Published:Updated:

மாதம் ரூ.2 லட்சம்... தஞ்சை ஓவியம் தந்த வாழ்க்கை..! - கைகொடுக்கும் பாரம்பர்ய தொழில்!

பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம்

கலையை நேசித்து காத்தால், அந்தக் கலை நம்மையும் காக்கும். தஞ்சை ஓவியம் என்னை பெரிய இடத்துக்கு உயர்த்தியது!

மாதம் ரூ.2 லட்சம்... தஞ்சை ஓவியம் தந்த வாழ்க்கை..! - கைகொடுக்கும் பாரம்பர்ய தொழில்!

கலையை நேசித்து காத்தால், அந்தக் கலை நம்மையும் காக்கும். தஞ்சை ஓவியம் என்னை பெரிய இடத்துக்கு உயர்த்தியது!

Published:Updated:
பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம்
ஞ்சை மாவட்டம் தலையாட்டி பொம்மை, வீணை, தஞ்சாவூர் தட்டு, தஞ்சை ஓவியம் எனப் பல பெருமைகளைக் கொண்டுள்ளது. கோயில்கள் நிறைந்த கும்பகோணம் காமராஜர் நகரில் தஞ்சையின் சிறப்புகளில் ஒன்றான தஞ்சை ஓவியம் தயார் செய்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறார் பன்னீர்செல்வம். தொடர்ந்து 36 வருடங்களாகத் தஞ்சாவூர் ஓவியத்தை வரைந்து வரும் அவரைச் சந்தித்தோம். தஞ்சை ஓவியம் தந்த வாழ்க்கையை நம்மிடம் நெகிழ்ச்சியுடன் எடுத்துச் சொன்னார்.
மாதம் ரூ.2 லட்சம்... தஞ்சை  ஓவியம் தந்த  வாழ்க்கை..! - கைகொடுக்கும் பாரம்பர்ய தொழில்!

மூன்றாம் வகுப்பு வரை படித்தேன்..!

‘‘என் அப்பா ஒரு நாடகக் கலைஞர். அப்பா, அம்மா ரெண்டு பேருமே எனக்கு 10 வயசு இருக்கும்போதே இறந்துட்டாங்க. கடும் வறுமை காரணமா படிப்பைத் தொடர முடியலை. மூன்றாம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டேன். அதன் பிறகு, விவசாயப் பண்ணை ஒன்றில் வேலை செய்தேன். எங்க அண்ணன் எலெக்ட்ரிகல் கடையில் வேலை பார்த்தார். என் அப்பா, நாடகக் கலையை உசுராக நேசித்ததால என்னை அறியாமலேயே எனக்கு கலைகள் மீது ஆர்வம் வந்துடுச்சு.

தஞ்சாவூர் ஓவியத்தில் அழகும், அதன் நேர்த்தியும் சின்ன வயதிலிருந்தே எனக்குள் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியதால அதை வரைவதற்கு முறைப்படி கற்றுக்கொள்ள நினைத்தேன்.இதற்காக விவசாயப் பண்ணையில் பார்த்த வேலையை விட்டுவிட்டு அண்ணனோட எலெக்ட்ரிகல் கடையில் வேலைக்குச் சேர்ந்ததுடன் அப்படியே ஓய்வு நேரங்களில் வைராக்கியத்துடன் தஞ்சை ஓவியத்தைக் கற்றுகொள்ளத் தொடங்கினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

அதில் தேர்ந்த பிறகு என்னோட 20 வயசுல நானே சொந்தமாக ‘சக்ரபாணி ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ்’ என்ற பெயரில் தஞ்சை ஓவியம் ஒன்றைத் தயார் செய்து விற்பனை செஞ்சேன். கிட்டத்தட்ட 36 வருடங்கல்ல இதைச் செஞ்சுட்டு வர்றேன். மனதுக்கு மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்க்கையும் உயர்கிற வகையில் வருமானம் வந்தது; இப்போதும் வருகிறது’’ என்றவர், தஞ்சை ஓவியம் தயார் செய்வது குறித்து விவரித்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓவியம் வரைவது எப்படி?

ஓவியம் எந்த சைஸ் வேண்டுமோ, அதற்கு ஏற்ற சைஸ் மரப் பலகையில் வெள்ளைக் காடா துணியை நன்றாக ஒட்டிவிட வேண்டும்.சாக்பீஸ் பவுடர், பெவிக்கால் மற்றும் மஞ்சள் நிற காவி பவுடர் ஆகியவர்றை பெயின்ட் மாதிரி கலந்து துணி ஒட்டப்பட்ட பலகையின் மேல் மூன்று கோட்டிங் வரை அடிப்போம்.இது நன்றாக காய்ந்த பிறகு கூலாங்கல்லைக் கொண்டு வழவழப்புத் தன்மை ஏற்படும் வரை அதன்மேல் தேய்ப்போம். பின்னர், வரையப் போகிற படத்தின், ஓவியத்தின் மாதிரியைப் பார்த்து அதன் அவுட்லைன் கொடுத்து அதன் மேல் அலங்கார ஸ்டோன் ஒட்டுவோம். பிறகு, அதன்மேல் தங்க முலாம் பூசப்பட்ட பேப்பரை ஒட்டுவோம். பின்னர் சாக்பீஸ் பெவிக்கால் கலந்த மாவில் ஓவியம் வரைவதுடன் அதைச் சுற்றி பார்டர் கட்டுவோம். அதன்பிறகு தேக்கு மரத்தினாலான கண்ணாடி பிரேம் செய்து விட்டால் தஞ்சை ஓவியம் தயாராகிவிடும்.

மாதம் ரூ.2 லட்சம்... தஞ்சை  ஓவியம் தந்த  வாழ்க்கை..! - கைகொடுக்கும் பாரம்பர்ய தொழில்!

சாமிப் படங்களே அதிகம்..!

தஞ்சை ஓவியத்தில் சாமிப் படங்களே அதிகம் செய்யப்படுகிறது. இயற்கைக் காட்சிகளுடன்கூடிய ஓவியம் தேவைப்பட்டால் ஆர்டரின் பேரில் செய்து தருவோம். லக்ஷ்மி, சரஸ்வதி, ராமர், கிருஷ்ணர், வெண்ணைதாழி கிருஷ்ணர், வெங்கடாஜலபதி என நூற்றுக்கும் மேற்பட்ட தெய்வங்களின் ஓவியங்கள் இதில் வரையப்படுகின்றன. தயார் செய்யப்பட்ட ஓவியங்களை விற்பனை செய்வதற்கு சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற இடங்களில் ஸ்டால் அமைத்திருக்கிறேன்.

வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு..!

வெளிநாடுகளில் தஞ்சை ஓவியத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஸ்டால் அமைத்து கண்காட்சி நடத்தியிருப்பதுடன் விற்பனையும் செய்திருக்கிறேன். ஓவியங்கள் பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு கப்பல் மற்றும் விமானம் மூலம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியர்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளுக்கெல்லாம் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறேன்.

ஒரு போட்டோ வேண்டும் என்றாலும் அதற்கென உள்ள சூட்கேஸில் வைத்து, உடையாமல் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறோம். இஞ்ச் கணக்கில் பத்துக்கு எட்டு தொடங்கி முப்பதுக்கு நாற்பது சைஸ் போட்டோ வரை தயார் செய்கிறோம். ரூ.5,000 தொடங்கி ரூ.25 லட்சம் வரையில் ஓவியங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் என்னிடம் 40 பெண்களுக்கு மேல் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். அனைத்துச் செலவும் போக மாதம் ரூ.2 லட்சம் வரை எனக்கு வருமானம் வருகிறது. பழைமையான தஞ்சை ஓவியத்தில் சில மாற்றங்களைச் செய்து, திறமை மிக்க கலைஞர்களைக் கொண்டு நேர்த்தியாக உருவாக்குவதால், எனக்கென எப்போதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள வி.ஐ.பி வீடுகளில் எங்கள் கைவண்ணத்தில் வரையப்பட்ட சாமிப் படங்கள் நிச்சயம் இருக்கும். கலையை நேசித்து காத்தால், அந்த கலை நம்மையும் காக்கும். தஞ்சை ஓவியம் என்னை வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு உயர்த்தியிருக்கிறது’’ என மகிழ்ச்சி பொங்கக் கும்பிட்டபடி, நமக்கு விடை கொடுத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism