Published:Updated:

கோவையில் அறிமுகமான ஓ.என்.டி.சி... சிறு வியாபாரிகளுக்கு இனி கொண்டாட்டம்தான்..!

ஓ.என்.டி.சி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.என்.டி.சி

வியாபாரம்

கோவையில் அறிமுகமான ஓ.என்.டி.சி... சிறு வியாபாரிகளுக்கு இனி கொண்டாட்டம்தான்..!

வியாபாரம்

Published:Updated:
ஓ.என்.டி.சி
பிரீமியம் ஸ்டோரி
ஓ.என்.டி.சி

சிவராம்

அண்மையில் கோவை, திருப்பூரில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல். கோவையில் ஹோம் ஸ்டாக் என்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு வருகை தந்தவர், அந்தக் கடையிலிருந்தே தன் செல்போன் மூலம் ஓ.என்.டி.சி (ONDC) நெட் வொர்க்குக்குச் சென்று, அந்தத் தளம் எப்படி செயல்படுகிறது என்று பரிசோதித்துப் பார்த்தார். தனது செல்போன் மூலம் அந்தக் கடையில் இருந்து சில சாக்லேட் பாக்கெட்டு களைப் பணம் கட்டி ஆர்டர் செய்தார். அந்த ஆர்டரானது அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு அடுத்த விநாடியே வந்து சேர, உடனே அமைச்சரின் கையில் கொடுத்தார் அந்த சூப்பர் மார்க்கெட்டை நடத்திவரும் சந்தோஷ் குமார்.

அந்த சாக்லேட்களை அக்கடையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பரிசளித்த மத்திய அமைச்சர், ‘‘ஓ.என்.டி.சி நெட்வொர்க் சரியாகத்தான் வேலை செய்கிறது’’ என்று பாராட்டினார். மத்திய அமைச்சர் ஏன் இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தார், அது என்ன ஓ.என்.டி.சி நெட்வொர்க், இந்த நெட்வொர்க்கில், சிறு வணிகர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்கிற கேள்விகளை கோஃப்ரூகல் (Gofrugal) நிறுவனத்தின் சி.இ.ஓ குமார் வேம்புவிடம் கேட்டோம். அவர் விளக்கமான பதிலைத் தந்தார்.

கோவையில் அறிமுகமான ஓ.என்.டி.சி... சிறு வியாபாரிகளுக்கு  இனி கொண்டாட்டம்தான்..!

‘‘நம் அருகில் இருப்பதாலும், அடிக்கடி பார்ப்பதாலும் மளிகைக் கடையின் மகத்துவத்தை நாம் மறந்துவிடுகிறோம். நம்மைப் பற்றி நன்கு தெரிந்த அண்ணாச்சிக் கடைகளை மறந்து ஆன்லைன் அசுரர்களின் வசம் அகப்பட்டுக் கிடக்கிறோம். இதனால், மளிகைக் கடைகள் இனிவரும் காலத்தில் காணாமல் போய்விடுமா என்று கேட்டால், அதுதான் நடக்காது. சின்னதும் பெரியதுமாக இருக்கும் மளிகைக் கடைகளையும் ஆன்லைன் தொழில்நுட்பம் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை வளமாக்க வந்திருக்கும் புரட்சிகரமான திட்டம்தான் Open Network for Digital Commerce (ONDC).

ஓ.என்.டி.சி என்பது வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் டிஜிட்டல் நெட்வொர்க். இந்திய அரசாங்கம் தொடங்கியிருக்கும் திட்டம் இது. பால் பவுடர் முதல் முகத்துக்குப் போடும் பவுடர் வரை, வேஷ்டி முதல் டிவி ரிப்பேர் வரை ஆன்லைனில் இன்று நாம் ஆர்டர் செய்யும் அனைத்து அம்சங்களும் கிடைக்கும் இடம் இது. ஆர்டர் செய்யத் தேவையான பொருள்கள் அனைத்தும் நம் வீட்டுக்கே வந்துகொடுக்கும் டெலிவரி கம்பெனிகள் வரை உள்ளடக்கிய சமாசாரம் இது.

இந்த வேலையைச் செய்ய ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கும்போது, இன்னொரு நிறுவனம் எதற்கு என்று கேட்கலாம். இப்போது இருக்கும் பெரிய நிறுவனங்கள் அதைச் சரியாகச் செய்து வந்தால் பிரச்னையே இல்லை. தங்கள் இணைய தளத்தில் பொருள்களை வாங்க வரும் வாடிக்கை யாளர்களுக்குத் தங்களுக்கு வேண்டிய கம்பெனி தயாரிக்கும் பொருள்களை மட்டுமே முன்நிறுத்திக் காட்டுவது, சிறிய வியாபாரிகள் தயாரிக்கும் பொருள்களை இருட்டடிப்பு செய்வது எனப் பல வேலைகளைச் செய்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் சிறு வியாபாரிகள்தாம். அவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக வந்திருக்கிறது இந்த ஓ.என்.டி.சி.

குமார் வேம்பு
குமார் வேம்பு

இதனால் சிறு வியாபாரிகளுக்கு என்ன நன்மை?ஆன்லைன் கம்பெனிகள் சிறிய வியாபாரிகளிடம் அடாவடியாய் 25% - 30% வரை கமிஷன் வாங்கிக்கொண்டிருக் கையில், ஓ.என்.டி.சி பிளாட் ஃபார்ம் அவர்களிடம் 3% - 5% மட்டுமே கமிஷன் வசூலிக்கிறது. ஒரு பொருளை ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் தேடும் போது வேண்டியவர், வேண்டாத வர் என்கிற பாகுபாடு காட்டா மல், பொருள்களை மட்டுமே முன்நிறுத்திக் காட்டும். இந்த ஓ.என்.டி.சி நெட்வொர்க் இணை யதளம் தற்போது கோவை உட்பட இந்தியாவின் மூன்று, நான்கு நகரங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக இந்த நெட்வொர்க் இணையதளம் அறிமுகமாகி, சிறப்பாகச் செயல் பட்டு வருகிறது. இந்த இணைய தளம் எப்படிச் செயல்படுகிறது எனத் தெரிந்துகொள்வதற் காகத்தான் மத்திய அமைச்சர் கோவைக்கு வந்திருந்தார்.

கோவையில் அறிமுகமான ஓ.என்.டி.சி... சிறு வியாபாரிகளுக்கு  இனி கொண்டாட்டம்தான்..!

எங்களது கோஃப்ரூகல் இ.ஆர்.பி-யானது ஓ.என்.டி.சி நெட்வொர்க்குடன் இணைந்து இந்தச் சேவையை சிறு வியாபாரி களுக்கு அளித்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இந்த ஓ.என்.டி.சி நெட் வொர்க் இந்தியா முழுக்க செயல்படப்போகிறது. அதற்குள் பெரும்பாலான சிறு வியா பாரி களை இந்த நெட்வொர்க் தளத் துடன் இணைக்கும் வேலையை செய்து வருகிறோம். இந்த ஓ.என்.டி.சி பற்றி அறியவும், இதில் ஒரு வியாபாரியாக இணையும் வழிகளைச் சொல்லித்தரவும் நாங்கள் தயார். இது தொடர்பாக வியாபாரிகள் எங்களைத் தாரா ளமாகத் தொடர்பு கொள்ளலாம்’’ என்று பேசி முடித்தார் குமார் வேம்பு.

இனி சிறு வியாபாரிகளும் ஆன்லைன்மூலம் விற்பனையில் கலக்கலாம்!