`புராஜெக்ட் டுடே' நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் ரூ.35,000 கோடியை தொழில் மூலதனமாக கொண்டு 304 திட்டங்களின் மூலம் ரூ. 1,43,902 கோடி முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது.
இந்நிலையில், உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ஸ்விட்சர்லாந்து நாட்டில் டாவோஸ் நகரில் நடைபெற்றது. `டாவோஸ் செயல் திட்ட மாநாடு' என்ற இந்த மாநாட்டை காணொளி வாயிலாக ஐந்து நாட்கள் நடத்த உலக பொருளாதார அமைப்பு திட்டமிட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசிய காணொளியில் இந்தியாவை சிறந்த முதலீட்டு தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் எனவும் கூறியுள்ளார். இந்திய இளைஞர்கள் மத்தியில் தொழில் புரிவதற்கான ஆர்வம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
நடப்பு 2021-2022 நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் ரூ.1,40,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை பெற்று சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் சுமார் ரூ.77,000 கோடியும், மூன்றாவது இடத்தில தெலுங்கானா மாநிலம் கிட்டதட்ட ரூ. 65,200 கோடிக்கு அதிகமான தொழில் மூலதனத்துடனும் உள்ளன என `புராஜெக்ட் டுடே' நிறுவன ஆய்வு கூறியுள்ளது.

நிறுவனங்களின் பிரச்னைகளைக் கேட்டு, உடனடியாக தீர்த்து வைப்பதும், முடிவுகளை விரைவாக எடுப்பதும் , தமிழ்நாட்டின் இந்த தொழில் முதலீட்டு வளர்ச்சிக்கு காரணம் என நிறுவனங்கள் கூறியதாக இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோய் தொற்று காலத்திலும் தமிழகம், தொழில் செய்வதற்கான திறமையை வலிமை படுத்தி கொண்டதாக தொழில் குழுமங்களின் கூட்டமைப்பைச் சார்ந்தவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.