Published:Updated:

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல்! - நிர்மலா சீதாராமன் உட்பட 4 இந்தியர்களுக்கு இடம்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்த ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

'உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் 2019' பட்டியலை அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல மாத இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 4 இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

ரோஷினி நாடார் மல்கோத்ரா
ரோஷினி நாடார் மல்கோத்ரா

ஃபோர்ப்ஸ் இதழ், ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு பிரிவுகளில் முதல் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும். 2019 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34 வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர், இதற்கு முன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

`நான் நிர்பலா அல்ல, சப்லா... !’- மக்களவையில் கொதித்த நிர்மலா சீதாராமன்

ஹெ.சி.எல் நிறுவனத்தின் சி.இ.ஓ & எக்ஸிகியூட்டிவ் டைரக்டரான ரோஷினி நாடார் மல்கோத்ரா, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 54 வது இடத்தைப் பிடித்துள்ளார். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஷிவ் நாடார் ஃபவுண்டேசனின் அறங்காவலராகவும், சி.எஸ்.ஆர் கமிட்டியின் தலைவராகவும் இருக்கிறார். இவற்றின்மூலம், இந்தியாவின் முன்னணி கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் சிலவற்றில் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறார்.

கிரன் மஜூம்தார் ஷா
கிரன் மஜூம்தார் ஷா

இந்தியாவின் மிகப்பெரிய பார்மசூட்டிக்கல் நிறுவனமான பயோகான் நிறுவனத்தை உருவாக்கியவரான கிரன் மஜூம்தார் ஷா, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 65-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த நிறுவனம், அமெரிக்காவின் பயோசிமிலர் பார்மசூட்டிக்கல் மார்க்கெட்டில் வெற்றிகரமாக நுழைந்ததன்மூலம், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. புற்றுநோய்ச் சிகிச்சைக்கு உதவும் இரண்டு பயோசிமிலர் மருந்துகளுக்கு அமெரிக்க மருந்துப்பொருள்கள் ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ள முதல் நிறுவனம் இதுவாகும். இவரது சொத்து மதிப்பு ரூ.18,500 கோடிகள்.

நான்காவதாக, லேன்ட்மார்க் குழுமத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓவாக உள்ள ரேணுகா ஜக்டியானி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 96வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது கணவர் மிக்கி ஜக்டியானியால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிறுவனத்தின் இ-காமர்ஸ் விற்பனைத்தளத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்குவகிக்கிறார்.

ரேணுகா ஜக்டியானி
ரேணுகா ஜக்டியானி
vikatan

இந்தப் பட்டியலில் ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்கல், ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசிவரும் சிறுமியான கிரேட்டா தன்பெர்க், இந்தப் பட்டியலில் 100 வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குயின் எலிசபெத், இவான்கா ட்ரம்ப் ஆகிய பிரபலங்களும் இடம்பிடித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு