Published:Updated:

`எதிர்காலத்தில் இந்த பிசினஸுக்கு நல்ல மவுசு உள்ளது!' - வீகன் பொருள்கள் விற்பனையில் கலக்கும் மனிஷா

மனீஷா
News
மனீஷா

``இப்போ ஆங்காங்கே வீகன் ரெஸ்டாரன்ட்னு வர ஆரம்பிச்சிடுச்சு. மக்களும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா வீகன் உணவு முறையை பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இது பெரிய இடத்துக்கு போய்டும். பெரும்பாலான மக்கள் வீகன் புராடக்ட்ஸை விலை அதிகம்னு வாங்க மறுக்குறாங்க."

வீகன் என்னும் புதிய உணவுமுறைக்கு நம் நாட்டில் பலரும் மாறிக்கொண்டு வருகின்றனர். வீகன் என்பது விலங்குகளிடம் இருந்து பெறப்படும் எந்த வகையான உணவுப்பொருளையும் உண்ணாமல் இருப்பது. சுத்த சைவத்தில் அதிசுத்த சைவம்தான் வீகன். இதில் நிறைய பிசினஸ் வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார் திருச்சியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மனிஷா. அவரைச் சந்தித்தோம்.

Milk
Milk
Photo by ROBIN WORRALL on Unsplash

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``வீகன் என்பது சைவம் என்று பலரும் புரிந்து வைத்திருப்பது உண்டு. ஆனால், சைவத்துக்கும் வீகனுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்று கூறுகின்றனர் வீகன் பிரியர்கள். சைவம் என்பது பால், தயிர், வெண்ணை சிலர் முட்டையும் சைவம் என்று கூறி உண்பவர்கள் உண்டு. ஆனால், அவையும் விலங்குகளிடமிருந்து பெறுவது எனத் தெரிந்தும் நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், வீகனின் முக்கிய நோக்கம் விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்பதே. அதனால், அதிலிருந்து பெறப்படும் பால், வெண்ணை, தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தாவரங்களைச் சார்ந்து அவற்றால் பெறப்படும் உணவுகளை உண்பது வீகன் ஆகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நாங்க பொதுவாவே சைவம் சாப்பிடும் குடும்பத்தினர். நாங்கள் சைவம்தானே சாப்பிடுறோம், நாங்கதான் விலங்குகளை துன்புறுத்துவது இல்லையேன்னு நெனச்சிட்டு இருந்தோம். திடீர்னு ஒரு நாள் எங்க பொண்ணு எங்க கிட்ட வந்து இனிமேல் எனக்கு பால், தயிர், நெய் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டா, என்னனு நானும் என் மனைவி தராகினியும் குழம்பிட்டோம். என் பொண்ணு கிட்ட போய் என்ன ஆச்சுன்னு கேட்டபோது அவள் சொன்னாள், `நான் யூடியூப்ல வீகன் பத்தி ஒரு வீடியோ பார்த்தேன். அப்போதுதான் நம்ம விலங்குகல கொன்னு அதைச் சாப்பிடலைன்னாலும், அதை ஏதோ ஒருவகையில துன்புறுத்திதானே நாம பால், தயிர் எல்லாமே சாப்பிடுறோம். எனக்கு அது வேண்டாம் அப்படினு சொல்லிட்டா. நாங்களும், பால் குடிச்சாதான் கால்சியம் கிடைக்கும்னு சொல்லிப் பார்த்தோம். ஆனால், அவள் அதை ஒத்துக்கலை, பிறகு நாங்களும் வீகன்கு மாறிட்டோம்" என்றார்.

குடும்பத்தினருடன் மனிஷா
குடும்பத்தினருடன் மனிஷா

இதுகுறித்து பேசிய மனீஷா, ``நான் NIT-ல இன்ஜினீயரிங் படிக்கிறேன். ஒருநாள் நானும் என் தம்பியும் சேர்ந்து வீகன் முறையில் பீட்சா செஞ்சு பார்த்தோம். பிறகு கப் கேக், குக்கீஸ், ஐஸ்க்ரீம் எல்லாம் செஞ்சு பார்த்தோம். அது சுவையிலும் ரொம்ப நல்லா இருந்தது. அதற்கு அப்புறம், நாங்க இன்ஸ்டாகிராம்ல ஒரு பேஜ் ஆரம்பித்து வீகன் புராடக்ட்ஸ் கிடைக்கும்னு போஸ்ட் பண்ணி ஸ்டார்ட் பண்ணோம். அப்போ அது லாக்டௌன் காலம் என்பதால் எனக்கும் என் தம்பிக்கும் அதில் அதிக ஆர்வம் வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு ஆர்டர் வர ஆரம்பிச்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நானும் என் தம்பியும் சேர்ந்து செய்வோம். அதற்கு அப்புறம் என் அப்பாவும் தம்பியும் போய் ஆர்டர் டெலிவரி பண்ணிட்டு வருவாங்க. கொஞ்ச நாள் அப்புறம் ஸ்விக்கி, ஸொமேட்டோல ஆர்டர் பண்ற ஆப்ஷனைக் கொண்டுவந்தோம். மக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க. சமீபத்தில் 100-வது ஆர்டர் செலிபரேஷன் கூட பண்ணினோம்.

இதற்கு எதிர்காலத்தில் அதிகமான பிசினஸ் வாய்ப்புகள் உள்ளன. இப்போ ஆங்காங்கே வீகன் ரெஸ்டாரன்ட்னு வர ஆரம்பிச்சிடுச்சு. மக்களும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா வீகன் உணவு முறையை பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் கொஞ்ச வருடங்கள்ல இது பெரிய இடத்துக்கு போய்டும். பெரும்பாலான மக்கள் வீகன் புராடக்ட்ஸை விலை அதிகம்னு வாங்க மறுக்குறாங்க.

Vegan Foods (Representational Image)
Vegan Foods (Representational Image)
Pixabay

இப்போ உள்ள பால் விலை அனைத்து மக்களும் வாங்கும் நிலைல அரசு கொண்டு வந்திருக்கு. அதே மக்கள் வீகன் புராடக்ட்ஸ் யூஸ் பண்ண ஆரம்பிக்கும்போது அந்தப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். அப்போ நிறைய தொழிற்சாலைகளும் அரசும் இதன் உற்பத்தியை அதிகரிக்கும் இதன் மூலமாக வீகன் பிசினஸ் அதிகரிக்கும். நிறைய ரெஸ்டாரன்ட் வர ஆரம்பிக்கும் இதன் மூலம் பிசினஸ் உயர்வு இருக்கும்" என்றனர்.