Published:Updated:

ஆண்டு முழுக்க வருமானம் தரும் அட்டைப்பெட்டி தொழில்..!

அட்டைப்பெட்டி தொழில்
பிரீமியம் ஸ்டோரி
News
அட்டைப்பெட்டி தொழில்

தொழில் பழகுவோம் வாங்க! - 3

நாம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பொருள்கள் எதுவாக இருப்பினும், பேக்கிங் செய்யும் முறையை வைத்தே அந்தப் பொருளுக்கான தரமும் மதிப்பும் நிர்ணயிக்கப்படும். எனவேதான், ஒரு பொருளின் உற்பத்திச் செலவில் குறைந்தபட்சம் 5% தொகையை பேக்கிங் தேவைக்குப் பயன் படுத்த வேண்டும் என்கின்றனர் தொழில் துறையினர். நம் நாட்டில் பல ஆண்டுகளாகவே பேக்கிங் தேவையில் கோலோச்சிவரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில் குறித்து இந்த வாரம் வழிகாட்டுகிறார், திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசகரான ராமசாமி தேசாய்.

ஆண்டு முழுக்க வருமானம் தரும் 
அட்டைப்பெட்டி தொழில்..!

தயாரிப்புமுறை எளிமையானதுதான்...

காகித ஆலைகளில் தயாராகும் கிராஃப்ட் பேப்பர்தான் அட்டைப்பெட்டித் தயாரிப்புக் கான முக்கியமான மூலப்பொருள். பேக்கிங் தேவைக்கு ஏற்ப, இந்த கிராஃப்ட் பேப்பரைக் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் ஒன்றின் மீது ஒன்றாக மாற்றி மாற்றி வைத்து (3, 5, 7, 9 அட்டைகள் வரை வைத்து), ஒரு அட்டைக்கும் மற்றோர் அட்டைக்கும் இடையே பசை தடவி, இயந்திரத்தின் உதவியுடன் அவை தடிமனான அட்டையாக மாற்றப்படும். பின்னர், அந்த அட்டையானது சதுரம், செவ்வகம் போன்ற தேவையான வடிவம் மற்றும் அளவுக்கு மாற்றப்படுவதே அட்டைப்பெட்டி தயாரிப்பு முறை. எடை குறைவான பொருள்களை பேக்கிங் செய்ய மெல்லிய அட்டைப்பெட்டி போதுமானது. கனமான பொருள்களை பேக்கிங் செய்ய, பல அடுக்குகள் முறையில் வடிவமைக்கப்பட்ட அதிக எடை உடைய பெட்டிகள் தேவைப்படும். இதுபோன்ற எல்லாத் தேவைக்குமான அட்டைப் பெட்டிகளை ஒரே இயந்திரத்தில் தயாரிக்க முடியும்.

அட்டைப்பெட்டியின் பயன்பாடுகள்...

ஒரு நாட்டில் தயாராகும் உற்பத்திப் பொருள் களுக்கான பேக்கிங் முறையை வைத்துதான், அந்த நாடு தொழில் துறையில் எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை யும், அந்த நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் தரம் குறித்தும் கணக்கிட முடியும். நாம் தயாரிக்கும் பொருள்களின் பாதுகாப்பை 20% அளவுக்கு உறுதி செய்வதிலும் பேக்கிங் பணி முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் பேக்கிங் தேவையில் 85% அளவுக்கு அட்டைப் பெட்டிகளே பயன்படுத்தப்படுகின்றன.

பழங்கள், காய்கறிகள், உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள், எலெக்ட்ரானிக் உபகரணங்கள், ஆடைகள், குளிர்பானங்கள், பால் பொருள்கள் உட்பட பெரும்பாலான பயன்பாட்டுப் பொருள்களையும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்ல அட்டைப்பெட்டிகளே உதவுகின்றன. இவற்றின் எடை மற்றும் விலை குறைவு என்பதுடன், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக இருக்கும் இந்த அட்டைப் பெட்டிகளை எளிதாக மறுசுழற்சி செய்யலாம்.

ஆண்டு முழுக்க வருமானம் தரும் 
அட்டைப்பெட்டி தொழில்..!

ஆலை அமைக்க எந்த இடம் சரியானது..?

அட்டைப்பெட்டி தயாரிப்பு ஆலையால் எந்த விதத்திலும் சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் ஏற்படாது. அதனால், கிராமம் முதல் நகரம் வரை எல்லா இடங்களிலும் இந்த ஆலையை அமைக்கலாம். இந்தத் தொழிலுக்கான மூலப்பொருள் களும் ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும். உற்பத்தி நிறுவனங்கள் அதிகமிருக்கும் பகுதியில் ஆலை அமைத்தால், நமக்கான ஆர்டர் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கலாம். குடியிருப்புப் பகுதி மற்றும் விவசாயப் பகுதிகளைத் தேர்வு செய்யாமல், தொழிற்சாலைகள் அதிகமுள்ள தொழில் வளாகப் பகுதிகளைத் தேர்வு செய்யலாம்.

சென்னை, கோயம்புத்தூர், சிவகாசி போன்ற பகுதிகளில் அட்டைப்பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிக அளவில் அமைந்துள்ளன. இந்தத் தொழிலில் அனுபவம் உள்ளவர்கள் அல்லது மெஷின் சப்ளையர்களிடம் இந்தத் தொழில் குறித்த பயிற்சிளைப் பெறலாம்.

 ராமசாமி தேசாய்
ராமசாமி தேசாய்

ஏற்றுமதியில் கூடுதல் கவனம்...

வாடிக்கையாளர் நிறுவனங் களின் தேவையைப் பொறுத்து, அட்டைப்பெட்டியில் சம்பந்தப் பட்ட நிறுவனத்தின் அடிப்படைத் தகவல்கள், பெயர், லோகோ, பெட்டியினுள் இருக்கும் பொருள் களின் விவரங்களையும் சரியான எழுத்து அளவுகளிலும் (Font Size), படிக்க ஏதுவாகவும் சரியாக பிரின்டிங் செய்து தர வேண்டும். இந்தச் செயல்பாடுகளும், உற்பத்தி நிறுவனங்களின் மதிப்பை உயர்த்த உதவும். தேவையைப் பொறுத்து எந்த அளவுகளிலும் வடிவங் களிலும் அட்டைப்பெட்டியைத் தயாரித்து விற்பனை செய்யலாம். ஆனால், விமான மார்க்கமாக பொருளை ஏற்றுமதி செய்யும் தேவைக்கு அட்டைப்பெட்டியைப் பயன்படுத்தும்பட்சத்தில், ஐ.எஸ்.ஐ உட்பட முக்கிய சான்றிதழ்களின் வரையறைக்கு உட்பட்டு துல்லியமான அளவு களில் அட்டைப்பெட்டியைத் தயாரித்து அனுப்புவது முக்கியம்.

ஆண்டு முழுக்க வருமானம் தரும் 
அட்டைப்பெட்டி தொழில்..!

வங்கிக் கடனுதவி...

திட்ட மதிப்பீட்டில் ரூ.4.5 லட்சம் (முதலீட்டுத் தொகையில் 5% தொகை) நம் கையிலிருந்து செலவிடும்பட்சத்தில், மீத மிருக்கும் ரூ.85.5 லட்சத்தை வங்கிக் கடனாகப் பெறலாம். அதில், ‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ் மானியமாக ரூ.19.75 லட்சம் கிடைக்கும். மீதமுள்ள ரூ.65.75 லட்சத்துக்கு மட்டுமே மாதம் தோறும் வட்டி மற்றும் அசலுக் கான மாதாந்தரத் தவணையையும் கட்ட வேண்டும்.

மாதாந்தர செலவினம்...

அட்டைப்பெட்டியை ஒரு கிலோவுக்குச் சராசரியாக 65 ரூபாய் வீதம் விற்பனை செய்யலாம். தினமும் ஒரு ஷிஃப்ட் வீதம், வருடத்தில் 300 நாள்களுக்குக் குறையாமல் ஆலையை இயக்கும்பட்சத்தில், ஒரு மாதத்துக்கு 60 டன் உற்பத்தி செய்யலாம். அந்த வகையில் மாதம்தோறும் ரூ.39 லட்சம் வருமானம் (60,000 X 65 ) ஈட்டலாம் என்பது முக்கியமான விஷயம்!

(தொழில் பழகுவோம்)

ஶ்ரீபால்
ஶ்ரீபால்

"50 டன் அளவுக்கு உற்பத்தி செய்கிறோம்..!’’

திருச்சியைச் சேர்ந்த ‘மது பேக்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரான ஶ்ரீபால், அட்டைப்பெட்டி தொழிலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். அவருடன் பேசினோம். “40 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா இந்தத் தொழிலைத் தொடங்கிய நிலையில், தற்போது அவருடன் நானும் என் சகோதரரும் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். என் அப்பா காலத்தில் மாதத்துக்கு 10 டன் அளவில் உற்பத்தி நடைபெற்ற நிலையில், இப்போது 50 டன் அளவுக்கு உற்பத்தியை அதிகப்படுத்தியிருக்கிறோம். உணவகத் தொழில், இன்ஜினீயரிங் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் அட்டைப்பெட்டிகளை சப்ளை செய்கிறோம். இந்தத் தொழிலில் புதுப்புது வாடிக்கையாளர்களைப் பிடிப்பதுடன், பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் மார்க்கெட்டிங்தான் சவாலானது. பணியாளர்களின் ஒத்துழைப்பு சரியாக இருந்தால், தடையின்றி உற்பத்தியை நடத்தி, கூடுதலான வருமானம் ஈட்டலாம்” என்கிறார் நம்பிக்கையுடன்.