Published:Updated:

‘‘பொறுமை + நீண்டகால முதலீடுதான் செல்வத்தை உருவாக்க ஒரே வழி..!’’

வாசுதேவ் குப்தா
பிரீமியம் ஸ்டோரி
வாசுதேவ் குப்தா

பிசினஸ்

‘‘பொறுமை + நீண்டகால முதலீடுதான் செல்வத்தை உருவாக்க ஒரே வழி..!’’

பிசினஸ்

Published:Updated:
வாசுதேவ் குப்தா
பிரீமியம் ஸ்டோரி
வாசுதேவ் குப்தா

பெயர்: வாசுதேவ் குப்தா

பிறந்து வளர்ந்தது: மதுரை

அப்பா: டெக்ஸ்டைல் தொழிலதிபர்

படித்தது: லண்டனில் எம்.பி.ஏ

தற்போது செய்வது: போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (PMS)


இதுதான் வாசுதேவ் குப்தாவின் பயோ டேட்டா. சில ஆண்டுகளுக்கு முன் புராஸ்பரிட்டி வெல்த் மேனேஜ்மென்டைத் தொடங்கி, கொரோனா காலத்தில் மிக வேகமான வளர்ச்சி கண்டவர். சென்னை தி.நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். எடுத்த எடுப்பிலேயே பி.எம்.எஸ் நிறுவனத்தைத் தொடங்காமல், ஒரு விநியோகஸ்தராகத் தனது பிசினஸைத் தொடங்கியவர் வாசுதேவ்.

‘‘2017-ல் ஆரம்பித்தபோது மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றின் விநியோக நிறுவன மாகத்தான் தொடங்கினோம். எங்களுடைய பிரதான கவனத்தை கார்ப்பரேட் மற்றும் அதிக வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர் களுக்கு சேவை செய்வதில் செலுத்தினோம்.

வாடிக்கையாளர்களின் ரிஸ்க் புரொஃபைலைப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் கார்ப்பரேட் டெபாசிட்டுகள், அரசுப் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவற்றைப் பரிந்துரைத்து வந்தோம்.

இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எங்களுக்கு சவாலான விஷயமாக இல்லை. தவிர, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் முதலீடுகளை மேற் கொள்ளாமல் தவறவிடும் சூழ்நிலை இருப்பதை யும் உணர்ந்தோம். இதை அடுத்தே சொந்தமாக ஃபண்டை நிர்வகிக்க முடிவு செய்தோம். செபியில் பதிவு செய்யப்பட்ட பி.எம்.எஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம்.

தவிர, நாங்கள் முதலில் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றை விநியோகித்து வந்தபோது எங்கள் வாடிக்கையாளர்களாக இருந்த சிலர் எங்களை சொந்தமாக ஃபண்ட் தொடங்க ஊக்குவித்தனர். அவ்வாறு தொடங்கிய பிறகு, அவர்கள் அதிலும் முதலீடு செய்து எங்கள் பி.எம்.எஸ்ஸின் முதலீட்டாளர்களாகவும் ஆனார்கள்’’ என்றார் வாசுதேவ்.

வாசுதேவ் குப்தா
வாசுதேவ் குப்தா

உங்களுடைய போர்ட்ஃபோலியோ ஸ்ட்ராட்டஜி என்ன, பங்குகளைத் தேர்வு செய்யும்போது நீங்கள் கவனத்தில் கொள்ளும் அம்சங்கள் என்னென்ன?

‘‘முதலில் நிறுவனங்களின் ஃபண்டமென்டல் விஷயங் களை முழுமையாகப் பகுப்பாய்வு செய்கிறோம். மேலும், எங்கள் போர்ட்ஃபோலியோவானது பல்வேறு துறைகள் மற்றும் சந்தை மதிப்புகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய ஃபண்டின் நோக்கம், முதலீட்டாளர்களுக்கு அதிக ரிஸ்க்கைச் சமாளித்து நல்ல வருமானம் ஈட்டித் தருவதாகும்.

