Published:Updated:

சேவையுடன் கூடிய வருமானம்... கைகொடுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்!

ஆக்ஸிஜன் விநியோகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்ஸிஜன் விநியோகம்

தொழில் பழகுவோம் வாங்க! - 13

சேவையுடன் கூடிய வருமானம்... கைகொடுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்!

தொழில் பழகுவோம் வாங்க! - 13

Published:Updated:
ஆக்ஸிஜன் விநியோகம்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்ஸிஜன் விநியோகம்

மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜன் சுவாசம் மிகவும் அத்தியாவசியம். இயற்கையில் அதீதமாகக் கிடைக்கும் வேதிப்பொருள்களில் ஒன்றான ஆக்ஸிஜன், வாயு மண்டலத்தில் சாதாரண சூழலில் 20.9% அளவுக்கு நிரம்பியிருக்கிறது. ஆக்ஸிஜனை நாம் சுவாசித்து, கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறோம். ஆனால், ஒருவர் உடல்நிலை சரியின்றி நோயால் தீவிர மாகப் பாதிக்கப்படும்போது, காற்று மண்டலத் திலிருக்கும் ஆக்ஸிஜனை ஈர்த்தெடுக்கும் திறன் அவரின் நுரையீரலுக்குக் குறைகிறது. இதனால், ஆபத்தான கட்டத்திலிருக்கும் அந்த நோயாளிக்குத் தூய்மையான செறிவூட்டப் பட்ட ஆக்ஸிஜனைச் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

கடந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலையால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்தபோது, ஆக்ஸிஜன் சப்ளை நிறுவனங்கள்தான் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தன. வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் காற்று சுத்திகரிக்கப்பட்டு, சிலிண்டர் அல்லது டேங்கில் அடைக்கப்படும் ஆக்ஸிஜன் பயன்பாடு, மருத்துவத்துறை மட்டுமன்றி, பல்வேறு தொழிற்சாலைப் பயன்பாடுகளிலும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

சேவை தொழிலாகத் திகழும் ஆக்ஸிஜன் விநியோகத்துக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

சேவையுடன் கூடிய வருமானம்...
கைகொடுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்!

தொழில்துறை Vs மருத்துவத்துறை...

ஆக்ஸிஜன் நிறமற்ற, வடிவமற்ற, சுவையற்ற, மணமற்ற வாயு. அத்தியா வசியப் பயன்பாடுகளில் ஒன்றாக இருப்பதால், நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களால் தினம்தோறும் ஆக்ஸிஜன் உற்பத்தி மேற்கொள்ளப் படுகிறது. தொழில்துறைக்கும் மருத்துவத் துக்கும் ஒரே மாதிரியான ஆக்ஸிஜன்தான் பயன்படுத்தப் படுகிறது.

ஆனால், மருத்துவத்துறைக்கான ஆக்ஸிஜனைப் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, மிகத் தூய்மையானதாகவே (99%) மருத்துவமனைக்கு அனுப்ப முடியும். தற்சமயம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜனில் 70% தொழில்துறைக்கும், 30% மருத்துவத்துறைக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

அன்றாட தேவை மிக அதிகம்...

கோயம்புத்தூர், திருப்பூர் போன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் இயந்திரவியல் மற்றும் உலோகவியல் தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ளன. அவற்றில், லேசர் கட்டிங், பேப்ரிகேஷன் போன்ற பல்வேறு பணிகளுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பயன்பாடு முக்கியமானதாக இருக்கிறது. இதனால், தொழில்துறைக்கு மட்டுமே தினமும் பல ஆயிரம் கியூபிக் மீட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

தவிர, அறிவியல் ரீதியான தேவைகளுக்கும் செறிவூட்டப் பட்ட ஆக்ஸிஜன் அவசியம் ஆகிறது. எனவே, ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், அவற்றிடமிருந்து ஆக்ஸிஜனைப் பெற்றுச் சேமித்து வைத்து, தேவைக்கேற்ப பயனாளர்களுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்குமான வரவேற்பு அதிகரித்துள்ளது.

சேவையுடன் கூடிய வருமானம்...
கைகொடுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்!

ஆக்ஸிஜன் தயாரிப்பு முறை...

காற்று மண்டலத்திலிருந்து காற்றை எடுத்து, அதைச் சுத்தப்படுத்தி உயர் அழுத்தக்கலனுக்குள் கொண்டு செல்ல வேண்டும். அப்படிக் கொண்டு செல்லப்படும் ஆக்ஸிஜன், வெகுவாகக் குளிர்விக்கப்படும். இதனால், கொள்கலனிலுள்ள ஆக்ஸிஜன் ஒருகட்டத்தில் திரவமாக மாறும். அப்போது அதன் வெப்பநிலை -195 டிகிரி சென்டிகிரேட் அளவில் இருக்கும். ஃப்ராக்ஷனல் டிஸ்டிலேஷன் (Fractional Distillation) என்ற முறையில் ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் வெவ்வேறு வெப்பநிலையில் பிரித்தெடுக்கப்பட்டதும், செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜன், சிலிண்டர் அல்லது டேங்கில் சேமிக்கப்படும். டேங்கில் திரவ வடிவிலும், சிலிண்டரில் வாயு வடிவிலும் சேகரிக்கப்படும்.

ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

செயல்முறை...

இந்த புராஜெக்ட் அடிப் படையில், தயாரிப்பு நிறுவனங் களிடம் திரவ நிலையிலுள்ள ஆக்ஸிஜன் லாரியில் கொண்டு வரப்பட்டு, நம் யூனிட்டில் ‘Cryogenic’ என்னும் பெரிய ஸ்டோரேஜ் டேங்கரில் சேமித்து வைக்கப்படும். அவை ‘Cryogenic liquid pump’-ன் வழியே உள்ளிழுக்கப்பட்டு, ‘Air ambient vaporizer’ இயந்திரத்தினுள் வெப்பப்படுத்தும்போது உருவாகும் ஆக்ஸிஜன் வாயுவை, வாடிக்கையாளர்களின் தேவைக் கேற்ப சிறிது முதல் நடுத்தர அளவிலான சிலிண்டர்களில் நிரப்பலாம். அதில் எவ்வித வாயுக்கசிவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு விற்பனை செய்யலாம்.

ஆக்ஸிஜன் தயாரிப்பின் சிறப்பம்சங்கள்...

 செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜன் தங்குதடையின்றி கிடைக்கிறது.

 செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜனை டேங்கர் லாரி மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.

 சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத தொழில் இது.

 ஆண்டு முழுவதும் உற்பத்தியும் தேவையும் தடையின்றி இருக்கும்.

 இந்தத் தொழில் மூலம் நோயாளிகளின் உயிரைக் காக்க முடியும்.

சேவையுடன் கூடிய வருமானம்...
கைகொடுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம்!

விற்பனை வாய்ப்பு...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய நகரங்களில் மட்டுமே தேவைப்பட்ட செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜன், மருத்துவப் பயன் பாடுகள் அதிகரிப்பால் தற்போது கிராமங்களிலும் தேவைப்படுகிறது. எனவே, எல்லாப் பகுதிகளிலும், குறிப்பாகத் தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதிகளிலும் இந்தத் தொழிலைத் தொடங்கி பயன் பெறலாம். மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறையினரின் நட்பை வசப்படுத்தினால், விற்பனை வாய்ப்புகளை வலுப்படுத்த முடியும்.

வங்கிக் கடனுதவி...

இந்தத் தொழில் தொடங்க 118 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப் படும். ‘நீட்ஸ்’ திட்டத்தின்கீழ் 83.60 லட்சம் ரூபாய் கடனுடன், 25% மானியமும் பெறலாம்.

மாதம்தோறும் ரூ.23,80,000 டேர்ன் ஓவர்...

நம் புராஜெக்ட் அடிப்படையில் மாதம்தோறும் 10,000 சிலிண்டர் களில் ஆக்ஸிஜனை நிரப்பி விற்பனை செய்யலாம். ஒரு சிலிண்டரில் 7 கியூபிக் மீட்டர் ஆக்ஸிஜன் வாயுவை நிரப்பலாம்.

இந்தக் கொள்ளளவில் ஒரு சிலிண்டர் விலை 350 ரூபாய் வீதம், 2,000 சிலிண்டர்களைப் பயனாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யலாம். இந்த வகையில் 7,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஒரு சிலிண்டர் விலை 210 ரூபாய் வீதம், டீலர்கள் மூலமாக 8,000 சிலிண்டர்கள் விற்பனை மூலம் 16,80,000 ரூபாய் கிடைக்கும். இரண்டு விற்பனை முறையிலும் சேர்த்து ஒரு மாதத்துக்கு 23,80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

(தொழில் பழகுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism