Published:Updated:

பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோக்கிறதா பதஞ்சலி?

``இந்தியச் சந்தையிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை இன்னும் ஐந்தாண்டுகளில் பதஞ்சலி வெளியேற்றும்" என்று சில ஆண்டுகளுக்கு முன் பாபா ராம்தேவ் சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ் ( vikatan )

பதஞ்சலி நிறுவனம், சுதேசி நிறுவனம் என்ற எண்ணம் நுகர்வோர் மனதில் உருவாகியுள்ளது. இந்த நிறுவனம், தற்போது பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோக்க உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பதஞ்சலி பாபா ராம்தேவ்
பதஞ்சலி பாபா ராம்தேவ்
vikatan

நிறுவனம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்துக்குள்ளாகவே, பதஞ்சலி நிறுவனத்தின் ஆண்டு விற்பனை ரூ.10,000 கோடிக்கு மேல் உயர்ந்தது. உணவு, அழகுசாதனப் பொருள்கள், சமையல் பொருள்களென இந்தியச் சந்தையில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளது இந்த நிறுவனம். "இந்தியச் சந்தையிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை இன்னும் ஐந்தாண்டுகளில் பதஞ்சலி வெளியேற்றும்" என்று சில ஆண்டுகளுக்கு முன் பாபா ராம்தேவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு சில பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வத்தோடு இருப்பதாகக் கூறப்படுகிறது. 'தங்கள் நிறுவனத்தின் மதிப்புக்கு முரண்படாத நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதில் தங்களுக்குத் தயக்கமில்லை' என்றும், 'பன்னாட்டு நிறுவனங்கள் என்பதாலேயே அவற்றை ஒதுக்கத் தேவையில்லை'யென்றும் அந்த நிறுவனத்தின் சார்பாகத் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த நிறுவனங்கள் இணைந்து செயல்படவுள்ளன என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

பதஞ்சலி பாபா ராம்தேவ்
பதஞ்சலி பாபா ராம்தேவ்
vikatan

பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோத்தால், நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை மேலும் அதிகரிக்கக்கூடும். ஆனால், அப்படிக் கைகோக்கும்பட்சத்தில், சுதேசி நிறுவனம் என்ற அடையாளத்தை பதஞ்சலி இழக்க நேரிடும்.