எங்கள் போர்ட்ஃபோலியோவில் 15 - 20 பங்குகள் இருக்கும். எந்தவொரு பங்கிலும் 10 சதவிகிதத்துக்குமேல் இல்லை, அதேபோல், போர்ட்ஃபோலியோவில் எந்தவொரு துறையின் பங்களிப்பும் 15 சதவிகிதத்துக்கு மேல் இல்லை. நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையும், நிலையான வளர்ச்சித் திட்டமும் கொண்ட, நெறிமுறையும் நம்பகத் தன்மையும் உள்ள நிர்வாகக் குழுவின் கீழ் இயங்கும் நிறுவனங்களில்தான் நாங்கள் முதலீடு செய்கிறோம்.

அதிக கடன் உள்ள நிறுவனங்களையும், தொழில்நுட்பம் சார்ந்து நீடிக்கும்தன்மை இல்லாமல் எளிதில் சீர்குலையும் அபாயத்தில் உள்ள நிறுவனங்களையும் நாங்கள் தவிர்க் கிறோம். நாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் சந்தையின் போட்டியைச் சமாளிக்கும் வலுவான திறனுடன் உள்ளன. மேலும், நிலையான லாப வளர்ச்சியையும் கொண்டுள்ளன.

ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்முன் அதன் நிர்வாகம், வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த டொமைன் வல்லுநர்கள் ஆகியோருடனும் பேசி ஆய்வு செய்கிறோம். சுருக்கமாக, ஊகத்தின் அடிப்படையில் இல்லாமல், ஆழமான ஆராய்ச்சி அடிப்படையில்தான் எங்களுடைய முதலீட்டு உத்தியைப் பின்பற்றுகிறோம்.’’

பங்குச் சந்தையில் நுழையவும் வெளியேறவும் சரியான தருணம் எது?

‘‘நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சந்தையில் நுழைவதற்குச் சரியான அல்லது தவறான நேரம் என்று எதுவும் இல்லை. ‘சந்தையில் சரியான நேரம் என்பதைக் காட்டிலும், சந்தையில் எவ்வளவு காலம் என்பதுதான் மிக முக்கியமானது’ என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஒரு பங்கு அதிகமாக மதிப்பிடப்படும்போது அல்லது முதலீட்டுக்கு ஊக்குவிக்கும் அடிப்படைக் காரணியில் மாற்றங்கள் உண்டாகும்போது அந்தப் பங்கிலிருந்து வெளியேற வேண்டும்.

அதேபோல், நிர்வாகம் சந்தேகத்துக்குரிய நடத்தையில் ஈடுபட்டால் அல்லது சிறுபான்மை பங்குதாரர்களிடம் மோசமான நெறிமுறைகளைக் கையாண்டால், அந்தப் பங்கு களை விட்டு வெளியேற வேண்டும்.

நீண்ட காலத்துக்கு சந்தை களைச் சரியாகக் கணக்கிடுவது சாத்தியமில்லை என்றாலும், பெரும் கொந்தளிப்புக் காலங் களுக்குப் பிறகும் முதலீட்டாளர் கள் நல்ல வருமானம் பார்க்க முடிந்திருக்கிறது என்பதும் உண்மை. சந்தை இறக்கங்கள் சந்தையின் ஒட்டுமொத்த மதிப்பீட்டைக் குறைக்கின்றன. அந்த சமயங்களில் திறமையான முதலீட்டாளர்கள் சிறந்த பங்குகளைக் கண்டுபிடித்து தள்ளுபடி விலையில் வாங்கி முதலீடு செய்கிறார்கள். வெற்றி கரமான முதலீட்டாளர்கள் நீண்ட காலத்துக்கு சந்தைகளில் முதலீடு செய்வதுடன், சந்தை இறக்கங்களின்போது முதலீடு களைச் செய்து தங்களுடைய கார்பஸை அதிகரிக்கிறார்கள்.’’

 ‘‘பொறுமை + நீண்டகால முதலீடுதான்  செல்வத்தை உருவாக்க ஒரே வழி..!’’

