Published:Updated:

`தமிழகம் $1 ட்ரில்லியன் இலக்கை எட்ட இதுதான் முக்கியம்!' - TANSIM அதிகாரி சிவராஜா ராமநாதன்

 சிவராஜா ராமநாதன்
News
சிவராஜா ராமநாதன்

``முதல் கட்டமாக ஸ்டார்ட் பூங்கா சென்னையில் அமைக்க இருக்கிறோம். இதே போல, பூங்காக்கள் மற்ற முக்கிய நகரங்களிலும் அமைக்க திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 80-க்கும் மேற்பட்ட இன்குபேட்டர்கள் மையங்கள் உள்ளன. ஆனால், அவை சென்னை மற்றும் கோவையிலே பெரும்பாலும் இருக்கின்றன."

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை (TANSIM - Tamil Nadu Startup and Innovation Mission) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியாக நேட்டிவ் லீட் அமைப்பின் சிவராஜா ராமநாதன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஜனவரி முதல் வாரத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.
``தமிழ்நாட்டிலும் துறை சார்ந்த அனுபவம் கொண்டவரை இந்த நிறுவனத்தின் சி.இ.ஒ.வாக நியமனம் செய்ய அரசு திட்டமிட்டபோது, நான் உள்பட 200 பேர் விண்ணப்பம் செய்தோம். இதில் இருந்த ஏழு பேர் இறுதிக்கட்டத்துக்கு அழைக்கப்பட்டு, நான் நியமனம் செய்யப்பட்டேன். தொழில்முனைவு சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த அமைப்பின் இயக்குநர்களாக இருக்கின்றனர்’’ என்றவர், தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேச ஆரம்பித்தார்.

சிவராஜா ராமநாதன்
சிவராஜா ராமநாதன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டில் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதுதான். உதாரணமாக, பெங்களூரு மற்றும் டெல்லியை போன்ற நகரங்கள் ஸ்டார்ட் அப் மையங்களாக உள்ளன. அதற்கான சூழல் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதற்கான சூழல் இருக்கிறது. அந்த சூழலை மேம்படுத்தி ஒருங்கிணைக்க வேண்டும். இன்குபேட்டர்கள், முதலீட்டாளர்கள், மென்ட்டார்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ஏற்ற இடமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல் கட்டமாக ஸ்டார்ட் அப் பூங்கா சென்னையில் அமைக்க இருக்கிறோம். இதே போல, பூங்காக்கள் மற்ற முக்கிய நகரங்களிலும் அமைக்க திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 80-க்கும் மேற்பட்ட இன்குபேட்டர்கள் மையங்கள் உள்ளன. ஆனால், அவை சென்னை மற்றும் கோவையிலே பெரும்பாலும் இருக்கின்றன.

ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு இன்குபேட்டர் மையம் அமைக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறோம். மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழில்முனைவை ஊக்குவிக்க பல சலுகைகளை/ கொடைகள் வழங்கி வருகின்றன.

Business (Representational Image)
Business (Representational Image)

ஆனால், தொழில்முனைவோர்களுக்கு அரசின் திட்டங்கள் தெரிவதில்லை. இன்குபேட்டர் மையங்கள் மூலம் அரசின் திட்டங்கள் அனைவருக்கும் தெரியவரும்.

இது தவிர, புதிய தளம் அமைக்க இருக்கிறோம். அதில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களை அந்தத் தளத்தில் ஒருங்கிணைக்கப் போகிறோம். சர்வதேச அளவில் துறை சார்ந்த ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணைப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர்களுக்கு சர்வதேச அளவிலான ஆலோசனை கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், தொழில்முனைவு தொடர்பாக கால் சென்டர் அமைக்க இருக்கிறோம். இந்த கால் சென்டர் மூலம் தொழில்முனைவு தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனைகள், அரசின் திட்டங்கள், முதலீடு உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை தொழில்முனைவோர்கள் தெரிந்துகொள்ளலாம். இதுபோல பல திட்டங்கள் இருக்கின்றன.
தொழில்முனைவுக்கான சூழல் இங்கு ஏற்கெனவே இருக்கிறது. பணியாளர்கள், முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்கள் என அனைத்தும் தமிழகத்தில் இருக்கிறது. அதனை ஒருங்கிணைக்கும் பணியை செய்து, ஒரு `இகோசிஸ்டத்தை’ உருவாக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு தகுதி வாய்ந்த ஸ்டார்ட் அப்களுக்கு கொடை வழங்குகிறது.
அடுத்த கட்டமாக, ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யும் திட்டமும் பரிசீலனையில் இருக்கிறது.

பொருளாதாரம்
பொருளாதாரம்

தமிழக அரசு 2030-ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை நிர்ணயம் செய்திருக்கிறது. அந்த இலக்கை அடையவேண்டும் எனில், பெரிய அளவிலான புதிய தொழில்முனைவோர்களும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான பணியை டான்சிம் செய்யும்’’ என சிவராஜா ராமநாதன் தெரிவித்தார்.

இதுவரை பல ஸ்டார்ட் அப் யுனிகார்ன்கள் இந்தியாவில் இருந்து உருவாகி இருக்கின்றன. ஆனால் இதில் தமிழகத்தின் பங்கு மிகவும் குறைவு. வரும் காலத்தில் பல யுனிகார்ன்கள் தமிழகத்தில் இருந்து உருவாக வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.