கின்றன. கிராமங்களில் கார் வாஷ் சேவைக்கான தேவை இருப்பதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காரைச் சுத்தம் செய்யத் தனியாக ஒரு சேவை மையம் இல்லாதபட்சத்தில், கார் உரிமையாளர்கள் தினசரி காரை அவர்களே சுத்தம் செய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், வேகமாகச் சுழலும் வாழ்க்கைமுறையால் பலராலும் காரை தினமும் சுத்தம் செய்து கவனித்துக்கொள்ள முடிவதில்லை.

இந்தச் சூழலில்தான் கார் வாஷ் தொழிலுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தியாவில் கார் டீடெயிலிங்குக்கும் அதிக கவனம் தரப்படுகிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

ஒரு கார் வாஷ் நிறுவனத்தை வடிவமைத்து, அதற்கு நிதியும் பெற்று, அதை நிறுவவும் செய்வது என்பது கடினமான காரியம்தான். ஆனால், `முறையாகத் திட்டமிட்டு, சரியான இடத்தைப் பிடித்து விட்டால், இந்த பிசினஸ் பெரிய வருவாயை ஈட்டித் தருவதாக இருக்கும்’ என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மேலும், கார் வாஷ் துறையில் இயங்கப் பலருக்கும் ஆர்வம் இருப்பதாகவும், ஆனால், அதற்குத் தேவைப்படும் முதலீடுதான் இங்கே பல ஆர்வலர்களுக்கும் தடையாக இருப்பதாகவும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

ஃப்ரான்சைஸிங்கில் இந்தத் துறையில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களென்றால், பிசினஸில் இறங்குவதற்கு முன்னர் நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டிய சில முன்னணி நிறுவனங்கள் எவை என்று பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்பீடு கார் வாஷ்

கார் வாஷ் சேவைகள் வழங்கத் தொடங்கிய நிறுவனங்களில் முதன்மையானது `ஸ்பீடு கார் வாஷ்.’ லிவ் இந்தியா நிறுவனத்தால் கார் சுத்தப்படுத்தும் சேவைகளுக்கென தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். காரின் சுத்தம் பற்றியும், அந்த கலாசாரத்தைப் பற்றியும் விழிப்புணர்வு கொடுப்பதில் இந்த நிறுவனம் முன்னோடியாக இருக்கிறது.

கார் வாஷ்
கார் வாஷ்

இளம் ஃப்ரான்சைஸர்கள் இவர்களுடைய கருத்துகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கார் வாஷ் பிசினஸின் தற்போதைய நிலவரம் எப்படியிருக்கிறது என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அவர்களுடைய கார் சுத்தத்துக்கான திட்டம் எப்படி அமைக்கப் பட்டது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். காரின் வெளிப் பக்கத்தையும், உள்பக்கத்தையும் எப்படிச் சுத்தமாக வைத்திருப்பது என்பதையும் கற்றுக்கொள்ளலாம்.

எக்ஸ்பிரஸ் கார் வாஷ்!

வேகமாகச் சுழலும் வாழ்க்கைமுறையை மனதில் வைத்து நிறுவப்பட்டது எக்ஸ்பிரஸ் வாஷ். பிஸியாக இருக்கும் கார் உரிமையாளர்களுக்கு வேகமாக கார் சுத்தம் செய்து கொடுப்பதுதான் இவர்கள் சேவையின் முதன்மை நோக்கம்.

தொழில்முறை நிபுணர்களையும், பிரமாண்டமான கருவிகளையும்கொண்டு கார்களை 20 நிமிடங்களில் சுத்தம் செய்து தருவதாக இந்த நிறுவனம் சொல்கிறது. இந்தத் துறையில் வேலை செய்ய நினைக்கும் ஃப்ரான்சைஸர்கள் இந்த மாதிரி பிராண்டுகளிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். கார் சுத்தம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதாக இருந்தாலும் சரி, குறைந்த நேரத்தில் காரைச் சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி இந்த மாதிரியான பாடங்களைக் கற்றுக்கொள்வது பிசினஸுக்குச் சிறந்தது.

பவுடர் கோட்டிங்

கார் வாஷிங் செய்யும் தொழிலுடன் நெருங்கிய தொடர்புகொண்டிருக்கும் இன்னொரு துறை, பவுடர் கோட்டிங். 2017-ம் ஆண்டில் இந்தியாவின் பவுடர் கோட்டிங் துறையின் மொத்த மதிப்பாக இருந்தது 896.7 மில்லியின் டாலர். இதுவே 2025-ம் ஆண்டு 1,508.2 மில்லியன் டாலராக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுடர் கோட்டிங் என்பது மெட்டல்கள் துருப்பிடித்துப் போகாமலிருக்க அவற்றின்மீது அடிக்கப்படும் ஒரு வகையான பெயின்ட்.

கார் வாஷ்
கார் வாஷ்

வளர்ந்துவரும் தொழிற்சாலைகளாலும், கிராமங்களெல்லாம் நகரங்களாக மாறுவதாலும் இந்தியாவின் பவுடர் கோட்டிங் மார்க்கெட் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. மேலும், வாகனங்கள், ஃபர்னிச்சர்களுக்கான பிற தொழிற்சாலைகளாலும், அவற்றிலிருக்கும் டிமாண்ட்களாலும் பவுடர் கோட்டிங் துறை பிரமாண்டமாக வளர்ந்துவரும் ஒரு துறையாக இருக்கிறது. இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்து வருவதன் காரணமாக, இந்தியாவின் பவுடர் கோட்டிங் சந்தையின் அளவும்கூட விரிவாகிவருகிறது. ஏசியா- பசிஃபிக் சந்தையிலிருக்கும் சிறப்பான முதலீட்டால் இந்தியாவின் பவுடர் கோட்டிங்கின் சந்தைப் பங்கு நல்ல அளவில் வளர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் பவுடர் கோட்டிங்ஸ் சந்தை ரெசின் வகை, கோட்டிங் முறை, அப்ளிகேஷன் மற்றும் வட்டாரத்தைப் பொறுத்து பிரிக்கப்படுகிறது. ரெசின் வகையைவைத்து, இந்தியாவின் பவுடர் கோட்டிங் சந்தை தெர்மோசெட் மற்றும் தெர்மோப்ளாஸ்டிக் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், ஆட்டோமொபைல் துறை, விவசாயம், கட்டடக்கலை என்று பல வகையான பயன்பாடுகள் இந்தத் துறைக்கு இருக்கின்றன. மேலும், வட்டாரவாரியாக பிரிக்கும்போது, வடக்கு இந்தியா, தெற்கு இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இந்தியா என்று இந்தத் துறையின் இயங்குநிலை பிரிக்கப்படுகிறது.

இப்படி கார் வாஷ் சேவை துறையும், பவுடர் கோட்டிங் துறையும் இரண்டு முக்கியமான துறைகளாக இருக்கின்றன. ஆட்டோமொபைலில் ஆர்வமுள்ள நபர்கள் ஃப்ரான்சைஸிங்கில் இறங்க விரும்பினால், இந்த இரண்டு துறைகளையும் முதலில் அலசி ஆராய்ந்துவிட்டு முடிவெடுப்பது அவசியம்.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism