கொரோனாவுக்குப் பிறகு, உலக அளவில் உற்பத்தித் துறையில் பெரும் பெயரோடு விளங்கிய சீனா இப்போது, அந்தப் பெருமையை இழக்கத் தொடங்கியிருக்கிறது. வியட்நாம், பங்களாதேஷ் போன்ற வளரும் நாடுகளுக்கு பெரும் பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கித் தந்துள்ளது. இந்தியாவும் கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்விதமாக, உள்நாட்டுத் தொழில்துறைக்கு ஏராளமான சலுகைகளை வழங்கிவருவதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் மத்திய அமைச்சகம் இரண்டு முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் (Production Linked Incentive Scheme) ஒரு பகுதியான இந்தப் புதிய அறிவிப்பின் முக்கிய விஷயங்கள் என்னென்ன?

தொலைத்தொடர்பு சாதன உற்பத்தி

சீனாவைத் தவிர்த்து பிற நாடு களிலும் உற்பத்திச் சாலைகளை அமைக்க விரும்புகிற பன்னாட்டு மற்றும் இந்தியப் பெரு நிறுவனங் களைக் கவரும் வகையில் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணிப்பொருள் களை உற்பத்தி செய்வதற்கான ஊக்கத் தொகைத் திட்டத்தை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

2019-20-ம் ஆண்டை அடிப்படை யாகக் கொண்டு செயல்படவுள்ள இந்தப் புதிய திட்டத்தின்கீழ் உள்நாட்டில் அதிகப்படியாக உற்பத்தி செய்யும் தகவல் தொழில் நுட்பச் சாதனங்களுக்கு 1% - 4% வரை ஊக்கத்தொகையை நான்கு ஆண்டு களுக்கு வழங்கப்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் மின்னணுப் பொருள்கள் அதிகம் இறக்குமதி ஆவதைக் குறைக்கவும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் இந்தத் திட்டம் பெருமளவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-20-ம் ஆண்டில் மட்டும் இந்தியா வுக்கான லேப்டாப் மற்றும் டேப்லெட் இறக்குமதியின் அளவு 4.62 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய மத்திய அரசின் புதிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ், அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.7,350 கோடி அரசுக்கு செலவு ஏற்படும் என்றும் 1,80,000 புதிய நேரடி / மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2,45,000 கோடி அளவுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருந்துப் பொருள்கள் உற்பத்தி...

உலகின் மருந்து ஏற்றுமதித் துறையில் இந்தியா ஏற்கெனவே ஒரு முக்கியமான பங்கு வகித்துவருகிறது. கொரோனா தடுப்பு மருந்தை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததன் மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. தற்போது உயர்ரக மருந்துப் பொருள்களின் உற்பத்தியை அதிகப் படுத்தவும், மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டு (2020-21) முதல் 2028-29-ம் நிதியாண்டு வரை நடைமுறைப் படுத்தப்படவுள்ள இந்தப் புதிய திட்டத்தால், அரசுக்கு ரூ.15,000 கோடி வரை அதிக செலவாகும்; 1,00,000 பேருக்கு நேரடி/மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும். 3% - 10% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக, மருத்துவக் கருவிகளின் உற்பத்தி அதிகரிப்பதுடன் உயிர் காக்கும் மருந்து உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறவும் முடியும்.

தமிழ்நாட்டுக்கான நம்பிக்கை...

ஜவுளித் துறை, உணவு பதப்படுத்துதல், சூரிய ஒளி மின் உற்பத்திபோன்ற மேலும் பல துறைகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப் படவுள்ளது. ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளா தாரம் என்ற இலக்கை விரைவில் எட்ட வேண்டு மெனில், உள்நாட்டு உற்பத்தி (GDP) இரட்டை இலக்க வளர்ச்சியைக் காண வேண்டும். அதற்கு உற்பத்தித் துறையில் நாம் அபரிமிதமான வளர்ச்சி அடை வதுடன் உலகின் ஏற்றுமதி கேந்திர மாகவும் மாற இந்தத் திட்டம் மிகவும் உதவி புரிவதாக இருக்கும்!