செல்வத்தைப் பெருக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

‘‘ஒரு நல்ல முதலீட்டாளர் எப்போதும் நீண்ட கால முதலீட்டுக் கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில், கூட்டு வருமானத்தின் செயல்திறன் காலப்போக்கில் தான் அதிகரிக்கிறது. ஒருவர் நிறுவனத்தின் பங்கு விலையில் கவனம் செலுத்தும் முன், அதன் அடிப்படை சொத்து மதிப்பை மதிப்பிட்டுப் புரிந்துகொள்ள வேண்டும். பங்கு விலையானது நிறுவன வருவாயுடன் ஒப்பிடுகை யில் அதிலிருந்து பின்தங்கியதாக இருக்கலாம். அதாவது, குறுகிய காலத்தில் அது ஏற்ற இறக்கமாக இருக்கலாம்; ஆனால், நீண்ட காலத்தில் அந்த நிறுவனத்தின் சொத்து ஈட்டும் வருவாய்த் திறன் அடிப்படையில் பங்கு விலையும் தொடர்ந்து வளர்ச்சி அடையும்.

முதலீட்டாளர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சொத்து ஒதுக்கீடும், முதலீட் டைப் பரவலாக்குவதும்தான். உங்களுடைய முதலீடுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், அவை குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே குவிந்திருந்தால் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஏனெனில், அனைத்துத் துறைகளுமே மேக்ரோ மற்றும் மைக்ரோ பொருளாதார மாற்றங் களால் பாதிக்கப்படும் தன்மை உடையவைதான்.

சந்தைகளில் முதலீடு செய்யும் முன், ஒருவர் தனது ரிஸ்க் எடுக்கும் திறனைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஒரு நல்ல முதலீட்டாளருக்கு மிக முக்கியமானது, பொறுமை. சந்தை சென்டிமென்ட், நண்பர்கள், நிபுணர்கள் பார்வை போன்ற பல்வேறு வெளிப்புற அழுத்தங்களைச் சமாளிக்கும் திறன் இருக்க வேண்டும்.

பங்கு பற்றிய அடிப்படை அறிவு, உறுதியான நம்பிக்கை யுடன், பொறுமையாக நீண்ட காலத்துக்கு முதலீடு செய்வதே செல்வத்தை உருவாக்கும் ஒரே வழி ஆகும்.’’

நல்ல ஃபண்டைத் தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன?

‘‘முதலீட்டாளரின் முதலீட்டு இலக்கு மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதலீடு களைத் திட்டமிடுவது முக்கியம். குறுகிய காலத்துக்கு முதலீடு செய்ய விரும்பும் பழைமைவாத அல்லது ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு பங்கு சார்ந்த முதலீடுகள் சரியான தேர்வாக இருக்காது. ஃபண்டின் வகையைப் புரிந்துகொள்ள அதன் முதலீட்டு இருப்புகளை விரிவாகப் படிக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டுகளைப் பெரும்பாலும் ஈக்விட்டி சார்ந்தவை, கடன் சார்ந்தவை அல்லது இரண்டும் கலந்த ஹைபிரிட் வகை எனப் பிரிக்கலாம். அதன் பிறகு, பெரிய நிறுவனங்களா அல்லது சிறிய நிறுவனங்களா என்று பார்க்க வேண்டும். லார்ஜ்கேப் ஃபண்டுகள் சந்தை ஏற்ற இறக்கத்தால் பெரிதாகப் பாதிப்புக்குள்ளாகாது. ஆனால், நீண்ட காலத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகளைவிட குறைவாகவே வருமானம் தரும்.

மேலும், ஒரு ஃபண்டைத் தேர்வு செய்யும்முன் அந்த ஃபண்டின் செலவு விகிதம், ஃபண்டிலிருந்து முதலீட் டாளர்கள் வெளியேறும் விகிதம், பங்கு இருப்புகளின் செறிவு, ஃபண்ட் தந்துள்ள ரிட்டர்ன் விவரங்கள், ஃபண்ட் மேனேஜரின் வரலாறு, அதன் முதலீட்டுக் கொள்கை உள்ளிட்ட காரணிகளையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism