Election bannerElection banner
Published:Updated:

லாக்டெளனிலும் லாபம் பார்த்த பிக்பேஸ்கெட்... வெற்றி தந்த உத்தி!

பிக்பேஸ்கெட்
பிக்பேஸ்கெட்

ஆர்டர்களின் எண்ணிக்கை உயர்ந்ததைத் தொடர்ந்து வருமானமும் உயர்ந்திருக்கிறது. மே மாதம் வருமானம் ரூ.650 கோடி என்னும் அளவில் இருக்கிறது: பிக்பேஸ்கெட்

மளிகைப் பொருள்களை விற்கும் பிசினஸை கொரோனாவால் `குறைவாக பாதிக்கப்பட்ட துறை' எனலாம். ஆனால், `மளிகைப் பொருள்களை விற்கும் பிசினஸில் என்ன பிரச்னை இருக்க முடியும்; அவை அத்தியாவசியமானவை ஆயிற்றே...' எனப் பலரும் நினைக்கலாம்.

ஆனால், பிக்பேஸ்கெட் சி.இ.ஓ ஹரிமேனன் கூறுவது வேறுவிதமாக இருக்கிறது. "ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் ஆர்டர்கள் கடுமையாகச் சரிந்திருந்தன. தினமும் 2.2 லட்சம் ஆர்டர்கள் என்று இருந்த சூழல், அதன் பிறகு ஒரு நாளைக்கு 28,000 என்னும் அளவுக்குச் சரிந்தது. அந்த நேரத்தில் பணியாளர்களும் பாதுகாப்பை விரும்பியதால், அந்த ஆர்டர்களைக்கூட டெலிவரி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது" என்கிறார்.

அந்தச் சூழல் எப்படி மாறியது, பிக்பேஸ்கெட் என்ன உத்திகளைக் கையாண்டு வெற்றிகண்டது என்பதைப் பார்ப்போம்.

சிக்கலான சூழலைத் தொடர்ந்து ஒவ்வொரு நகரத்திலும் புதிய பார்ட்னர்களைக் கண்டுபிடித்தார்கள். மேலும், உணவகவங்கள், வாடகை டாக்ஸிகள் எனப் பல தரப்புகளையும் டெலிவரி பார்ட்னர்களாக இணைத்துக்கொண்டார்கள். இதனால் ஒரு நாளைக்கு 2,00,000 ஆர்டர்கள் என்னும் நிலையிலிருந்து 3.5 லட்சம் ஆர்டர்களாக உயர்ந்தன.

ஆர்டர்களின் எண்ணிக்கை உயர்ந்ததைத் தொடர்ந்து வருமானமும் உயர்ந்திருக்கிறது. மே மாதம் வருமானம் ரூ.650 கோடி என்னும் அளவில் இருக்கிறது.

`வருமானம் இதே அளவில் நீடித்தால், நடப்பு நிதியாண்டு வருமானம் ஒரு பில்லியன் டாலர் (ரூ.7,500 கோடி) என்னும் நிலையை எட்டும்' என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒரு பில்லியன் டாலர் வருமானம் என்பது முக்கியமான மைல்கல்.

வருமானம் உயர்வது முக்கியம். அதைவிட, லாபம் ஈட்டுவதும் முக்கியம். பெரும்பாலான இ-காமர்ஸ் நிறுவனங்களின் வருமானம் அதிகமாக இருந்தாலும், லாபம் ஈட்டுவது என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.

பிக்பேஸ்கெட்
பிக்பேஸ்கெட்

ஆனால், பிக்பேஸ்கெட்டில் பிசினஸ் சாதகமான நிலையை எட்டியது. எப்படி?

மேலும், சீனாவின் 59 செயலிகளைப் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு தடை விதித்த நிலையில், இந்த நிறுவனத்தில் பெருமளவு தொகையை பிக்பேஸ்கெட்டில் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறது பிக்பேஸ்கெட்?

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

ஊரடங்கு காலத்திலும் சூப்பர் லாபம்! - பிக்பேஸ்கெட் நிறுவனத்தின் பிசினஸ் உத்தி!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு