Published:Updated:

Bolt: இந்தியாவிலிருந்து மற்றொரு CEO; யார் இந்த மஜூ குருவில்லா?

மஜூ குருவில்லா ( Bolt.com )

ஏறத்தாழ எட்டு வருடங்கள் அமேசானில் வேலை பார்த்துவிட்டு, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் போல்ட் நிறுவனத்திற்கு வந்தார். போல்ட் நிறுவனத்தில் பணிக்குச் சேரும்போதே அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகத்தான் நுழைந்தார் குருவில்லா.

Bolt: இந்தியாவிலிருந்து மற்றொரு CEO; யார் இந்த மஜூ குருவில்லா?

ஏறத்தாழ எட்டு வருடங்கள் அமேசானில் வேலை பார்த்துவிட்டு, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் போல்ட் நிறுவனத்திற்கு வந்தார். போல்ட் நிறுவனத்தில் பணிக்குச் சேரும்போதே அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகத்தான் நுழைந்தார் குருவில்லா.

Published:Updated:
மஜூ குருவில்லா ( Bolt.com )

இப்போது பிரபலமாகிவரும் ஒரு முக்கியமான துறை ஃபின்டெக். அமெரிக்காவில் இருக்கும் பிரபல ஃ பின்டெக் நிறுவனம்தான் போல்ட். ஒரு சாதாரண ஸ்டார்ட் அப்-ஆக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

நேற்று இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஜூ குருவில்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

மஜூ குருவில்லா
மஜூ குருவில்லா

தற்போது அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் வசித்துவரும் இவருடைய பூர்வீகம் இந்தியாவில் இருக்கும் நம் அண்டை மாநிலமான கர்நாடகாதான்.

கர்நாடகாவில் இருக்கும் மங்களூரு பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் படிப்பைப் பயின்றார் மஜூ குருவில்லா. பின், பட்ட மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இவர், அங்கிருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறகு, அமேசான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இவர், அதன் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே படிப்படியாக அந்நிறுவனத்தில் உயர்ந்து மிக உயரிய பொறுப்புகளுக்குச் சென்றார் குருவில்லா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏறத்தாழ எட்டு வருடங்கள் அமேசானில் வேலை பார்த்துவிட்டு, கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் போல்ட் நிறுவனத்திற்கு வந்தார். போல்ட் நிறுவனத்தில் பணிக்குச் சேரும்போதே அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாகத்தான் நுழைந்தார் குருவில்லா. சேர்ந்த ஒரே வருடத்தில் இப்போது அதன் தலைமைச் செயல் அதிகாரியாகிவிட்டார்.

போல்ட் நிறுவனத்தின் நிறுவனரான ரையன் ப்ரெஸ்லோ, குருவில்லாவின் புது பணியைப் பற்றி சொல்லும்போது, ``உலகத் தரம் வாய்ந்த குழுக்களை அமைத்து செயலாற்றுவதில் திறமை வாய்ந்தவர் குருவில்லா.

மஜூ குருவில்லா
மஜூ குருவில்லா
Bolt.com

இப்போது தலைமைச் செயல் அதிகாரியாக ஆகியிருக்கும் குருவில்லாவின் திறமைகளைப் பார்ப்பதற்கு இனிமேலும் எங்களால் காத்திருக்க முடியாது" என்று மஜூ குருவில்லாவின் சி.இ.ஓ நியமனத்தை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பல சி.இ.ஓ க்களின் பட்டியலில் இப்போது மஜூ குருவில்லாவும் இணைந்திருப்பது பெருமைக்குரியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism