Published:Updated:

அதிகரிக்கும் ஆன்லைன் வேலைவாய்ப்புகள்!

ஆன்லைன் 
வேலைவாய்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் வேலைவாய்ப்பு

கொரோனா தந்த பாசிட்டிவ் ரூட்!

லகமே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறது, கொரோனாவின் இறுக்கமான பிடியால்.

21 நாள் தேசிய ஊரடங்கு காரணமாக அத்தியாவசியப் பணிகள் தவிர, மற்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பலரும் வீடுகளிலிருந்தபடியே வேலை பார்க்கிறார்கள். சிலர் தற்காலிகமாக வேலையையும் இழந்திருக்கிறார்கள்.

ஆன்லைன் 
வேலைவாய்ப்பு
ஆன்லைன் வேலைவாய்ப்பு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி கொரோனாநோய் நமது தொழில்துறையில் நேரடியாகப் பல பாதிப்புகளை ஏற்படுத்திவந்தாலும், அது மறைமுகமாக ஒரு முக்கியமான மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது. அலுவலகம் வருபவர்களை இப்போது ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ கொடுத்து வீடுகளிலிருந்து வேலைபார்க்கச் சொல்வது அதில் ஒரு பகுதி. இது தவிர பல புதிய ஆன்லைன் வேலைகளும் இந்த பாதிப்பால் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. பெரும் தயக்கத்துடன், வேறு வழியில்லாமல்தான் பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதித்தன. ஆனால், அனுப்பிய சில நாள்களிலேயே இதிலிருக்கும் பலன்களை உணர ஆரம்பித்தன. பணியாளர்கள் குறைந்த நேரத்தில் அதிக வேலையைச் செய்வதாக நிறுவனங்கள் பலவும் உணர்ந்திருக்கின்றன. `கொரோனாநோய்ப் பரவல் முடிந்த பிறகும் இந்த முறையையே ஏன் தொடரக் கூடாது...’ என்றும் பல நிறுவனங்கள் யோசித்துவருகின்றன.

இதற்கு முதுகெலும்பாக இருப்பது இன்று பெருமளவில் வளர்ச்சிகண்டிருக்கும் இணையம். மற்ற எந்த நாடுகளையும்விட இந்தியாவில் டேட்டா விலை மிகவும் குறைவாக இருப்பதுதான் இது போன்ற வேலைகளுக்கு மிகப்பெரிய பூஸ்ட். நேரில் வந்துதான் செய்ய வேண்டும் என்றிருந்த பல வேலைகள் இன்றைக்கு ஆன்லைன் மூலமும் செய்யக்கூடியவையாக ஆகிவிட்டன. அலுவலகத்தில் அமர்ந்து செய்யும் பல வேலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன. ஏன் சில வேலைகள் ‘ஆட்டோமேட்’கூட செய்யப்பட்டு விட்டன. அந்த வேலைகளுக்கு ஆட்களே தேவையில்லை என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது தொழில்நுட்பம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த மாற்றத்தைப் புரிந்துகொண்டு, நம்மையும் இந்த மாற்றத்துடன் இணைத்துக்கொண்டாக வேண்டும். முக்கியமாக, புதிதாகக் களமிறங்கும் சிறிய நிறுவனங்களுக்கு இது போன்ற ஆன்லைன் வேலைகள் மிகவும் சௌகர்யமாக இருக்கும். அது எப்படி என்பதை ஒரு சிறிய உதாரணத்துடன் பார்ப்போம். அண்மைக் காலமாக ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் பெருமளவில் வளர்ந்திருக்கின்றன. பலரும் உணவகங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே உணவு வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் உணவகம் ஆரம்பிக்கும் ஒருவருக்கு இப்போது இன்னொரு புதிய வாய்ப்பும் இருக்கிறது. அது ‘டேக்-அவே’ (Take-away) ஒன்லி உணவகங்கள். அதாவது, அங்கு பார்சல் மட்டுமே கிடைக்கும். இது புதிய கான்செப்டெல்லாம் இல்லை. ஏற்கெனவே இருந்ததுதான். ஆனால், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் வந்த பிறகு இவை தழைக்கத் தொடங்கின. மக்கள் உட்கார்ந்து சாப்பிடும் ‘ஃபைன்-டைனிங் ரெஸ்ட்டாரன்ட்’ என்றால் அதைப் பராமரிக்க வேண்டும். கூடுதல் ஆட்களைப் பணியமர்த்த வேண்டும். ஆனால், டேக்அவே உணவகங்களுக்கு இந்தப் பிரச்னையே கிடையாது. புதிதாகக் குறைந்த முதலீட்டில் உணவகம் தொடங்குவதற்கு இது வசதியாக இருக்கிறது.

ஆன்லைன் 
வேலைவாய்ப்பு
ஆன்லைன் வேலைவாய்ப்பு

இது ஓர் உதாரணம்தான். இதேபோல இணைய ஊடுருவல் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலால் சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் வேலைகளை நோக்கி நகரும். தொழில் ஆரம்பிக்கும்போது அதற்கான அலுவலகம் அமைப்பது பெரும் செலவாக இருக்கும். அதை இந்த ஆன்லைன் வேலைகள் குறைக்கின்றன. எந்த அளவுக்கு வேலைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் செய்யும்படி இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நிறுவனங்களுக்குச் செலவும் குறையும். இதனால் திறன் மிகுந்த பணியாளர்களை வேலைக்கு எடுக்க அதிகம் செலவு செய்ய முடியும்.

இதற்குச் சில சவால்களை நாம் நிச்சயம் சந்தித்தாக வேண்டும். ஆன்லைன் தொழில்நுட்பத்துக்குத் தேவையான டிஜிட்டல் கட்டமைப்பை ஏற்படுத்த சிலபல லட்சங்களை நிச்சயம் செலவு செய்ய வேண்டியிருக்கும். நாம் செய்யும் வேலைகளை டிஜிட்டலாக்குவதும் அவ்வளவு எளிதல்ல. அதற்குப் போதிய வசதிகள் இருக்க வேண்டும். அலுவலகங்களுக்கு வந்து வேலை பார்க்கும் ஊழியர்களை ஒரு நிறுவனத்தால் எளிதில் கண்காணிக்க முடியும். ஆனால், ஆன்லைன் என்றால், அதற்கான தெளிவான வழிமுறைகள் ஏதேனும் இருக்க வேண்டும். ‘அவுட்புட்’ சார்ந்து இதைக் கணக்கிட முடிந்தால், ஆன்லைன் வேலைகள் பலன் தருவதாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலைகள் ஆன்லைன் மூலம் செய்யப்படும்போது இணையப் பாதுகாப்பும் ஒரு மிக முக்கியமான பிரச்னைதான். நாம் செய்யும் வேலைகள் குறித்த டேட்டா வெளியில் செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால், அதற்கும் தெளிவான வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அனைத்துத் துறைகளுக்கும் இது பொருந்தாது என்றாலும், அறிவுசார் சேவைப் (Knowledge Based Service Jobs) பிரிவுகளில் இதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகமாக இருக்கின்றன. ஐ.டி மட்டுமன்றி, சேவைத்துறை சார்ந்த பல வேலைகளும் இவற்றில் வரும்.

அதிகரிக்கும் ஆன்லைன் வேலைவாய்ப்புகள்!

‘வீட்டிலிருந்தே வேலை’யில் இருக்கும் வசதிகள் பற்றி ஜோஹோ நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணியிடம் கேட்டோம்.

‘‘வீட்டிலிருந்தே வேலை என்பது புதிதல்ல. தொழில்நுட்பரீதியில் நாங்கள் அதற்குத் தயாராக இருந்தாலும், ஊழியர்கள் இப்படியான மாற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த சில காலம் எடுத்துக்கொண்டனர். திடீரென்ற தனிமையும், சக பணியாளர்களுடன் தொடர்பு இல்லாமல் இருப்பதும் ஊழியர்களின் உத்வேகத்தைக் குறைக்கும். ஆனால், இப்போது இந்தத் தடங்கல்களை எங்களால் எளிதில் கடந்துவர முடிந்தது. இன்றைய தொழில் நுட்பத்துடன் எங்களால் இதைச் சாதிக்க முடிந்திருக்கிறது. `வீட்டிலிருந்தே வேலை’ முறையில் கம்யூனிகேஷன் என்பது மிகவும் முக்கியம். ஊழியர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதைத் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும். தினமும் அவர்களை நம்முடன் தொடர்பில் இருக்குமாறு செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் தொலைவிலிருந்தாலும் குழுவாக அவர்களை வேலை செய்ய வைக்க வேண்டும். மீட்டிங், புராஜெக்ட்டுகளைப் பிரித்து மேலாண்மை செய்வது... என அனைத்தையும் டிஜிட்டலில் செய்யத் தேவையான மென்பொருள்களும் கட்டமைப்பும் அவசியம்.

`வீட்டிலிருந்தே வேலை’ என்பது அருமையான வேலைச் சூழல். கொரோனா வைரஸால் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இதிலிருக்கும் நன்மைகளை நிறுவனங்கள் நிச்சயம் உணரும். கொரோனா வருவதற்குமுன்னரே பெருநகரங்கள் அதிக மக்களால் நெருக்கடியைச் சந்தித்து வந்திருக்கின்றன. அலுவலகங்களுக்கு வந்து செல்வதே பெரும்பாடாக இருந்தது. இந்த வைரஸ் தாக்கம் முடிந்தபிறகும் அந்த நிலைதான் தொடரும். அப்போது நிறுவனங்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, மாற்றங்களை மேற்கொள்ளும்’’ என்றார்.

கொரோனாவுக்குப் பிறகு வெளிநாடுகளில் ஆன்லைன் வேலைகள் அதிகரித்துள்ளன. இந்தத் தலைமுறை (Gen-Z) மக்களும் இது போன்ற வேலைகளைப் பெரிதும் விரும்புகின்றனர். லிங்க்டுஇன், நவுக்ரி போன்ற வேலை தேடும் தளங்களுக்கு சமீபத்தில் சென்றிருந்தாலே ஆன்லைன் வேலைகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதைப் பார்த்திருக்க முடியும். ‘வீட்டிலிருந்தே வேலை’ முறைக்குப் பல நிறுவனங்கள் தயாராகிவிட்டன. நீங்கள் தயாரா?

ஆன்லைனில் மளிகைக் கடைகள்

அண்மையில் திருப்பூரிலிருந்து ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் வைரல் ஆனது. கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறையிலிருக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்க வேண்டும் என்ற பதற்றம் மக்களிடம் இருப்பதையும், அதனால் மளிகைக் கடைகளில் அதிகமான கூட்டம் கூடுவதையும் தவிர்க்க ஓர் எளிய வழி அந்த வீடியோவில் சொல்லப் பட்டிருந்தது. ‘‘உங்களுக்குத் தேவையான சாமான்களின் பட்டியலை வாட்ஸ்அப்பில் அனுப்பிவையுங்கள். உங்களுக்கான பொருள்களை கட்டி முடித்தவுடன் நான் உங்களுக்கு போன் செய்கிறேன். ஒரே நிமிஷத்தில் நீங்கள் வந்து, எடுத்துக்கொண்டு போய்விடலாம்” என்று அந்த வீடியோவில் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருந்தது. தகவல் பரிமாற்றத்துக்கான வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி நெருக்கடியான காலத்தில் தங்கள் பிசினஸை அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்ல நினைக்கும் மளிகைக் கடைக்காரர்களை உண்மையிலேயே `பிசினஸ் கில்லாடிகள்’ என்று பாராட்டலாம். மற்ற மளிகைக் கடைக்காரர்களும் இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் கடையில் மக்கள் நெருக்கடியைத் தவிர்க்கலாம்; இன்னும் அதிகமாக வியாபாரம் செய்யலாம்!