Published:Updated:

ஃப்ரான்சைஸ் தொழில் - 30 - ஃப்ரான்சைஸிங்... ஆலோசகர் அவசியம் தேவை..! - வெற்றிக்கான வழிகாட்டல்

புதிய தொழில் திட்டங்களை வகுத்துத் தருவது ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் வேலை!

பிரீமியம் ஸ்டோரி
ந்தவொரு பிசினஸில் இறங்குவதற்கு முன்னதாகவும் தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது மிக அவசியம். ஃப்ரான்சைஸ் பிசினஸில் இறங்குவதற்கு முன்னர், அந்தத் தொழில் பற்றி நன்கு அறிந்த ஓர் ஆலோசகரின் ஆலோசனையும் வழிகாட்டுதலும் அவசியம் தேவை என்பதைப் பலரும் உணர மறுக்கிறார்கள்.

‘பிசினஸ் செய்யப்போவது நான். ஃப்ரான்சைஸி தரும் நிறுவனம் எனக்கு வழிகாட்டப்போகிறது என்கிறபோது, ஃப்ரான்சைஸ் கன்சல்டன்ட் என்பவர் எதற்கு?’ என்று நினைக்கின்றனர் சிலர். ஆனால், ஒரு ஆலோசகரின் உதவியுடன் இந்தத் தொழிலை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 30 - ஃப்ரான்சைஸிங்... ஆலோசகர் அவசியம் தேவை..! - வெற்றிக்கான வழிகாட்டல்

ஒரு பிசினஸ் ஃப்ரான்சைஸில் இறங்க வேண்டுமென்றால், அவர்கள் ஒரு வெற்றிகரமான பிசினஸ் அமைப்பை வைத்திருக்க வேண்டும். அந்த அமைப்பை இயக்குபவர்களுக்கு அதிலிருந்து நன்மை கிடைக்கும்படி ஒரு வெற்றிகரமான பிசினஸ் அமைப்பாக அதை வளர்த்துவைத்திருக்க வேண்டும்.

1. உங்களுடைய பிஸினஸில் நீங்கள் வெற்றிகரமாக இருந்தாலும், ஃப்ரான்சைஸிங் தொடங்கும்போது நீங்கள் ஒரு புது பிசினஸைத் தொடங்குவது போலத்தான் இருக்கும். ஏதாவது ஒரு துறையில் பிசினஸ் செய்யும்போதே நீங்கள் ஃப்ரான்சைஸ் பிசினஸிலும் இறங்குவீர்கள். நீங்கள் தற்போது செய்துகொண்டிருப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகில் காலெடுத்து வைப்பீர்கள். அப்போது சில குழப்பங்களும் தடுமாற்றங்களும் உங்களுக்கு ஏற்படலாம். இவற்றிலிருந்து விடுபட ஃப்ரான்சைஸின் அடிப்படைகள் பற்றித் தெரிந்துவைத்திருப்பது அவசியம். இதைத் தெரிந்துகொள்ள ஒரு நல்ல ஃப்ரான்சைஸ் ஆலோசகர் உதவுவார்.

2. உங்களுடைய பிசினஸ் இப்போது லாபகரமானதாக இருக்கலாம். ஆனால், அதுவே ஃப்ரான்சைஸியாக மாறும்போது லாபகரமானதாக இருக்குமா என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். ஃப்ரான்சைஸ் ஆலோசகர்கள் `மாடலிங்’ எனும் உத்தி வழியே இதற்கு பதிலளிப்பார்கள். அவர்களுடைய அனுபவத்தைவைத்து அதாவது, ஒரு ஃப்ரான்சைஸ் அமைப்பை உருவாக்குவதன் வரவு, செலவுகள் மற்றும் ஃப்ரான்சைஸி மார்க்கெட் செய்வது, ஃப்ரான்சைஸிகளை பணி அமர்த்துவது போன்றவற்றுக்கு ஆகும் செலவுகளை கணித்து ஆலோசகர்கள் உங்களுக்குச் சொல்வார்கள்.

ஃப்ரான்சைஸ் தொழில் - 29 - டே கேர்... ப்ரீஸ்கூல் ஃப்ரான்சைஸ்! - வளர்ந்துவரும் தொழில் வாய்ப்பு!

3. உங்களுடைய வாடிக்கையாளர்களை நோக்கிச் செல்லலாம் என முடிவெடுத்தால், ஃப்ரான்சைஸி சந்தைப்படுத்துதல் மற்றும் சரியான நபர்களைப் பணி அமர்த்தல் ஆகிய வேலைகளை ஃப்ரான்சைஸ் ஆலோசகர் பார்த்துக்கொள்வார். இருக்கும் வளங்களை வைத்து அதாவது, பத்திரிகைகள், கண்காட்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓர் ஊடகத் திட்டத்தை நிறுவனங்களுக்கு வகுத்துக் கொடுப்பார்.

franchise
franchise

4. வேலை தேடும் இளைஞர்களை இணையதளத்தின்மூலம் கண்டறிந்து, அவர்களைத் தொலைபேசி வாயிலாக நேர்காணல் செய்து, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து, அவர்களை மட்டுமே ஃப்ரான்சைஸருக்கு அனுப்புவார்.

5. மேலும், மிக அவசியமான ஆவணப்படுத்துதல் வேலைகளைச் செய்ய ஃப்ரான்சைஸ் ஆலோசகர் உதவியாக இருப்பார். குறிப்பாக, ஆபரேஷன்ஸ் மேனுவல் மற்றும் ஃப்ரான்சைஸ் ஒப்பந்தம் ஆகியவற்றை வடிவமைக்க உந்துகோலாக இருப்பார். சில சமயங்களில் இதைப் போன்ற ஆவணங்களை ஃப்ரான்சைஸ் ஆலோசகரேகூட வடிவமைப்பதுண்டு. மேலும், சரியான ஃப்ரான்சைஸ் வழக்கறிஞரைத் தேர்வு செய்து அவரை ஃப்ரான்சைஸ் ஒப்பந்த வரைதல் வேலையில் இயங்கச் சொல்வார். அவருக்கு இருக்கும் அனுபவத்தின் வழியே இந்த மொத்த வேலைகளுக்காகச் செய்யப்படும் செலவு குறைவாக இருக்கும் எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

6. ஃப்ரான்சைஸ் சமூகத்துக்குள் இருக்கும் பிற சேவைகள் தேவைப்படும்போது ஃப்ரான்சைஸ் ஆலோசகர் தன்னுடைய அனுபவத்தை வைத்து உதவுவார். இது வங்கிகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவி தொடங்கி பல அசோசியேஷன்களில் உறுப்பினராவது வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது மாதிரியான எல்லா விஷயங்களிலும் நன்கு அனுபவம் வாய்ந்த ஃப்ரான்சைஸ் ஆலோசகர் உங்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பார்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

7. ஃப்ரான்சைஸரின் மேலாண்மையில் முறையே பயிற்சியளிக்கவும், உதவி மற்றும் சேவைகள் அளிக்கவும் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் புதிய ஊழியர்களைப் பணியமர்த்தி அவர்களுக்குப் பயிற்சியளித்து களத்தில் இறங்குவார்.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

மேற்சொன்ன நடவடிக்கைகள் எல்லாம் நடந்து முடிந்ததென்றால் ஒரு ஃப்ரான்சைஸி வலிமையான ஃப்ரான்சைஸ் அமைப்பை உருவாக்கிவிடலாம். ஒரு புது ஃபிரான்சைஸர் செய்வதைவிடச் சிறப்பான அமைப்பாகவே இது இருக்கும்.

ஃப்ரான்சைஸ் பிசினஸில் இறங்கி நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களிடம் இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, அனுபவம் வாய்ந்த ஃப்ரான்சைஸ் ஆலோசகரை அணுகுவது அல்லது தவறுகளுக்கு மேல் தவறு செய்து நீங்களே கற்றுக்கொள்வது.

இங்கே புது ஃரான்சைஸர்கள் மட்டுமே ஃப்ரான்சைஸ் ஆலோசகரிடமிருந்து ஆலோசனை பெற்று நன்மை அடைய முடியும் என்பதில்லை. நீங்கள் வெற்றிகரமாகச் செயல்படும் ஒரு ஃப்ரான்சைஸி என்று வைத்துக்கொண்டாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் உங்கள் மார்க்கெட்டிங் கில் குழப்பங்கள் ஏற்படும்போது அதைச் சரிசெய்ய ஒரு ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் உதவி தேவையாக இருக்கலாம். அதாவது, புதிதாக ஃப்ரான்சைஸ் தொழிலுக்கு வந்தவர் அந்தத் தொழிலை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும் வரை ஒரு பலமான அமைப்பை உருவாக்கித் தருவதும், ஏற்கெனவே களத்திலிருக்கும் ஃப்ரான்சைஸருக்குப் புதுத் தொழில் திட்டங்களை வகுத்துத் தருவதும் ஃப்ரான்சைஸ் ஆலோசகரின் வேலையாக இருக்கிறது.

ஃப்ரான்சைஸ் தொழில்
ஃப்ரான்சைஸ் தொழில்

எங்களுடைய ஸ்ட்ராடஜைஸர் ஃப்ரான்சைஸ் கன்சல்டன்ட், ஃப்ரான்சைஸி தொடர்பான சேவைகளை வளர்ந்துவரும் ஃப்ரான்சைஸர்களுக்கும், வெற்றிகரமாக நிறுவப்பட்ட ஃப்ரான்சைஸர்களுக்கும் சிறப்பாக வழங்கிவருகிறது. ஃப்ரான்சைஸிங் கோச்சாக இருந்த என் அனுபவத்தை வைத்து தொழில்முனைவோர் ஃப்ரான்சைஸிங்கில் வெற்றி பெற வழிகாட்டியாக இருந்துவருகிறேன்.

இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து படித்தவர்கள், ஃப்ரான்சைஸ் பிசினஸில் இறங்குவதற்கு முன்னர் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுரைத் தொடர் மூலம் நீங்கள் முதல்படியில் ஏறியிருக்கிறீர்கள். ஃப்ரான்சைஸிங் பிசினஸில் இறங்கி, நீங்கள் வெற்றிகரமான பிசினஸ்மேனாக ஆக வேண்டுமெனில், நீங்கள் செய்வதற்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகக் குறையில்லாமல் செய்து முடித்தால்தான் வெற்றி என்ற இலக்கை உங்களால் அடைய முடியும். அந்த வெற்றி இலக்கை நீங்கள் அடைவதற்கு என்னால் என்னென்ன ஆலோசனைகளைத் தர முடியுமோ, அவற்றைத் தர தயாராகவே இருக்கிறேன்.

ஃப்ரான்சைஸிங் பிசினஸ் பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாலோ அல்லது இந்தக் கட்டுரைத் தொடர் பற்றி உங்கள் கருத்துகள் ஏதேனும் இருந்தாலோ strategizerindia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். நன்றி.

(முற்றும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு