ஒவ்வோர் ஆண்டும் இந்திய அளவில் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களை நேரில் அழைத்து கருத்தரங்கம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இண்டஸ்ட்ரியல் எக்னாமிஸ்ட் பத்திரிகை, கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தியது. ‘தி நியூ நார்மல்’ என்கிற தலைப்பில் இந்த ஆண்டு கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசின் பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பேசினார். அவர் பேசியதிலிருந்து முக்கியமான விஷயங்கள் இனி...

‘‘இந்தியப் பொருளாதாரத்துக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் அடிப்படையாக உள்ளன. வளர்ச்சி யுடன்கூடிய சமூக நலத்திட்டங்கள் முக்கியம். நாட்டின் முன்னேற்றத்துக்கு வளர்ச்சி முக்கியம். அதே சமயத்தில் நலத் திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சி இருந்தால் மட்டுமே அனைத்து இடங்களிலும் வளர்ச்சியின் தாக்கம் இருக்கும். பொதுமக்களின் சேமிப்பு உயரும்.

1758-ம் ஆண்டு வரை சர்வதேச ஜி.டி.பி-யில் இந்தியாவின் பங்கு குறைந்தபட்சம் 33 சதவிகிதமாக இருந்திருக்கிறது. பல நூற்றாண்டு களாக இந்தப் பங்களிப்பை நாம் செய்திருக்கிறோம். இது வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டும் நமக்குக் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் லாபத்துக்கு முக்கியத்துவம் கொடுத் தோம். ஆனால், ஒரு காலத்துக்குப் பிறகு, லாபம் என்னும் வார்த்தை தவறான வார்த்தையாக மாறிவிட்டது. வெல்த் கிரியேஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

மூன்றாவதாக, முதலீடு. இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு வர வேண்டும் எனில், என்ன செய்வது என்பது குறித்துத் திட்டமிட்டோம். அப்போது சர்வதேச அளவில் 5% வளர்ச்சிக்கு மேலே தொடர்ந்து பத்தாண்டுகளாக இருக்கும் நாடுகளை நாங்கள் கவனித்தோம். இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளைப் பார்க்கும்போது, சில நாடுகள் முதலீடுகளால் வளர்ச்சி அடைந்திருக் கின்றன. சில நாடுகள் நுகர்வின் காரணமாக வளர்ச்சி அடைந்திருக் கின்றன. இந்தியாவின் ஜி.பி.டி-யில் நுகர்வு அதிகமாக (58%) இருந்தாலும் கூட. நுகர்வின் அடிப்படையில் நாம் செல்லக் கூடாது. காரணம், இந்தியா போன்ற நாடுகளில் நுகர்வுக்கு அடிப்படையே முதலீடுதான். தனியார் முதலீடுகள் அதிக மாகும்போது, வேலைவாய்ப்புகள் உருவாகும்; வேலைவாய்ப்புகள் மூலம் முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் அதிகரிக்கும். அதனால்தான் நாங்கள் முதலீடுகளை ஊக்குவிக்கிறோம். தவிர, முதலீடுகள் இருந்தால் மட்டுமே நீடித்த வளர்ச்சியை நம்மால் அடைய முடியும்’’ என்று பேசினார் அவர்.

டெக்னாலஜியும் உற்பத்தி துறையும் என்ற தலைப்பில் ஐ.ஐ.டி பேராசியர் அசோக் ஜுன்ஜுன்வாலா உரை யாற்றினார். ‘‘இந்தியா வின் சந்தை மிகப்பெரியது. இதற்கேற்ற சந்தையை நாம் உருவாக்க முடியும். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 20 லட்சம் மாணவர்கள் பொறியியல் முடிக்கிறார்கள். இவர்களை வைத்து நாம் பெரிய மாற்றங்களை செய்ய முடியும். ஆனால், இவர்கள் தகுதி குறித்த பெரிய சர்ச்சை சந்தையில் நிலவுகிறது. அது ஒரு மாயத்தோற்றம் மட்டுமே. மிகச்சிறிய நகரங்களில் இருந்து வரும் மாணவர் களைக்கூட நம்மால் தயார்படுத்த முடியும். நான்கு முதல் ஆறு மாதங் கள் பயிற்சி கொடுத்தால் நாம் அவர்களைப் பயன் படுத்த முடியும்.

இவ்வளவு சாதகங்களை வைத்து நாம் பெரும்பாலான பொருள் களை இறக்குமதி செய்து வருகிறோம். நம்முடைய இறக்குமதியின் பெரும் பலனை சீனா அனுபவித்து வருகிறது. நாம் திட்டமிட்டால் உற்பத்தித் துறையில் அனைத்தையும் நம்மால் உருவாக்க முடியும்.

சில நாள்கள் முன்பு ஒரு செய்தியை படித்தேன். எலெட்க்ரிக் கார் என்றால் நமக்கு டெஸ்லாதான் நினைவுக்கு வரும். ஆனால், சீனாவில் ஒரு கார் நிறுவனம் டெஸ்லாவைவிட அதிக எண்ணிக்கையில் மின்சார கார்களை விற்பனை செய்கிறது. நான்கு லட்ச ரூபாயில் அந்த கார் விற்பனை யாகிறது. சுமார் இரண்டு ஆண்டுகளில் இந்த காருக்கான ஆராய்ச்சி முடிந்து விற்பனைக்கு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் கணிசமான முதலீடு செய்யும்பட்சத்தில் இந்தியாவிலும் இதே போன்ற மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய முடியும். டாடா குழுமம் நானோவில் முயற்சி செய்தது. இதே போல, மற்ற பெரிய குழுமங்களும் இதுபோன்ற ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்கு முதலீடு செய்ய வேண்டும்.

ஐ.ஐ.டி ரிசர்ச் பார்க்கில் நாங்கள் பல ஆராய்ச்சி களைச் செய்து வருகிறோம். நம்மால் அனைத்துப் பொருள் களையும் உற்பத்தி செய்ய முடியும்’’ என்று பேசினார் அசோக் ஜுன்ஜுன்வாலா.

இந்தக் கருத்தரங்கில் காக்னிசென்ட் நிறுவனத்தின் கோ-ஃபவுண்டர் லஷ்மி நாராணயண், செயின்ட் கோபின் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தானம், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சேஷசாயி, டி.சி.எஸ் முன்னாள் தலைவர் ராமதுரை, டி.வி.எஸ் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவர் கோபால் ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலரும் பேசினார்கள்.

இண்டஸ்ட்ரியல் எக்னாமிஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் விஸ்வநாதன் இந்தக் கருத்தரங்கை தனி ஒருவராகத் திட்டமிட்டு, சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்கது!