பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கைகோக்கும் பி.வி.ஆர் - ஐநாக்ஸ்... திரைத்துறையின் மாபெரும் இணைப்பு..!

பி.வி.ஆர் - ஐநாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.வி.ஆர் - ஐநாக்ஸ்

இணைப்பு

கொரோனா காலத்தில் மிக மிக பாதிக்கப்பட்டது திரைய ரங்குகள். பல மாதங்களுக்கு திரையரங்கள் மூடப்பட்டே கிடந்தன. பிற்பாடு 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டதால், பலர் ஓ.டி.டி-யில் படம் பார்க்க ஆரம்பித்தார்கள். இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் நன்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர்.

இத்தகைய நிலையில், இரண்டு பெரிய மல்ட்டிபிளெக்ஸ் நிறுவனங் கள் இணையும் முடிவுக்கு வந்துள்ளன. பி.வி.ஆர் சினிமாஸ் மற்றும் ஐநாக்ஸ் லெய்சர் நிறுவனங்கள் இணையும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

கைகோக்கும் பி.வி.ஆர் - ஐநாக்ஸ்... திரைத்துறையின் மாபெரும் இணைப்பு..!

தற்போது மல்ட்டிபிளெக்ஸ் நிறுவ னங்களில் முன்னணியில் உள்ளது பி.வி.ஆர் சினிமாஸ். நாட்டின் மிக முக்கிய நகரங்களில், முக்கியமான இடங்களில் இந்த நிறுவனத்தின் திரை யரங்குகள் உள்ளன. ஐநாக்ஸ் நிறுவன மும் குறிப்பிடத்தக்க எண்ணிக் கையில் மல்ட்டிபிளெக்ஸ்களை நாடு முழுக்க வைத்திருந்தாலும் தொழில் ரீதியாக பி.வி.ஆரைக்காட்டிலும் பின்தங்கியே இருந்துவருகிறது. 2021 நிதி ஆண்டில் பி.வி.ஆரின் வருவாய் ரூ.280 கோடி. ஆனால், ஐநாக்ஸ் வருவாய் ரூ.106 கோடி மட்டுமே. இதை அடுத்து ஐநாக்ஸ் லெய்ஷர், பி.வி.ஆர் சினிமாஸுடன் இணைய முடிவெடுத்துள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து நாட்டின் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் வருவாயில் 40 சதவிகிதத் துக்குப் பங்கு வகிக்கின்றன.

இந்த இணைப்பின் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்க நிறுவனமாக பி.வி.ஆர் ஐநாக்ஸ் லிமிடெட் மாறும். இணைப்புக்குப் பிறகு மொத்தம் 341 சொத்துகள், 1,546 திரையரங்கங்கள் என மிக வலிமையாக உருவெடுக்கும். மேலும், உடனடிப் பலனாக இந்த நிறுவனத்தின் விளம்பர வருவாய் மற்றும் கன்வினியன்ஸ் கட்டணம் போன்றவற்றின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த இரு பங்குகளின் விலை கொஞ்சம் அதிகரித்திருக்கிறது!