Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 29 - டே கேர்... ப்ரீஸ்கூல் ஃப்ரான்சைஸ்! - வளர்ந்துவரும் தொழில் வாய்ப்பு!

ஃப்ரான்சைஸ் தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃப்ரான்சைஸ் தொழில்

டே கேருக்கும், குழந்தைகளின் வீடுகளுக்குமான இடைவெளி 5 கிலோ மீட்டருக்கும் குறைந்ததாகவே இருக்க வேண்டும்.

ன்றைய பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகள் கல்வியில் மட்டும் சிறப்பாக விளங்கினால் போதாது, எக்ஸ்ட்ரா கரிகுலர் நடவடிக்கைகளிலும் முதன்மை பெற்றிருக்க வேண்டும் என்ற ஆசை அதிகம். நடனம், நடிப்பு, பாடல் என டி.வி-யில் வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளெல்லாம் பெற்றோர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருக்கின்றன.

டெக்னாவியோ நிறுவனத்தின் மார்க்கெட் ரிசர்ச் அனலிஸ்டுகள், ப்`ரீஸ்கூல் மற்றும் டே கேர் சந்தை இந்தியாவில் வரும் வருடங்களில் பிரமாண்ட வளர்ச்சியைச் சந்திக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, டே கேர் துறையில் ஒரு பிசினஸைத் தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் நினைவில்கொள்ள வேண்டிய அம்சங்களைப் பார்ப்போம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 29 - டே கேர்... ப்ரீஸ்கூல் ஃப்ரான்சைஸ்! - வளர்ந்துவரும் தொழில் வாய்ப்பு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. டே கேர் பயிற்சி

எந்தவொரு வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும், அதன் முதற்கட்டம் அந்த வேலைக்காக நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலிருந்துதான் தொடங்கும். ஒரு தலைமுறையின் குழந்தைகள் உங்கள் டே கேரிலிருந்து தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். அவர்கள் அடுத்து எந்தக் கல்வி நிறுவனத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்பது முழுக்க முழுக்க நீங்கள் அமைத்துக்கொடுக்கும் அடித்தளத்தைச் சார்ந்தே இருக்கிறது. இது உங்கள் பிசினஸ் மற்றும் உங்கள் லாபத்தை நேரடியாக பாதிக்கும் ஒரு விஷயமாகவும் இருக்கும். எனவே, டே கேரின் ஓனர் மற்றும் பணியாளர்கள் என அத்தனை பேருக்கும் குழந்தைகளுடன் பழகுவது எப்படி, அவர்களுக்குப் புதிய விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பது எப்படி ஆகியவை பயிற்சியளிக்கப்பட வேண்டும். மேலும், இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2. டே கேர் லைசென்ஸ் மற்றும் சான்றிதழ்கள்

ஒரு புது டே கேர் மையத்தைத் தொடங்க அல்லது பெரிய பிராண்டின் ஃப்ரான்சைஸை வாங்க சர்ட்டிஃபிகேஷன் என்பது மிகவும் அவசியமானது. இதை லகுவாக எடுத்துக்கொண்டு முறையாக வாங்காமல் விட்டால், பெரிய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த சர்ட்டிஃபிகேஷன்தான் பெற்றோர்கள் குழந்தைகளை உங்களை நம்பி அனுப்ப உதவும் கருவியாக இருக்கிறது.

டே கேர்...
ப்ரீஸ்கூல்
டே கேர்... ப்ரீஸ்கூல்

3. டே கேர் மையப் பரிசோதனை

உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஓர் இடத்தையோ, அபார்ட்மென்டையோ வாங்கி விட்டால் டே கேரைத் தொடங்கிவிடலாம் என நினைக்க வேண்டாம். டே கேர் என்பது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். மெயின் ரோட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்க வேண்டும், மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஆட்கள் இருக்க வேண்டும்.

டே கேருக்கும், குழந்தைகளின் வீடுகளுக்குமான இடைவெளி 5 கிலோ மீட்டருக்கும் குறைந்த தாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை டிராப் செய்யவும், பிக்கப் செய்யவும் வசதியாக இருக்கும். டே கேரில் குழந்தைகள் பயன் பாட்டுக்கு என வசதியான பொம்மைகளும், பிற பொருள்களும் இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4.டே கேருக்குத் தேவையான முதலீடு மற்றும் கடன்

வங்கிகளில் கடன் வாங்குவதும், பெரிய பிராண்டுகளுடன் இணைந்து இயங்குவதும் எளிதில் நடக்கக்கூடிய காரியமே. இந்த பிசினஸுக்கு ஒரு முறை முதலீடு செய்தாலே போதும்... வருடம் முழுக்க அதற்கான பலனை அடையலாம். ஒருவேளை முதல் வருடத்திலேயே டே கேர் நன்றாகச் செயல்பட்டுவிட்டதென்றால், பெரிய முதலீட்டாளர்கள் உங்கள் டே கேரில் முதலீடு செய்யவும் வாய்ப்பிருக்கிறது.

டே கேர்...
ப்ரீஸ்கூல்
டே கேர்... ப்ரீஸ்கூல்

5. வழக்கறிஞரைப் பணிக்கு அமர்த்துங்கள்!

எந்த டே கேர் ஃப்ரான்சைஸை வாங்குவது என முடிவு செய்தாலும், உடனே ஒரு ஃப்ரான்சைஸ் வழக்கறிஞரை பணிக்கு அமர்த்துங்கள். ஃப்ரான்சைஸ் வழக்கறிஞர்கள் உங்களுக்கு ஒரு சிறப்பான பிசினஸ் டீல் கிடைப்பதை உறுதி செய்வார்கள். அவர்கள் நிபுணர்களாக இருக்கும்பட்சத்தில், ஃப்ரான்சைஸிங் பிராசஸ் எப்படி நடக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். ஃப்ரான்சைஸ் ஓனராவது எப்படி என்றும் சொல்லிக் கொடுப்பார்கள்.

மேலும், உங்களிடம் ஒரு ஃப்ரான்சைஸ் வழக்கறிஞர் இருந்தால், நீங்கள் வாங்க நினைக்கும் சைல்டு கேர் ஃப்ரான்சைஸ்கள் உங்களைக் கருத்தில்கொள்வார்கள். இதுதான் ஃப்ரான்சைஸருக்கும் ஃப்ரான்சைஸிக்கும் இடையே ஒரு நல்ல உறவை உண்டாக்கிக் கொள்ள முக்கியமான கட்டமாக இருக்கிறது. டே கேர் ஃப்ரான்சைஸை வாங்குவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள ஒரு ஃப்ரான்சைஸ் வழக்கறிஞரை பணிக்கு அமர்த்துவது முக்கியம்.

6. திட்டமிடல்

ஒரு டே கேர் ஃப்ரான்சைஸைத் தொடங்கும்போது திட்டமிடல் மிகவும் அவசியமானது. டே கேர் பிசினஸ் திட்டத்தை எழுதுவது என்பது கடினமான காரியம்தான், ஆனால், இந்தக் கட்டத்தில் நீங்கள் கடின உழைப்பைச் செலுத்தினால், ஸ்டார்ட்-அப்பின் அடுத்தடுத்த கட்டங்கள் எளிதானதாக இருக்கும். உங்கள் டே கேரின் மிஷன் ஸ்டேட்மென்ட் என்ன, மார்க்கெட்டிங் திட்டம் என்ன, நிர்வாகத் திட்டம் என்ன, இயங்குமுறை எப்படி இருக்கும், பட்ஜெட் எவ்வளவு என்பதையெல்லாம் எழுத வேண்டும். தேவையான ஆய்வை, உங்கள் குறிக்கோளை கருத்தில்கொண்டு செய்ய வேண்டும்.

டே கேர்...
ப்ரீஸ்கூல்
டே கேர்... ப்ரீஸ்கூல்

மேலும், டே கேர் ஃப்ரான்சைஸில் பேரிடர் பொழுதில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு என ஃபயர் எஸ்கேப் திட்டம் ஒன்றையும் அமைப்பது அவசியம். தொழில்முனைவுக்கு ஊக்கம் கொடுக்க யாரும் இதைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், மக்களின் குழந்தைகளைவைத்து பிசினஸ் நடத்தும்போது, இது எப்படி அவசியமாகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். முறையான அதிகாரிகளிடம் கலந்துரையாடி, ஒரு ஃபயர் எஸ்கேப் திட்டத்தை வடிவமையுங்கள். இதனால் டே கேருக்கு வரும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் பாதுகாப்பாக, அமைதியாக, சந்தோஷமாக உணர்வார்கள். ஒரு டே கேர் ஃப்ரான்சைஸியைத் தொடங்குவதற்கு இது மிக முக்கியமான தகுதி.

டே கேர்...
ப்ரீஸ்கூல்
டே கேர்... ப்ரீஸ்கூல்

7. மார்க்கெட்டிங் திட்டங்கள்

இறுதியாக, உங்கள் சைல்டு கேர் மையத்துக்கு ஒரு மார்க்கெட்டிங் திட்டமும் இணையதளமும் இருப்பது அவசியம். உள்ளூரில் சைல்டு கேர் குறித்த குறிப்புகளிலெல்லாம் உங்கள் நிறுவனத்தையும் சேர்த்துவிடுங்கள். உள்ளூர் பிசினஸ்கள், பெற்றோர் குழுக்கள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பிரபல சைல்டு கேர் பிளாக்குகளிலெல்லாம் உங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்துங்கள். உங்கள் டார்கெட் ஆடியன்ஸ் யாரோ, அவர்களைக் கவர சோஷியல் மீடியாவில் ஒரு மார்க்கெட்டிங் பிரசாரம் நடத்துங்கள். நிறுவனத்தைத் தொடங்குவதற்கு போதுமான மார்க்கெட்டிங் செய்த பிறகு ஒரு நிரந்தரமான, நிதானமான மார்க்கெட்டிங் திட்டத்தை வைத்து வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.

தேசிய அளவில் இப்போது டே கேர் மையங்களில், டாப் ஏழு இடங்களில் முதலில் இருப்பது கிட்ஸீ (1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது). ஏபிசி மாண்டிசேரி, யூரோ கிட்ஸ், ஷெம்ராக், பச்பன், ஹெல்லோ கிட்ஸ், லிட்டில் மில்லினியம் ஆகிய டே கேர் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

டே கேர் மற்றும் ப்ரீ ஸ்கூல் நடத்துவதென்பது, பெருமளவு திருப்தியளிக்கும் ஒரு வேலை. ஆனால், இதை எல்லாராலும் செய்துவிட முடியாது. ஆனால், ஆர்வத்துடன் பொறுமையாகச் செயல்பட்டால், நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை!

(ஜெயிப்போம்)